27 April 2024

ஒரு ஊரில் ஒரு அழகான வீடு இருந்துச்சாம். அந்த வீட்டில் ஒரு அழகான குடும்பம் வாழ்ந்து வந்தது. அதில் ராகுல் என்ற ஒரு சுட்டி சிறுவன் இருந்தான். எலி ராகுல் சாப்பாட்டைத் திருடிச் சாப்பிட்டு தினமும் தப்பித்து ஓடிவிடும். ஒரு நாள் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டு இருக்கும் நேரத்தில் அவனுக்குக் கடுமையான பசி ஏற்பட்டுவிட்டது. தன் அம்மாவிடம் அதிகச் சத்தத்துடன்

“அம்மா…… ரொம்ப பசிக்குது. சாப்பாடு சீக்கிரம் கொண்டு வாங்கம்மா”
….. அப்படின்னு சத்தமாகக் கேட்டான். அம்மாவும் ராகுலுக்கு சாப்பாடு கொண்டு வந்து மேடை மீது வைத்து
“சீக்கிரம் சாப்பிடு ராகுல்” என்று சொல்லிவிட்டு தனக்கு வேலைகள் இருப்பதாகக் கூறி விட்டுச் சென்று விட்டார்.

ஆனால் ராகுல் தொலைக்காட்சியை மிகவும் மும்முரமாகப் பார்த்துக் கொண்டு இருந்தான். அம்மாவும் தன் வேலைகளை முடித்து விட்டு “சாப்பாடு எப்படி இருந்தது ராகுல்” என்று கேட்டார்.

“ஐயோ!!!! அம்மா!!! நீங்கள் கொண்டு வந்த சாப்பாட்டை நான் கொஞ்சம் கூடச் சாப்பிடவில்லை” என்று கத்தி கூச்சலிட்டான்.

அம்மாவும் ஏதோ ஒன்று நடக்கின்றது என்று நினைத்துக் கொண்டே சமையலறைக்குச் சென்று விட்டார். அம்மாவும் பாத்திரம் கழுவிக் கொண்டு இருந்தார், ராகுலும் அம்மாவைப் பின் தொடர்ந்து சமையலறைக்கு வந்தான். திடீரென ராகுல் குதி….குதி…. என்று ஒரே துள்ளல் ஆட்டம் போட்டான்…. அம்மாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘எலி… எலி…..’என்று பயத்தில் வேகமாகக் கத்தி கூச்சலிட்டான்.

“அம்மா!!! அம்மா!!!! உங்கள் கீழே பாருங்கள் எலியோட கால் தடம்!! என் சாப்பாட்டை திருடிய எலி இதுதான், இதை எப்படியாவது இன்றே பிடிக்க வேண்டும்.” என்று கூறினான்.
திடீரென அவனுக்கு ஒரு யோசனை வந்தது.. பூனைகள் தான் எலியைப் பிடிக்கும் என்று. தன் அம்மாவிடம் “அம்மா… அம்மா… எனக்கு எப்படியாவது ஒரு பூனை கொண்டு வந்து தாங்கம்மா” என்று கெஞ்சிக் கேட்டான்.

அம்மாவும் ராகுலும் பக்கத்தில் இருக்கும் உறவினர்கள் வீட்டிற்குச் சென்று அவர்கள் வளர்க்கும் மூன்று பூனைகளில் ஏதாவது ஒரு பூனையைக் கொடுக்குமாறு கேட்டனர். கருப்பு, காபி, வெள்ளை நிறத்தில் மூன்று பூனைகள் அங்கு இருந்தன. அதில் வெள்ளை நிறத்தில் இருக்கும் பூனையை வீட்டிற்குக் கொண்டு வந்தனர்.

வீட்டில் விட்ட வேகத்தில் எலியைப் பிடிக்கச் சமையலறைக்குள் பாய்ந்து சென்றது அந்த வெள்ளை நிறத்துப் பூனை. பூனையைப் பார்த்ததும் அந்த எலி பயத்தில் நடுங்கியது. அப்போது எலி சொன்னது!!!

“பூனையே!! பூனையே!!! நான் மிகவும் பாவம்! எனக்கு யாருமே இல்லை, நீயும் நானும் இனி நண்பர்களாக வாழ்வோமா!! ”என்று.

இந்த வீட்டில் பசிக்கு சாப்பிட எதுவும் கிடைக்காது. இந்த வீட்டிலிருந்து இருவரும் தப்பித்து ஒடி விடலாம் என்று தந்திரமாகச் சொன்னது. வெளியே இருவரும் தப்பித்துச் செல்லும்போது திடீரென ஒருவர் வந்து வைத்திருக்கும் வலையில் சிக்கிக் கொண்டார்கள். எலியையும், பூனையும் வலியுடன் சேர்த்து அவர்கள் ஒரு காட்டு பகுதியில் தூக்கி வீசி சென்று விட்டனர்.

அப்போது அங்கு சிங்கம் கம்பீரமாகக் கிட்ட வந்து பெரும் மூச்சு ஒன்று விட்டது. அம்மாடியோவ்!!!! எவ்வளவு பெரிய மூச்சு என்று பயந்து விட்டார்கள். எலியும், பூனையும் நடந்த சம்பவத்தை சிங்கத்திடம் கூறினார்கள். “சிங்க ராஜா! சிங்க ராஜா! எங்கள நீ தான் காப்பாற்ற வேண்டும் ” என்று மண்டி போட்டுக் கெஞ்சி அழுது கேட்டார்கள். சிங்கமும் மணம் மாறி இருவரையும் காப்பாற்றியது. “சிங்க ராஜா! சிங்க ராஜா! ரொம்ப ரொம்ப நன்றி சிங்க ராஜா” என்று ஆனந்தக் கண்ணீர் விட்டு மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள். இப்போது சிங்கம் எலி ,பூனை மூன்று பேரும் காட்டிற்குள் சுதந்திரமாக, உணவை மூவரும் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார்கள்.


வி.பிரித்தி
ஆறாம் வகுப்பு

ஊராட்சி ஒன்றியம் நடுநிலைப்பள்ளி.

வேப்பூர் ; நல்லூர் ஒன்றியம்
கடலூர் மாவட்டம்.

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x