05
நான் சார்ந்திருக்கும் மூன்று சக்திகள்:
01.இறைவனின் அருள்
02.ஜகத்குருவின் ஆசி
03.என் கைகளின் பலம்
–திப்புசுல்தான்
-மதங்களைக் கடந்த மகோன்னதன் திப்பு…ஒரு சம்பவம் சொல்கிறேன் கேளுங்கள் …
சிருங்கேரி! துங்கா நதிக்கரையின் அழகிய மகள்!
சிக்மகளூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் துங்கா நதியின் இடது கரையில் உள்ளது சிருங் கேரி. நெல்வயல்கள், பாக்கு மரங்கள் புடைசூழ அமைந்துள்ளப் பசுமைப்பிரதேசம்
ராமாயணத்தில் வரும் கலைக் கோட்டு முனிவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக் கிறீர்களா? அவர் தான், குழந்தை வேண்டி தசரதன் செய்த புத்திர காமேட்டி யாகத்தை முன்னின்று நடத்தியவர். பெயர் கலைக்கோட்டு முனிவர். இவருடைய வேறு பெயர் ரிஷ்ய சிருங்கர். இவர் பெயரில் அமைந்தது இவ்வூர்.
ஸ்ரீ ரங்கப்பட்டணத்திலிருந்து 1,200 பர்லாங் தொலைவில் தான் ஆதி சங்கரரால் கி. பி. எட்டாம் நூற்றாண்டில் அத்வைத தத்துவத்தை பரப்பதோற்றுவிக்கப்பட்ட சிருங்கேரி சாரதா பீடம் என்று அழைக்கப்படும் சங்கர மடம் உள்ளது. யசூர் வேதத்தை பிரதிநிதித்துவம்படுத்தும் வகையில் இம்மடம் அமைந்துள்ளது.. இந்தியாவின் சமய வரலாற்றில் முக்கியமான இடத்தை பெற்றிருப்பது சாரதா பீடமாகும்.. துங்கபத்ரா நதியின் கரையில் பசுமை போர்த்திய குன்றுகளின் மேல் ஆதிசங்கரர் நடந்து போய் பீடத்தையும் சாரதாம்பாள் ஆலயத்தையும் அமைத்ததாக வரலாறு கூறுகிறது.
பிதாமகன் ஹைதர் அலியை போல என் மகன் திப்புக்கும் சிருங்கேரி சாரதா பீட சுவாமிகள் மீது பேரன்பும் பெரும் மரியாதையும்..
திப்பு சுல்தானும் தன் தந்தை ஹைதர் அலியைப் போலவே சிருங்கேரி சங்கர மடத்தினிடம் நல்லுறவு கொண்டிருந்தார் என்று அவர் சங்கர மடத்திற்கு எழுதிய கடிதங்களிலிருந்தும், சங்கர மடத்திலிருந்து திப்புவிற்கு எழுதப்பட்ட பதில் கடிதங்களிலிருந்தும் அறிந்து கொள்ள முடிகிறது.
ஸ்ரீரங்கப்பட்டணத்திலிருந்து நல்லதொரு புரவியேறினால் ஹாசனா, பேளூர், சிக்கமகளூர். சங்கமேஸ்வரன் பேட்டைஎன்ற பசுமை வழியில் பயணித்தால் பீடத்தை அடைந்து விடலாமே நேச நெஞ்சங்களைத் தூரமா பிரித்துவிடும்.
******
1791… சிருங்கேரி மடத்திற்கு சிரமம் மிகுந்த வருஷம்!.
மராத்திய படைத்தளபதிகளில் ஒருவனான ரகுநாத் ராவ் பட்வர்த்தன் தலைமையிலான குதிரைப் படையொன்று சிருங்கேரிக்குள் புகுந்து சூறையாடியிருக்கிறது.
சிருங்கேரி நுழைந்தவன்; சின்னாபின்னா படுத்தினான் மடத்தை; மடத்தின் செல்வங்கள் கொள்ளை கொண்டான் அப்போது பலர் கொல்லப்பட்டிருக்கின்றனர். எண்ணற்றோர் படுகாயமடைந்திருக்கின்றனர். அவர்களில் பிராமணர்களும் அடக்கம். மடாலயத்தின் சொத்துகள் அபகரிக்கப்பட்டன. மடத்திலிருந்த புனிதப் பொருட்களை மதியாது, அவமரியாதையாக நடந்து. விட்டானா பாவி! அன்னை சாரதா தேவியின் சிலையைப் புரட்டிப் போட்டான்! பருப்பும் நெய்யும் பயத்தில் அலறி சிதறின!
சாரதா பீடாதிபதி உயிர் தப்பித்தால் போதுமென துங்க-பத்திரா நதி கடந்து கர்காலா ஓடி விட்டார்.கர்காலாவில் ஒளிந்திருந்த சங்கராச்சாரியாருக்கு என்ன செய்வதென்று புரியாமல் உடனிருந்தவர்களிடம் ஆலோசித்தார்.
’சிறிய கிராமம் பெரும் நகரம் அடர்ந்த காடு பள்ளத்தாக்கு மலைமுகடு எங்கெனினும் அறவோர் ஒளிர்வர்.’
”ஸ்வாமிகளே மராத்திப் படைகளுக்குப் பதில் சொல்ல.. மைசூரின் பச்சை மிளகாயால்தான் முடியும்! தாங்கள் உடனடியாக மன்னன் திப்புவுக்கு தகவல் தெரிவித்தல் நலம்!”
-அன்னை சாரதாவின் ஆக்ஞை அதுதான் எனில் எழுதுவோம் ஒரு ஓலை!
அந்த இடுக்கண் தருணத்திலும் ஓலை எழுதத் தேர்ந்தெடுத்தது சமஸ்கிருத மொழி தான்.கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!
”ஸ்ரீலஸ்ரீ மைசூர் ராஜ்யாதிபதி திப்புசுல்தான் அவர்கள்
சர்தார் திப்பு
வெல்க உன் வீரம்
சிருங்கேரி மடத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவ நிகழ்வுகள்
குறித்து அறிந்திருப்பாய்!
மராத்தா படைகள் மனிதாபிமானமோ,
கடவுள் என்ற பயமோ இன்றி
காட்டாற்று வெள்ளம் போல சிருங்கேரி நுழைந்தனர்!
விஜயநகர மன்னர்கள் கட்டிக் கொடுத்து
காப்பாற்றி அழகுறை ஆலயம் சிதைக்கப்பட்டது;
அன்னை சாரதாதேவியின் புனித சிலை புரட்டிப் போடப்பட்டது.
பீடத்தின் செல்வங்கள்
மக்களின் காணிக்கைகள்,
மன்னரின் மானிய நிதிகள் கொள்ளையடிக்கப்பட்டன!
துங்கபத்ரா நதியில் கரைகிறதெம் துயர வெள்ளம்
ராஜனின் உதவி தேவை!
காலத்தினால் செய்யும் உதவி! கடிந்து செயல்படுக!”
கண்ணனூர் போர்ப் பாசறையில் இருந்த திப்புவுக்கு வடமொழியில் எழுதி இருந்த கடிதத்தை வாசிக்க கேட்டதும் நற நறவென பற்களைக் கடித்தவனின்
கண்கள் கோபத்தில் சிவந்தன!
’ நல்லவரை துன்புறுத்தும் மனிதர்க்கு தீமை வந்து சேரும் காற்றுக்கு எதிர்திசை நின்று தூற்றுவோர் மீதே தூசுகள் வந்து படியும்’
”ஸ்ரீமத் பரமாம்ச பரிவர ஆச்சாரிய சிருங்கேரி சச்சிதானந்த சாமிகளுக்குத் திப்புவின் வணக்கங்கள்
புனித இடங்களை அழிப்பவர்கள் தங்களது
தீய செயல்களுக்கான பலனை அனுபவிப்பார்கள்.
’அமைதியான மனம் பேச்சு செயல் முற்றும்
விடுதலையடைந்த உணர்வு
பரிபூர்ண சமநிலை உடையோரை வாழ்வின் மேடுபள்ளங்கள் கவிழ்ப்பதில்லை’
குருவுக்குத் தீமை செய்பவர்களுக்கு அழிவே உண்டாகும்.
சாரதா பீடம் மீண்டும் அமைய
200 ரஹாடி ரொக்கமாகவும்,
200 ரஹாடி பொருட்களாகவும்
200 ரஹாடி தானியமாகவும் வழங்கியுள்ளேன்.
மேலும் நிதி தேவையெனில் கொடுக்கும் படி
கிராம நிர்வாக அலுவலர்க்கு உத்திரவிட்டுள்ளேன் ”(திப்புவின் கடித எண் 47)
சிருங்கேரி சங்கராச்சாரி மீண்டும் உதவி கேட்டுத் திப்புவிற்குக் கடிதம் எழுதி உள்ளார். அக்கடிதத்தை பெற்றுக் கொண்ட திப்பு, நாராயணன் என்பவர் மூலம் யானை ஒன்றையும் புதிதாக வெளியிட்ட நாணயங்கள் பலவற்றையும் கொடுத்தனுப்பி உள்ளார். இதனுடன் கூடுதலாக .500 பணம் சேர்த்து அனுப்பி வைத்தார். அன்னை சாரதா தேவியின் கோவிலை விரைவில் கட்டி முடித்துக் குடமுழுக்கு நடத்த வேண்டிக் கொண்டார். (திப்புவின் கடித எண் 50)
என் மைந்தன் திப்பு வை வாசிப்பவர் உணர அவனது கடிதங்களையே சாட்சியாக அழைக்கிறேன்:
சிருங்கேரி சங்கராச்சாரியார் மீண்டும் உதவி கேட்டு திப்புவிற்குக் கடிதம் கொடுத்து அனுப்பியிருந்தார். அதைப் பெற்றுக் கொண்ட திப்பு, சுவாமிகள் உங்கள் கடிதம் வேலூர் வெங்கட்ராம ஜோய்ஸ் மற்றும் அகோபில சாஸ்திரிகள் மூலம் கிடைத்தது. செய்தியை தெரிந்து கொண்டேன். உங்களுக்காகப் பல்லக்கு ஒன்று அனுப்பி உள்ளேன். உங்களுக்கு மேலும் நிதி உதவி அளிக்கும் படி நகர நிர்வாகத்திற்கு உத்திரவிட்டுள்ளேன் என எழுதியுள்ளார். (திப்புவின் கடித எண்48)
சாரதா பீடத்திற்கு பல்வேறு மரபைச் சேர்ந்த மன்னர்கள் கொடைகளை வழங்கியுள் ளார்கள். விஜயநகர மன்னர்கள், ஐதராபாத் நவாப்புகள், ஹைதர் அலி, திப்பு சுல்தான், மைசூர் உடையார்கள், மராட்டிய பேஸ் வாக்கள், கேரள அரசர்கள் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்
”மைசூர் ராஜ்யாதிபதி திப்புசுல்தான் அவர்கள்
ஸ்ரீமத் பரமஹம்ச… ஜகத்குரு சிருங்கேரி ஸ்ரீசச்சிதானந்த பாரதிஸ்வாமிகள் அவர்களுக்கு.
மர்யாதையுடன் கேட்டுக் கொண்ட பிரகாரம், ப்ரிஞ்சாரிமுதலான கொள்ளைக்காரர் உபத்ரவம் செய்யாமற் காக்கும்பொருட்டு, கொப்பம் தாலூகா ஆமல்தாருக்கு உத்தரவு செய்யப்பட்டிருக்கிறது. அதனுடன், மடத்தின் பந்தோபஸ்துக்காக ஒரு சிப்பாய்ப்பட்டாளமும் அனுப்பப்பட்டிருக்கிறது.”
அதே கடிதத்தில் திப்பு மேலும் எழுதி உள்ளதாவது: 1000 பார்ப்பனர்களை அழைத்து 40 நாட்களுக்கு சாஸ்திரா சண்டி ஜபம் செய்ய வேண்டிக் கொண்டார். இதற்கான முழு செலவையும் தாமே ஏற்றுக் கொள்வதாக எழுதியுள்ளார். நாட்டின் எதிரிகளை அழிக்க இந்த ஜபம் பயன்படுமென திப்பு சங்கராச்சாரிக்கு எழுதி உள்ளார். கடித எண்கள் 51, 52, 53 ஆகியவற்றிலும் சாஸ்திரா சண்டி ஜபம் நல்ல முறையில் நடத்துவது குறித்த ஏற்பாடுகளைப் பற்றியே எழுதி உள்ளார்.
”ஹிஜரா 1219 =(இங் 1791)
மார்க்க சீர்ஷ சுக்லபசஷ ஷஷ்டி.
மriயாதையுடன், ராஜ்யப்பகைவர் நாசத்திற்காக, எங்கும் ஜபங்கள் நடத்தவேண்டுமென்றும், அதனால் ஏற்படும் செலவுகளுக்கு ஜாப்தா அனுப்பவேண்டுமென்றும் பிரார்த்திக்கப்படுகிறது.”
’வாழ்வுப்பயணத்தைக் கடந்தவர்க்கு கவலைகள் அற்றோருக்கு எல்லாவற்றினின்றும் விடுதலைப் பெற்றோருக்கு..கட்டுகளை அறுத்தோருக்கு மேலும் ஆசைகள் இருப்பதில்லை’
”
”ஹிஜரா 1219=(இங் 1791)
மriயாதையுடன், கேட்டுக்கொண்டப்ரகாரம், வைதிக கர்மாக்கள் நடத்துவதில், யாரும் விக்னம் செய்யாமல் பந்தோபஸ்து செய்யும்படி, உத்தரவளித்திருக்கிறோம் என்பது இதன்மூலமாயறிவிக்கலாயிற்று.”
[ கடிதம் ஐஐஐ]
”சிருங்கேரிமடம்
கடிதம் ஐங
ஹிஜரா 1219 (இங் 1791)
ஸர்தார், ஸபத் மஹமத் அவர்களுக்கு,
சிருங்கேரி ஸ்வாமிகள் ஸமுத்திரஸ்நாநத்துக்குச் செல்லுகிறார்கள். அங்கங்கே ஜாகைகள் சௌகரியப்படுத்திக் கொடுக்க வேண்டும். போய்த் திரும்பவந்து சேரும்வரை, அவர்களுக்கு 20 பேர் ஸஹாயத்துக்காக அனுப்ப வேண்டும். தமது சிஷ்யரில் தர்மப்பிரஷ்டாவோர்களை, ஸ்வாமிகளே விசாரணைசெய்துகொள்ள உரிமையிருக்க வேண்டும்”
ரிஷ்யசிருங்க பர்வதம் ஒரு பச்சைப் பசேல் வனப் பிரதேசம். மருத்துவ குணமுள்ள மூலிகைச் செடிகள். கடுமைமான கோடையில் கூட, ஜிலு ஜிலுவென்று அருமையான சீதோஷ்ண நிலை, மனதிலும் உடலிலும் எப்போதும் ஒரு நிம்மதி நிலவ வைக்கும் சூழல் உள்ளது
நரசிம்ம சாஸ்திரி மூலம் சங்கர மடத்திலிருந்து திப்புவிற்கு மீண்டும் கடிதம் கொடுத்தனுப்பப்பட்டது. அக்கடிதத்தை பெற்றுக் கொண்ட திப்பு, 200 ரஹாடி நெல் மற்றும் சாரதா தேவிக்கு அணிவிக்க விலையுயர்ந்த பட்டு புடவையையும் மேலாடையையும், சங்கராச்சாரியின் சொந்த பயன்பாட்டிற்கு விலையுயர்ந்த இரண்டு சால்வைகளையும் அசாப் என்பவர் மூலம் அனுப்பி வைத்துள்ளார். (திப்புவின் கடித எண் 49)
ஹிஜரா 1219 (இங் 1791)
மைசூர்ராஜ்யத்திலுள்ள கிலாதார்களுக்கும் அமுல்தார்களுக்கும் சிருங்கேரிமடசம்பந்தமான காரியமõய்ப்போய்வரும் ஜனங்களை ஹிம்ஸிக்கவே கூடாது.[ கடிதம் ங]
துங்க பத்ரா நதிப் படித்துறை நீண்ட படிகளுடன் அழகாக இருக்கிறது. அங்கு உட்கார்ந்து கொண்டு நதியில் பெரிய பெரிய மீன்கள் துள்ளி விளையாடுவதையும் கரை அருகில் வந்து மக்கள் வீசும் பொரியை விழுங்குவதையும் நாள் முழுக்க அலுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கலாம்.
ஹிஜரா 1219 = (இங் 1791)
மைசூர்ராஜ்யத்திலுள்ள கிலாதார்களுக்கும் அமுல்தாரர்களுக்கும், சிருங்கேரிஸ்வாமிகள் யாத்திரையாய் வருகிறார்கள். நீங்களெல்லோரும் ஸர்வ ஜக்ரதையாயிருந்து, வேண்டிய மரியாதைகள்செய்து, தலைநகர்வரும்வரை அவர்களுக்கு வழியில், வேண்டிய சௌகரியங்கள் செய்து கொடுக்கவேண்டும்.[ கடிதம் ஙஐ]
படித்துறையில் மீன் கூட்டங்கள் வருவதனால் நீராட முடியாது. பாலத்திற்கு மறுபுறம் நதி வளைந்தோடும் இடத்தில் குளிக்கலாம் .குளித்து.பூசை முடித்து
திப்பு உத்தரவின் படி வழங்கப்படும் இலவச உணவு உண்டு பசியாறலாம்.முதலில் சூடான அரிசிச் சாப்பாடு, பிறகு மிளகு ரசம், சாம்பார், மோர் இந்த முறையில் பரிமாறப்படுகிறது. அளவு கிடையாது.மக்கள் பசியறிந்தவன் எம் மன்னன்.
”தாயே..காவேரி அன்னையே வரலாறு மறந்து போய்..காலம் தின்று துப்பிய வெறும் காகித ஆதாரங்களாய் அட்சரங்களில் உயிர் வாழும் எங்களுக்கும் வாய் பேச வாய்ப்பளித்த அன்னைக்கு எம் வந்தனம்…துங்கா நதியின் ஈரம் இருக்கும் வரை பத்ராவின் நீர் பக்தர் தம் தாகம் தீர்க்கும் வரை மதங்களைக் கடந்த திப்புவின் அரச மகுடத்தில் சிருங்கேரி எனும் பெயர் ரத்தினமாய் ஜொலிக்கும்”
அடுத்த பகுதி -06
எழுதியவர்
இதுவரை.
- கதைகள் சிறப்பிதழ் - 20221 August 2022நட்சத்திரக்கோட்டை