28 April 2024

வா.மு.கோமு

வா. மு. கோமு என்ற பெயரில் எழுதி வரும் வா.மு.கோமகன், ஈரோடு மாவட்டம் வாய்ப்பாடியைச் சேர்ந்தஎழுத்தாளர். கொங்கு மண்டல வட்டார வழக்கில் கிராமம் சார்ந்த கதைகளையும் எதார்த்த இலக்கியத்தையும் படைப்பவர் என்றும், மனதில் நினைத்ததை எழுத்தில் சொல்லத் தயங்காத எழுத்தாளர் எனவும் பெயர் பெற்றவர். தமிழின் அனைத்து முன்னணி பத்திரிக்கைகளிலும் இலக்கிய பத்திரிக்கைகளிலும் இவரது கதைகள் வெளியாகியிருக்கின்றன. இவரது தவளைகள் குதிக்கும் வயிறு என்ற சிறுகதைத் தொகுப்பு 2008ம் ஆண்டின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விகடன் விருதை பெற்றது. 1991- ஆம் ஆண்டு முதல் ‘நடுகல்’ எனும் இலக்கியச் சிற்றிதழை நடத்திக் கொண்டிருக்கிறார். இவரது நூல்கள் : அப்பச்சி வழி - நினைவோடை குறிப்பு, அருக்காணிக்கு சொந்த ஊர் விஜயமங்கலம் - சிறுகதைகள் , அழுவாச்சி வருதுங்சாமி - சிறுகதைத் தொகுப்பு, எட்றா வண்டிய -நாவல் , என்னை மரணத்தின் வருகை என்கிறார்கள் - சிறுகதைகள், கள்ளி - நாவல் , கூப்பிடுவது எமனாக இருக்கலாம், சகுந்தலா வந்தாள் - நாவல், சயனம்- நாவல் , சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும்- நாவல் , சேகுவேரா வந்திருந்தார் - சிறுகதைகள், கூப்பிடுவது எமனாக இருக்கலாம் , பக்கத்து வீட்டு குதிரை- சிறுகதைகள் , பிலோமி டீச்சர் - சிறுகதைகள் , மங்கலத்து தேவதைகள்- நாவல் , மண்பூதம் - சிறுகதைகள், மரப்பல்லி - நாவல் , நாயுருவி- நாவல், தவளைகள் குதிக்கும் வயிறு - சிறுகதைகள், தானாவதி - நாவல், ரெண்டாவது டேபிளுக்கு காரப்பொரி- நாவல் , வேற்றுக்கிரகவாசி - சிறுகதைகள், ஐம்பத்தேழு சிநேகிதிகள் சிநேகித்த புதினம் , மாஸ்டர், ஒரு சாதா டீ - சிறுகதைகள், லவ் யு டி - சிறுகதைகள் காயாவனம்: சிறார் குறுநாவல், மாயத் தொப்பி - சிறார் கதைகள்.
உலகின் மிகப்பெரிய வனங்களுக்குள்ளும் கூட மனிதன் உள்நுழைந்து தன் தேவைகளை வனங்களிலிருந்து ஏதேனும் வழிகளில் பெற்றுக்கொள்கிறான். வானுயர்ந்து நிற்கும்...
எனக்கு என் வழியில் செல்ல முடியாமல் எல்லாப்பக்கமும் முட்டுக் கட்டையைப் போடுகிறார்கள் பலரும். இப்படித்தான் எல்லோருக்கும் நடக்கிறதாவெனவும் தெரியவில்லை....
இவனுக்கு இந்த வீதி வழியே ஏன் வந்தோமென்றிருந்தது. அதைவிட எதற்காக எங்கு போய்க்கொண்டிருக்கிறோம் என்பதும் புலப்பட வில்லை. பாக்கெட்டில்...
You cannot copy content of this page