13 October 2024
anbathavan

10

 

ஒட்டுமொத்தப் போர் (Total war) என்பது ஒரு போரியல் கோட்பாடு. போரில் ஈடுபடும் ஒரு தரப்பு எதிரியை அழிக்க தனது அனைத்து வகை வளங்கள் மொத்ததையும் முடிவிலாப் போர் புரிவதற்காகப் பயன்படுத்துவது ஒட்டுமொத்த போர் எனப்படுகிறது. வரலாற்றில் பல நூற்றாண்டுகளாக ஒட்டுமொத்த போர் நடவடிக்கைகள் நடைமுறையில் இருந்தாலும் 19ம் நூற்றாண்டின் மத்தியில் தான் போர் கோட்பாட்டாளர்களும் வரலாற்றளர்களும் இக்கோட்பாட்டை தனித்துவ போர்முறையாக வரையறுத்தனர். இக்கோட்பாட்டின் எதிர்மறை வரையறுக்கப்பட்ட போர் (limited war) எனப்படுகிறது. 

ஒட்டுமொத்த போர் முறையில் ஈடுபடும் தரப்பில் குடிசார் மற்றும் படைத்துறை வளங்களுக்கிடையேயான வேறுபாடு மறைந்து போகின்றது. ஒரு நாட்டின் அனைத்து வளங்களும்மாந்தர், தொழில் உற்பத்தி, அறிவு, படை, இயற்கை வளங்கள், போக்குவரத்து என அனைத்தும் போர் முயற்சிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

 ஸ்ரீரங்கப்பட்டணம் சூறையாடப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டுப் புகைந்து கொண்டிருக்கிறது.

கண் கலங்கி ஓடிக் கொண்டிருக்கிறாள் காவேரி!

உயிர்கள் மாளும் போரில் லட்சம் வீரர்களை வென்றவரைவிட தன் மனதை வென்றவரே மாவீரர்..

வீரன் திப்பு முழுதாய் இறந்தான்…

யுத்த பிரியர்களின் ரத்தங் கலந்ததால் சித்தங்கலங்கி… ஓடிக்  ண்டிருக்கிறாள் காவேரி… கண் கலங்கி ஓடிக் கொண்டிருக்கிறாள் காவேரி!

 

 

பொழுதெல்லாம் எம் செல்வம் கொள்ளைக் கொண்டு போகவோ
நாங்கள் வீழவோ…என கதறிய மக்கள்..தமது வீடுகள் கொள்ளையடிக்கப் படுவதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் திப்புவின் உடலை நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார்கள் மைசூர் மக்கள்.

”மானமிழந்தினி வாழ்வோமா அல்லாஹ் எமக்கு சாவு வராதா துயரும் இழிவும் கண்ணில் தெரியுதே – அல்லாஹ்”

திப்புவின் நம்பிக்கை வீண் போகவில்லை. ஸ்ரீரங்கப்பட்டணத்தில் கோட்டைக் கதவுகளைத் திறந்துவிட்ட நிதி அமைச்சன் மீர் சதக்கின் தலையை அந்தப் போர்க்களத்திலேயே சீவி எறிந்தான் திப்புவின் நட்பாய் வந்த தீரன் சின்னமலை.

 

செய்தியறிந்த மக்களோ அங்கேயே அவன் உடலின் மீது உமிழ்ந்தார்கள். புதைக்கப்பட்ட பிறகும் அவன் உடலைத் தோண்டியெடுத்து சடலத்தின் மீது ஒரு வார காலம் சேற்றையும் மலத்தையும் வீசினார்கள்.
சதக் என்கிற பாரசீகச் சொல் துரோகத்தைக் குறிக்கும் சொல்லாக கன்னட மொழியில் ஏறியது.

-எங்கே திப்பு எங்கே திப்பு..!-

வென்ற ஆணவத்தில் வெல்லெஸ்லி யின் குரலில் எக்காளம். வீழ்ந்தவன் அருகே ஆணவத்தோடு வந்தான் வெல்லெஸ்லி.

குருதி முழுக்க தாய் மண்ணுக்கு தந்த திப்பு அரைகுறையாய் விழித்துப் பார்க்க… செம்பழமாய் வெல்லெஸ்லி….மைசூரை வெற்றிக்கொண்ட வெல்லெஸ்லி…

 

-அறிவாயா திப்பு உன் படைகள் எங்களிடம் அடிபணிந்தன. ஸ்ரீரங்கப்பட்டணம் எங்கள் வசம். தெரியுமா திப்பு… இதே நேரம் உனது நேசத்துக்குரிய மஞ்சுராபாத் கோட்டையும் பிடிப்பட்டிருக்கும். ஏன் இடிபட்டிருக்கும் கூட…
கொத்தளத்தில் கோலாகலமாய் பறக்கும்  எம் யூனியன் ஜாக் கொடி.

அப்போதுதான் திப்பு முழுதாய் இறந்தான்.

சாவே உனக்கு சாவு வராதா…

திப்புவின் கரம் குறுவாளை இறுகப் பற்றியிருந்தது. திப்புவின் வலது கரத்திலிருந்த திப்பு வாளை மெல்ல விரல் பிரித்து எடுத்துக்கொண்டான் வெல்லஸ்லி. பின் தன் தொப்பி எடுத்து வணங்கினான்.


முதல் பகுதிக்கு செல்ல 

நன்றி:

கதையில் ஊடுபாவாக  கலந்திருக்கும்

  • கலிங்கத்து பரணி
  • தம்மபதம்: தமிழில் கவிஞர் யாழன் ஆதி
  • தலித் நாட்டுப்புறப்பாடல்கள் :தொகுப்பு – விழி பா இதயவேந்தன்.

எழுதியவர்

அன்பாதவன்
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x