நட்சத்திரக்கோட்டை

06

களச்சாவு அல்லது வீரச்சாவு (Killed in Action) என்பது மரணமடைந்த படைத்துறையினரை இனங்காண இராணுவங்கள் பயன்படுத்தும் வகைப்பாடுகளுள் ஒன்று. பொதுவாக எதிர் தரப்பு படைகளுடன் ஏற்பட்ட மோதலில் இறந்தவர்கள் இந்த வகைப்பாட்டின் கீழ் வருகிறார்கள். முன்னணி படைகள், கப்பற்படை, வான்படை, துணைப்படைகள் என அனைத்து வகைப் பிரிவுகளிலும் சண்டைகளில் மரணமடைந்தவர்கள் இப்படி வகைப்படுத்தப்படுகிறார்கள். ஆனால் போர்முனையில் விபத்துகளில் இறப்பவர்கள் இவ்வகையில் சேர்க்கப்படுவதில்லை. அதே போல போர்க்களத்தில் காயமடைந்து பின் மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பவர்களும் இவ்வகையில் சேர்க்கப்படுவதில்லை. அவர்கள் காயச்சாவு (died of wounds) என்ற வகைப்பாட்டில் சேர்க்கப்படுகிறார்கள். களச்சாவு அடைபவர்களை சமூகங்கள் பல வகைகளில் போற்றுகின்றன. பழந்தமிழ் நாட்டில் இவர்களை நடுகல் நாட்டியும் பள்ளிப்படைக் கோவில்கள் கட்டியும் வழிபட்டதுண்டு. தற்காலத்தில் களத்தில் இறந்தவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் அமைக்கப்படுகின்றன. அவர்களது கல்லறைகள் சிறப்பாகப் பராமரிக்கப்படுகின்றன.

-அஸ்ஸலாமு அலைக்கும் சர்தார்

– அலைக்கும் சலாம்!என்ன நடந்தது ஒற்றனே! அறிந்ததை  விவரமாய்ச் சொல்

-உத்தரவு ஸர்தார் !அதாவது இன்றைக்கு 1799 ஆம் நாள் மே 4-ஆம் தேதி படைவீரர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என  மேன்மை தங்கிய தங்களின் அதிகாரி மீர் சதக் திடீரென அறிவித்தார். நமது வீரர்கள் எவ்வித கேள்விகளும் இன்றி சம்பளம் பெற முண்டியடித்துக் கொண்டு வந்தனர்….

 

-ஆ… என்ன ஒரு நரித்தனம்

-ஆம் சுல்தான்! நமது வீரர்கள் காவல் பணியை கைவிட்ட நேரம் பார்த்து பரங்கிப்படை உள்ளே வர ஏதுவாக கோட்டைக் கதவைத் திறக்க உத்தரவு.. ஏற்பாடு..படைக்கலன்கள் வைத்திருக்கும் இடங்கள் பரங்கியர்ய்க்கு காட்டிக்கொடுக்கப்பட்டன

-சதிகாரர்களுடனா இத்தனை நாள் சகவாசம் வைத்திருந்தேன்!பார்த்தாயா சிந்து..பற்றி எரிகிறது..மனசு..!

-பொறுங்கள் சுல்தான்..பதட்டம் வேண்டாம்

-ஸர்தார் இந்த செய்திக்காக மன்னிக்க வேண்டும். இந்த திட்டத்துக்குள் பூர்ணய்யா…மீர் சாதிக், மீர் சாதக் ,மீர் குலாம் அலி என மேட்டிமைக்காரர்கள் அனைவரும் அடக்கம்

-ஒரு தேசத்தைத் திட்டமிட்டு ஆயுத பலத்தினாலும் பொருளாதார நெருக்கடியாலும் அடக்குமுறைக்கு உள்ளாக்கி அந்த தேச மக்களைத் தங்களிடம் சரணடையச் செய்து அம்மக்களின் இலட்சிய மூச்சினை அடக்குகின்ற செயற்பாட்டில் முழுமையாக இறங்கிச் செயற்படும் எதேச்சதிகார அரசிடமிருந்து அடக்கப்படுகின்ற மக்களுக்கு நிவாரணத்தையும், புனர் வாழ்வினையும் அல்லது இரக்கத்தையோ பரிவையோ எதிர்பார்க்கவியலாது என்பதே வரலாறு… இது எம் தேசப் பிரஜைகளுக்கும் பொருந்தும்.

திப்புவுக்கு எதிரான முதல் மூன்று போர்களில் ஆங்கியேரின் துப்பாக்கி சாதிக்காததை நான்காவது போரில் அவர்களின் பொன்னும் பொருளும் சாதித்தது. திப்புவின் அமைச்சர்கள் அவருக்கு துரோகம் இழைத்தனர்.

அரசியல் கோட்பாடுகளிலும் தார்மீக கொள்கைகளிலும் யுத்த தந்திரங்களிலும் கூட வித விதமான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன!

அரசியல் இலட்சியங்களை அடைவதற்காக நடத்தப்படும் நம் உரிமைப் போராட்டங்களை எல்லாம் எதேச்சதிகார அரசுகள், நம் விடுதலையை, தற்சார்பை ஏற்காத எதிரிகள் ‘பயங்கரவாதம்’ என்ற முத்திரையைக் குத்தி நம்மை முடக்க எத்தனிக்கலாம்!
அடிப்படை அரசியல் சுதந்திரம் சுயநிர்ணய உரிமைக்காகவும் ரத்தம் சிந்திப் போராடும் நம் போன்ற அரசுகளின் தார்மீக அடிப்படைகளுக்கு இந்தக் காலம் சவாலான காலமாக இருக்கிறது என்பதையும் மறுக்கவோ மறக்கவோ இயலாது.
நமதிந்த போர் ஒரு தீர்க்கமான நியாயப்பூர்வமான விடுதலை அரசியலைக் குறிக்கோளாக கொண்டது; ஏனென்றால் நாம் யுத்தத்தை நோக்கி போகவில்லை; மாறாக இந்தத் துயரம் நம்மீது திணிக்கப்பட்டது !
அறிவேன் நான்! யுத்தத்தினால் எந்தப் பயனும் இல்லை! சமாதான சகவாழ்வு ஒன்றே அல்லாஹ் என்கிற இறை தூதர் காட்டும் வழி.
ஆனால்… நமது அரசர் ஹைதர் அலி காலத்தில் இருந்து நிகழ்வதென்ன! போர்… போர் எத்தனை யுத்தங்கள்.! ‘

-யாரங்கே கோட்டையின் கதவுகளை இழுத்து சார்த்துங்கள்” திப்புவின் கட்டளைக்குரல் கம்பீரமாய் ஒலித்தது.

-வேறொரு அறையிலிருந்து மந்திரி பூர்ணய்யா உள் நுழைந்தார்.

-பூர்ணய்யா தாங்கள் உடனடியாக இங்கிருந்து புறப்படுங்கள்…கோட்டையின் .மேற்குப்பகுதிக்கு படைகளை செலுத்துங்கள்

-இந்த நேரத்தில் தங்களை எப்படி தனியே விட்டுவிட்டு…

-இது வேண்டுதல் அல்ல… இதுவே என் கட்டளை”.

-பூர்ணய்யா… இரண்டு கரங்களையும் சேர்த்துத் தட்டினார்.

சட்டென்று அறைக்குள்… நுழைய முற்பட்டனர் பரங்கி வீரர்கள்

-பூர்ணய்யா… நீங்களா…நீங்களுமா.. இதுவரை உங்கலை நம்பியிருந்தெனே…துளிக்கூட சந்தேகம் எழாவண்னம் முதுகில் குத்துகிறீர்களே…சட்டென கையில் இருந்த துப்பாக்கியை உபயோகிக்க  பூர்ணய்யா வுடன்  உள்நுழைந்த படை  பயத்தில் வெளியேறி ஓடி ஒளிந்தது.

கட்டளைக்குக் கட்டுப்பட்டவர்கள் காசுக்கும் பொருளுக்கும் விலை போனார்கள்.

துரோகம் என்பது ஒழியவே ஒழியாதா.ம்ம்.. சரிதான் துரோகம் என்பது இனம், மொழி, மதம் என அனைத்துக்கும் அப்பாற்பட்டது!காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் என அறுவகை பகையையும் வெல்லக் கூடியது.. ஆதங்கப்பட்டு ஆவதென்ன! இதுபோன்ற துரோகங்களைக் கடந்துதான் நாம் போராட வேண்டியிருப்பதே காலம் உணர்த்தும் செய்தி

-விடை கொடு சிந்து! குழந்தைச் செல்வங்களை கவனமுடன் பார்த்துக்கொள்!தோழா.தீரன் சின்னமலை உன் சகோதரிக்கு துணையாய் இரு..!வெற்றியுடன் வருவேன்..!

-வெற்றியோடு வாருங்கள் சுல்தான்! உங்கள் புகழ் வாய்ந்த வாள் எப்போதும் உங்களோடு இருக்கட்டும்… என் ஆசைக்காக இந்த சிறு குர்ஆன் நூலும் தங்களுடன் வரட்டும்…

போராடைத் தரித்து ஆயுதங்களைக் கொண்டதிப்பு  அரணாய்க் காத்த கோட்டை மதிலின் காவல் கோபுரத்தின் மீது துணிந்து ஏறினார்.

-வெல்லுங்கள் வீரர்களே! நம் படை வெல்லட்டும்” முழங்கிய சுல்தான் குரலைக் கேட்டு உற்சாகம் பொங்கியது மைசூர் வீரர்களுக்கு

-என் தேசத்து வீரர்களை நான் மிகவும் மதிக்கிறேன். நேசிக்கிறேன்; அவர்கள் மக்களோடு மக்களாக நின்று உழைக்கிறார்கள். எல்லாவற்றையும் காக்கிறார்கள் எதிரிகளிடமிருந்து. காவிரியின் இரு கரைகளையும் போல ஸ்ரீரங்கப் பட்டணத்தை காக்கும் கரைகள் எம் வீரர்கள்!.

தரைச் சண்டையில் முன்நகரும் சூழலில் காயமுற்றவர், ஆயுதத் தொகுப்பு, பீரங்கி, ராக்கெட் போன்றவற்றை நகர்த்துவது யுத்தத்தில் ஈடுபடும் எம் வீரர்களே!

நம் ராணுவத்துக்கு துப்பாக்கியும் வேண்டும். அதே நேரத்தில் நமது கலாச்சாரமும் காப்பாற்றப்படவேண்டும். இடது கையில் துப்பாக்கியும் வலது கரத்தை நெஞ்சுக்கு நேரே வைத்து வணங்கும் முறை சரியானதென நம்புகிறேன்; உங்கள் ஆலோசனைகளும் திருத்தங்களும் ஏற்கப்படும்.

இது இருகரம் கூப்பி வணங்கினால் நம் வீரனை முட்டாள் ஏமாளியென கருதி ஏளனமாய் நினைக்கும் எத்தர்களுக்கு புரிய வேணும்!

பார் என் கையில் துப்பாக்கியும் இருக்கிறது என எச்சரிக்கை மொழியில் நம் வீரனின் வணங்கும் முறையைத் திட்டமிட்டேன்!

நம் ஒவ்வொரு அசைவிலும் தனித்துவமும் இருக்க வேண்டுமென விரும்புவது குற்றமில்லையே…

சரிதானே…. நான் சொல்வது..!!

புண்பட்டு போயிருக்கும் மண்ணைப் பண்படுத்தும் பணியில் தங்கள் இன்னுயிரைப் பணையம் வைத்து போரிடும் புலிக்கொடி வீரர்களே உங்களுக்கு நம் மைசூர் தேச மக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.

சமீப காலமாக ஒழுங்கு மாறி வருகிறது. உலகம் சர்வதேச அரசியல் உறவுகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன

யாரோ எவனோ வீசிய குறுவாள்.. சரியாக இதயத்துக்குள் நுழைய திப்புவின் கடைசி நிமிடங்களில். தனது கோட்டை எதிரிகள் வசம் போகப் போவதை எண்ணி கலங்கினார்.

-கடவுளே! கடவுளே! என்னை ஏன் கைவிட்டீர்.

-சிந்து..என் செல்லமே..நம் செல்வங்களை கவனமாய் காக்கும் பொறுப்பு உன்னுடையது…குறைந்த குரலில் முனகிய திப்புவின் குரல்  போரோசையில் எவருக்குமே கேட்க வில்லை

எத்தனை கோட்டைகள்..! நாமக்கல் கோட்டை திண்டுக்கல் கோட்டை..ஆகா… என் ப்ரியமான மஞ்சராபாத் கோட்டை..எண் முக நட்சத்திர வடிவக் கோட்டை

திப்பு என்கிற தீரனின் நினைவுகள் அழியத் தொடங்கின!


அடுத்த பகுதி -07 

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page