23 May 2025

பாலைவன லாந்தர்

பாலைவன லாந்தரின் இயற்பெயர் நலிஜத். இவர் 18.08.1979- அன்று தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் பிறந்தார். இலக்கிய செயல்பாடு: பாலைவன லாந்தர், 2010- ஆம் ஆண்டு  கவிதைகள் எழுதத் தொடங்கினார். இவர் கவிதை, முதலில் 2015- ஆம் ஆண்டு கல்கி இதழில் வெளியானது. 2016- ஆம் ஆண்டு "உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள்" என்ற   முதல் கவிதைத் தொகுப்பு வெளியானது.   சிறுகதைகளும் கட்டுரைகளும் தொடர்ச்சியாக எழுதி வருகிறார்.  கவிதைத் தொகுப்புகள்; உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள் - 2016 ( சால்ட் பதிப்பகம் ), லாடம் -  2018 ( டிஸ்கவரி புக் பேலஸ் ), ஓநாய் - 2021 ( யாவரும் பதிப்பகம் ), பெருந்தச்சன் - 2023 ( யாவரும் பதிப்பகம் ), World Class Sins (English Translation), மீளி சிறுகதை தொகுப்பு (எதிர் பதிப்பகம்). பெற்றுள்ள விருதுகள்: தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை மீறல் விருது, படைப்பு கவிதை விருது, களம்புதிது கவிதை விருது. பாலைவன லாந்தர் சமூகநல செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். பெரு நோய்த்தொற்று கொரானா காலத்தில் இவர் தயாரித்த "ஊரடங்கு" என்ற விழிப்புணர்வு குறும்படம்   கவனம் பெற்றது பாலைவன லாந்தர்,  ஜெர்மனியில் வாழும் நிம்மி சிவா என்னும் எழுத்தாளரோடு இணைந்து உலகெங்கிலும் உள்ள இருபது பெண் எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து இவர் எழுதிய "மனமே யுத்தம் செய்" என்னும்  நெடு நீள விழிப்புணர்வு கவிதையை வாசிக்கச் செய்தார். LANTHAR ART ENTERTAINMENT - லாந்தர் ஆர்ட் எண்டர்டெய்ன்மெண்ட் என்னும் கலை இலக்கிய செயற்பாட்டிற்கான தளம் ஒன்றை உருவாக்கி தொடர் நிகழ்வுகளை நடத்தி வருகிறார்.
சைக்கிளை வேகமாக மிதித்தான். கிட்டத்தட்ட சைக்கிள் செய்ன் அறுந்து விழுந்துவிடத் துடித்துக்கொண்டிருந்தது. எந்தப் புள்ளியிலும் நின்று விடக்கூடாத வேகத்தில்...
ப்ளேடு கொஞ்சமாகத் துருவேறியிருப்பது தெரிந்தும் கன்னத்தில் சுருண்டுவிட்ட மயிர்களைக்களைய அழுத்தியது தவறுதான் வேறு வழியில்லை. இன்று சனிக்கிழமை பரபரப்பான...
You cannot copy content of this page