27 April 2024

நூலைப் பிடித்து உயரே பறக்கும் காகிதம் பட்டம் நீ !
நூலைப் படித்து பட்டம் வாங்கி
உயரே பறக்கும் சிறுமி நான்!
குரங்கு வால் கொண்டு சேட்டை செய்யும் பட்டம் நீ !
வாலே இல்லாமல் சேட்டை செய்யும் சிறுமி நான் !
சிட்டாய் பறக்கும் சிங்கார பட்டம் நீ !
சித்திரம் போன்று சிறப்பாய் இருக்கும் சிறுமி நான் !

வண்ண வண்ண பட்டமே !
வளைந்து நெளிந்து போகும் பட்டமே !
வாலை ஆட்டி வானில் பறக்கும் பட்டமே !
சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த பட்டமே 1
விடாமுயற்சி வெற்றி தரும் என கற்றுக்கொடுத்த பட்டமே !
எனக்குள் மேலே பறக்கும் ஆசையை விதைத்த பட்டமே !
உன் போல் நானும் உயரனும்
என்னையும் அனைவரும் ஒரு நாள் அண்ணாந்து பார்க்கனும்.
பட்டுப் போல நீயும்
சிட்டு போல நானும் ஒன்றாய் சேர்ந்து பறக்கலாம்.


– கா. அமுதவல்லி

 நான்காம் வகுப்பு

ஊராட்சி ஒன்றியம் நடுநிலைப்பள்ளி;

வேப்பூர்; நல்லூர் ஒன்றியம்;

கடலூர் மாவட்டம்.

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x