18 July 2024

07

ஐம்பெருங்குழு  (5)

அமைச்சர்/புரோகிதர்/படைத்தலைவர்/தூதுவர்/சாரணர்

 

மைசூர்ப் புலியின் அவை கூடியிருந்தது; இது சிற்றவை. தலைமை நிதி மந்திரி பூர்ணய்யா, போர்க்கள அதிகாரி கமருதீன், தளபதி மீர் சாகிப், காசாளர்: கிருஷ்ணாராவ்; சட்டம் ஒழுங்கு காக்கும் சம ஐயங்கார்; அயல்நாட்டுத் தூதரக அதிகாரிகளான சீனிவாச ராவ், மற்றும் அப்பாஜிராவ் என குறிப்பிட்ட சிலரே குழுமியிருந்தனர்.

நடுநாயகமாய் திப்பு சுல்தான்! கம்பீரமாய்!

-அஸ்ஸலாமு அலைக்கும்…. மந்திரி பிரதானிகள் உட்பட முக்கியஸ்தர்களுக்கு நமஸ்காரம் -உங்களிடம் ஒரு முக்கியமான சங்கதியை விவாதிக்க விரும்புகிறேன்.

-சொல்லுங்கள் சுல்தான்; காத்திருக்கிறோம் தங்கள் கட்டளைக்கு…

– ஸ்ரீரங்கப் பட்டணத்தை எப்போதும் போர் மேகங்கள் சூழ்ந்து இருப்பதை அனைவரும் அறிவீர்கள்… சில மாதங்களுக்கு முன்பு சிருங்கேரி மடம் மராத்தா ராணுவத்தால் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டது; நாமெல்லோரும் அறிவோம் தானே!

-ஆம் சுல்தான் அவர்களே! அதுமட்டுமா… பரங்கிப்படை மதராஸ் பட்டணத்திலிருந்து தன் ஆக்ரோஷ நாவினால் மைசூரை விழுங்க தருணம் பார்த்திருக்கிறது.

-உண்மை; யாமும் அறிவோம்! வேலூரில் ஒரு படை திருச்சிராப்பள்ளி அருகே ஒரு முகாம்… இந்தப்பக்கம் குடகு அரசனின் குடைச்சல்;நிஜாமின் துரோகம்…யாவும் அறிவோம்

-சுல்தான்… ஆங்கில கடல்படைத் தொல்லைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

-உண்மை! சரியாக நினைவூட்டினீர்கள்! ஹைதராபாத் நிஜாமும் மராத்தியப் படைகளும் சேர்ந்து கொண்டால் நமக்கு ஆபத்து தான்.

-நிச்சயமாய் அரசே… இவைகளுக்கும் இன்றைய கூட்டத்துக்கும் என்ன தொடர்பிருக்கிறது சுல்தான்?

-சரியான கேள்வி! எனக்கொரு யோசனை உதித்திருக்கிறது…

-சொல்லுங்கள் கேட்கிறோம். சரியாயின் ஏற்கிறோம்!

-நல்லது! ஸ்ரீரங்கப்பட்டணம் மட்டுமல்ல நம்மை நம்பியுள்ள சிருங்கேரி, தர்மஸ்தலா, உடுப்பி, மேல்கோட்டை, மங்களூர், ஹாசனா, பேளூர் ஹலபேடுவின் சிற்ப பொக்கிஷங்கள் யாவற்றையும் காக்கும் வண்ணம் கோட்டையொன்றை நிர்மாணிக்க தீர்மானித்திருக்கிறேன்.

-நல்ல யோசனைதான்? அதிக செலவு பிடிக்குமே அரசே?

-நிதிச்செலவுப் பார்த்தால் நிம்மதி இருக்காது கிருஷ்ணாராவ்.

-மன்னர் சொல்வதே சரி!

-இடம் தேர்வு செய்யப்பட்டதா சுல்தான்

-ம்ம்..நானும் பூராணய்யாவும் பார்த்து வந்தோம்!

-ஆவல் தாங்க முடியவில்லை அரசே! எந்த இடம் தான் அது?

-சக்லேஷ்பூர்! மங்களூருக்கு பெங்களூருக்கும் இடையில் உள்ள சக்லேஷ்பூர்….

-சந்தேகமொன்று… சுல்தான்… எழுப்பலாமா….

-உங்களுக்கில்லாத பதிலா அய்யங்கார் சுவாமி! கேளுங்கள்.

-எத்தனையோ இடங்கள் இருக்க ஏன் சக்லேஷ்பூர்?

-ஆஹா மிக நல்லக் கேள்வி..!

-முதலில் சக்லேஷ்பூர் பல்வேறு முக்கிய இடங்களுக்கு மத்தியில் இருக்கிறது. மலையேறினால் மங்களூர்… மலையாளம் குடகு. வடக்கே பெங்களூர்..

ஒருபுறம் ஸ்ரீரங்கப்பட்டினம், மேல்கோட்டை, மைசூர், சரவண பெலகோலா

இன்னொரு பக்கம் பேளூர் ஹலபேடு கலைப் பொக்கிஷங்கள்..ஹூலியூர் புஷ்கரணி… கண்டிருக்கிறீர்களா…

-காண கண் கோடி வேண்டும்.

– மற்றொருபுறம் சிருங்கேரி. தர்மஸ்தலா, உடுப்பி ஆலயங்கள்.

-சமவெளிக்கு இறங்கினால் ஹாசனா….

-சரியாக சொன்னீர்கள்! ஹாசனாவுக்கும் அன்னை ஹாசனாம்பா ஆலயத்துக்கும் ஏது ஊறு நேராமல்   காப்பாற்ற வேண்டியது நம் கடமையல்லவா…

-நிச்சயமாய்… சுல்தான்! தங்கள் மத நல்லிணக்கம் நாங்கள் அறிந்ததுதான்.. இன்றோ ஸ்ரீரங்கம் ராஜ கோபுரத்தை விடவும் உயர்ந்து நிற்கிறீர்கள்.

-என்னை புகழ்தல் ஆகாது; இன்ஷா அல்லா! இது கடவுளின் விருப்பமல்லவா! என்  சிந்தனைகளுக்கும் செயல்களுக்கும் உங்கள் அனைவரின் ஆதரவும் அனுமதியும் தேவை.

-மாமன்னருக்கு இந்த மைசூர் சாம்ரஜ்யத்தின்  சுல்தான் அவர்களுக்கு இந்த எளியவர்களின் அனுமதியா..

-அப்படியில்லை! விதிகள் யாவருக்கும் பொதுவானவை. சுல்தான் என்பதால் மீறுதல் ஆகாது! அதிகாரம் இன்று இருக்கும் நாளை கை நழுவி போய்விடும்.

-ஒப்புக்கொள்கிறோம் இந்த அவை மாமன்னரின் இந்த புதிய யோசனையை ஏற்கிறது; அங்கீகரிக்கிறது; அனுமதிக்கிறது.

-நன்றிகள் பல! பூர்ணய்யா …பிரான்ஸ் மன்னருக்கு கடிதம் எழுதி  கோட்டையை வடிவமைக்க ஆகச் சிறந்த வடிவமைப்பாளர்களை உடனடியாக அனுப்பி வைக்க கேட்டிருந்தோமே…?

-வந்திருக்கிறார்கள்..அரசே..

-அவர்களை  நான் தனியே சந்திக்க ஆவனச் செய்யுங்கள்…நல்லது; நன்றி மீண்டும் இப்போது அவை கலையலாம்.

@

-வெல்கம் மிசே   … மைசூருக்கு உங்கள் வரவு நல்வரவாகட்டும். தங்கள் பயணத்தில் ஏதும் சிரமம் இருக்காது என நம்புகிறேன்

 

– மெர்சி ,,மிசே திப்பு ..சிரமங்களையெல்லாம் கடந்து வந்துவிட்டோம்..மேலும் இது எமக்கானக் கடமையல்லவா.. பிரான்ஸ் தேசத்துக்குப் புகழ் சேர்ப்பதும் கூட

-ஆகா..அது உள்ளது..

-மிசே..தங்கலைப் பர்றிய சின்னதொரு அறிமுகம் கொடுத்தால் மகிழ்வேன்..

-காத்திருக்கிறோம்..அது எங்களுக்கன மகிழ்ச்சி..நான் லெப்டினெண்ட் மிக்கெல் நடேசன்..என்னுடன் வந்திருக்கும் இந்தக் கனவான்  லெப்டினெண்ட்  ஆன்ட்ரூஸ் அரியபுத்திரி

-அடடே..உங்கள் பெயர்களில் பிரெஞ்ச் பெயர்களோடு தமிழ் உச்சரிப்பும் தெரிகிறதே

…? -மெர்சி  மிசே..திப்பு..நாங்கள் பூர்வீகமாய் தமிழர்கள்..பொதுச்சேரி அறிவீர்கள் தானே..?

-நன்றாக..நம் நன்பர்களின் ராஜ்யமாயிற்றே..

-அந்தப்  பொதுச்சேரி அருகே  விழுப்புரம் எங்கள் ஊராம்..அடிமைகளாய்ப் போன எங்கள் முன்னோர் சொன்னது..நாங்கள் பிரான்ஸ் தேசத்தின் கொதுப் தீவுகளில் வசிப்பவர்கள்..பின்னாளில் மாமன்னர் நெப்போலியன் படைகளில் இணைந்து கொண்டோம்

-உங்கள் தேசத்தின் உன்னதமான வடிவமைப்பாளர்  Sebastian Le Prestre de Vauban.குறித்தும் அறிந்து வைத்திருக்கிரேன்

-மிசே.. திப்பு.. எனது சில சந்தேகங்களை நீர் தீர்த்து வைத்தால் நல்லது.தயவுசெய்து எதன் பொருட்டு இந்த கோட்டை

-பிரிட்டிஷ் படைகள் மராத்தா ராணுவம் மற்றும் ஹைதராபாத் நிஜாம் அரசு இவைகளின் கூட்டணிப் படைகளின் தொல்லையை சமாளிப்பது முதல் நோக்கம்.

இரண்டாவது குடகு, மலையாளம், மங்களூர் பகுதிகளை மட்டுமல்லாமல் தென் கர்நாடகத்தின் ஆன்மிக ஸ்தலங்களை கலைப் பொக்கிஷங்களைப் பாதுகாப்பது.

-நல்லது; கோட்டைக்கான நோக்கம்

-கோட்டைக்குள் நமது மைசூர் அரசின் ஆயுதங்கள் சேமித்து  வைக்கப்பட்டிருக்கும், ஆயுதக்கிடங்காகவும் செயல்படும்.

– மெர்சி… மிசே….தங்களுக்கு   ஒரு சின்ன கற்பனை… வடிவம்! யோசித்து உங்கள் முடிவைச் சொல்லுங்கள் மிசே திப்பு..- சொல்லுங்கள் கோட்டை  எண் கோண நட்சத்திர வடிவம் (Octagonal Star design)…இதை உருவாக்க  ஒரு குன்று போதுமானது

-ஆஹா… ப்ரமாதம்.. இருக்கிறதே  சக்லேஷ்பூர்…! மிசே அரியபுத்திரி..மிசே நடேசன்  தங்கள் சிந்தனைப் போல ஆகட்டும்.

-உத்தரவு சுல்தான்! தங்கள் விருப்பம் போல… எல்லாம் நிகழும்.


அடுத்த பகுதி -08 

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x