3 December 2024
esther article

ந்தியப் பெருங்கடலில் மறைந்திருக்கும் அழகிய இரத்தினம் என்று வர்ணிக்கப்படுகின்ற இலங்கை தேசம் சுமார் 30-வருடங்களை விடுதலை வாழ்வை அனுபவிக்கவில்லை. காரணம் 1983 ம் ஆண்டு முதல் நடைபெற்ற உள்நாட்டுப்போர் முடிவுற்ற தசாப்தங்களைத் தாண்டிக் கட.த 2009 மே மாதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இருதரப்பிலும் லட்சக்கணக்கான உயிர்காவு கொள்ளப்பட்டது.நாடு கடந்து போனார்கள் காணாமல் போனார்கள் இந்நிலையில் மரத்திலிருந்து விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பது போல் 2019 ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று சம்பவித்த தொடர் குண்டு வெடிப்பு 5௦௦-க்கு மேற்பட்டோர் உயிரிழந்து அங்கவீனமானார்கள்.

இதன் நிமித்தமாக நீண்ட காலமாக யுத்தம் பின்வந்த உயிர்த்த ஞாயிறின் எதிர்பாராத குண்டு வெடிப்பில் திணறியது.அதன் நிமித்தமாக இலங்கைக்கு வருகிற சுற்றுலாப் பயணிகளின் வருகையும் வெகுவாகக் குறைந்துள்ளது.சுமார் 10 வருடங்களாக அசுர. வளர்ச்சியினை நோக்கிப் பயணித்த இலங்கையை மீண்டும் கொரோனா கொள்ளைநோய் சீர்குலைத்தது.ஆட்சியாளர்களின் தவறான பொருளாதாரத் திட்டச் சீர்குலைவினாலும் இலங்கை கடுமையான பொருளாதாரச் சரிவைச் சந்தித்தது.இப்போது அண்மைய நாடுகளிடம் கையேந்தும் நிலையில் ஏராளமான கடன் வெளிநாட்டுச் சுற்றுலாத் துறையின் வருகை குறைந்தநிலையிலும் இங்கு அந்நியச் செலாவணி தட்டுப்பாடு சுற்றுலா தளங்களின் மூடல் முதலான காரணங்களால் இலங்கை மேலும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

மட்டுமல்ல உக்ரைன் ரஷ்யப் போரினால் எல்லா பக்கமும் நெருக்கப்பட்ட சூழலில் மக்கள் இலங்கையில் எங்கெல்லாம் தெருக்கள் உள்ளதோ அங்கெல்லாம் இறங்கிப் போராடவும் கலவரத்தில் அரசுக்கு எதிராக செயற்படவும் நாட்டு தலைமை அரசாங்கத்தை விட்டு வெளியேறவும் கோத்தா கோ கம மக்களிடம் சமையல் எரிவாயு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அத்தோடு இணைந்த அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றமும் சாதாரண மக்களுடைய வாழ்வைச் சீர்குலைக்க, இதில் இலங்கையின் மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளி பெருந்தோட்ட மக்கள் வாழ்வும் பெரிதும் இக்கட்டுரையை நான் எழுதிக்கொண்டிருக்கும் வரையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் இல்லாத பஞ்சம் இலங்கை இலங்கையைக் கவிழ்த்துப்போட்டுள்ளது. 1972ம் ஆண்டு சிறீமா அரசாங்கத்தால் உள்ளூர் உற்பத்தியினால் தன்னிறைவு என்றதான தொனிப்பொருளில் ஆன வேலைத்திட்டங்கள் தன்னிறைவு அடையாத இந்தியாவிலிருந்து அடிமையாகக் கொண்டுவரப்பட்டு மலையகத்தில் குடியேற்றப்பட்டு தேயிலை கூலித்தொழிலாளர்கள் வாழ்வும் மட்டும்தான் தன்னிறைவு என்பது இன்று வரை அடையவேயில்லை.

ஓர் இறாத்தல் பாணுக்காக வரிசையில் நின்றதும் சோறு சமைக்க முடியாத அரிசியை தோட்ட தொழிற்சாலை. மலையக மக்களுக்கு ஒரு கொத்து அரிசி என்ற அடிப்படையில் வழங்கினர்.

மக்கள் அரைவயிற்றுக்குக் கஞ்சியும் பல குடும்ப அங்கத்தவர்கள் வீட்டில் பெண்கள் கஞ்சியும் இன்றி வெறும் தண்ணீரைக் குடித்தும் பிழைத்தனர். என்னுடைய தோட்டத்தில் வறுமையில் மிகவும் உழன்ற ஒரு குடும்பம் இரவு உணவாக கரும்பைச் சாப்பிட்டு இன்றும் ஓர் உண்மைச் சம்பவமே.

அப்போதைய பிரதமர் சிறீமா வோ பண்டாரநாயக்கா அவர்கள் உள்ளூர் உற்பத்தியில் தன்னிறைவு என்ற கொள்கையிலே இந்நிலை இவ் மலையக மக்களுக்கு ஏற்பட்டது.சிங்கள மக்கள் பலாக்காய் (கொஸ்) மரவள்ளிக் கிழங்கு வற்றாளை முதலான கிழங்குகள் உள்ளூர் உற்பத்திக்கான வயிற்றை நிரப்பியது.ஆகவே இந்த நெருக்கடியில் திண்டாடி திணறுவது மலைய மக்கள் அதிலுமே மலையகத்தில் நலிவுற்று நிற்கும் பெண் தொழிலாளர்களே.

வாகனங்களுக்கு எரிபொருள் அற்ற நிலையில் இரவு பகலாக வாகனங்கள் எரிபொருள் வரிசையில் காத்திருந்து தத்தளிக்கு மக்கள் 10.மணி முதல் 14 மணித்தியாலம் வரையான மின்சார வெட்டு இவ்வாறானை இக்கட்டான சூழலில் நாடு அகப்பட்டுக்கொண்டது. ஏற்கனவே மிகவும் நலிந்த நிலையில் வாழும் பெ.புந்தோட்டமக்கள் இன்னும் விளிம்பு நிலைக்குப் பின்தள்ளப்படுகிறார்கள். ஏற்கனவேதத் குழந்தைகள் மந்தப் போசாக்கும் சரியான உணவுப் பாதுகாப்பும் இல்லாத நிலையில் இவ் பொருளாதார சிக்கலில் மேலும் மந்தப்போசாக்கான நிலைக்கே கொண்டு செல்கிறது.

மலையகப் பெண்களின் வாழ்வியல் சூழல் :

இலங்கையின் தேயிலை இரப்பர் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் ஏற்கனவே மிக நீண்ட காலமாக ஊதியக்குறைவு பணிச்சுமை போதுமான உட்கட்டுமானம் வசதியற்றும் தொழில் பாதுகாப்பு இன்றி குறிப்பாக அட்டைத்தொல்லை குளவிக்கடி (பணியிடத்தில்) சிறுத்தைப்புலிகளின் நடமாட்டம் தாக்குதல் உயிரிழத்தல் கடும் மழை வெள்ளம் குடியிருப்பு பாதைகள் உடைதல் முதலான அசௌகரியமான வாழ்க்கைச் சூழலில் நிற்கிறார்கள். மேலும் மக்களுக்கு இவ் பொருளாதாரப் பேரிடரினால் தற்போதைய பொருளாதார நெருக்கடி இந்த தொழிலாளர்களின் மிகக்குறைவான நாட்கூலி அதிகமான விலையேற்றம் இடையில் சொக்கஇருதலைக் கொள்ளியாக திணறி நிற்கிறார்கள்.

இலங்கையில் மத்திய மலைநாடு எப்போதும் ரசிக்கத்தக்க இயற்கை செழிப்பு மிக்கதொரு இடம். ஆனால் இங்கே வாழும் பத்து லட்ச மக்களின் தொழிலாளர்களின் நிலை எப்போதும் அவலம் நிறைந்ததாகவே இருக்கின்றது.கடும் மழையில் நிலச்சரிவின் அபாயத்தில் வாழும் வீடுகள் அங்கிருந்து வெளியேறி கோயில் பாடசாலை மசூதிகள் அவசரக்கால கொட்டில்களிலும் வாழ்கிறார்கள்.

பலர் தினசரி கூலிகளாகவும் பணியாற்றுகிறார்கள்.அவர்களால் சொந்தமாக ஒரு சிறிய விட்டையேனும் கட்டுவது இயலாத காரியமாக ஆகி இருக்கின்றது.பெண்கள் தேயிலை மலையில் கொழுந்து பறிப்பதும் இறப்பர் தோட்டங்களில் பால் வெட்டுவதும் இவ்வேலைகளுக்கு 30 நாட்கள் வேலை கிடைத்தது.இப்போது வெறும் 20 – 23 நாட்களே வேலை கிடைக்கின்றது. இந்நிலையில் இப்பொருளாதாரச் சிக்கலில் 20 நாட்கள் வேலையும் இருபது ஆயிரம் ரூபா சம்பளமும் நாட்கூலியாகக் கிடைப்பதும் அம்மக்களுக்கு பெரும் மலையைக் கடப்பது போன்றதே.

மலையகத்தில் சுமார் 10 லட்சம் வரையான இந்திய வம்சாவளியினர் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.இந்நிலையில் அவர்கள் சுமார் இரண்டு லட்சம் பேர் தேயிலைத் தோட்டங்களாலும் இறப்பர் தோட்டங்களிலும் வேலை செய்கிறார்கள். இப் பெருந்தோட்டத்துறை மூலமாக சுமார் 1.5 மில்லியன் அந்திய செலாவணியை நாட்டுக்குள் கொண்டோ வரப்பாடுபடுகின்றனர். இத்தேயிலை ரப்பர் தொழில் துறையில் அதிகளவில் பெண் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல ஆண்டுகள் நடாத்திய. போராட்டங்களின் வெற்றியாக நாள் ஒன்றுக்கு ரூபாய் 1000/- சம்பளம் வழக்காக இணக்கப்பட்டு இருந்தபோதும் இன்று வரை அது அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

மலையகப் பெண்கள் தமது நாளாந்த வாழ்க்கையைச் சமூக பொருளாதார. அரசியல் பிரச்சினைகள் அதிகமாகக் காணப்படும் நிலையில் மேலும் மேலும் பொருளாதார இழப்பினால் பாதிக்கப்பட்டுள்ள இவர்கள் தேயிலைத் தோட்டங்களில் ஓய்வற்ற நீண்ட வேலைநேரமும் கடினமான மலைகளால் ஏறி மோசமான பாதைகளில் பயணம்செய்து பல்வேறு சிரமங்களின் மத்தியில் தேயிலைத்தோட்டத்தில் குறை கூலியில் தொழில் செய்கிறார்கள்.

இது மிகப்பெரும் வாழ்க்கைச் சவாலாகவே உள்ளது இரப்பர் தோட்டத்தில் பெண்கள் அதிகாலை 3-மணிக்குப் பால் வெட்டச் செல்கிறார்கள். தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறிக்கவும் எட்டு மணித்தியாலத்துக்கு மேல் லட்சக்கணக்கான பெண்கள் அங்கே தேயிலைப் பெருந்தோட்டத்தில் மலம் செல்ல கூட வசதியோ நீர் வசதியோ இன்றி மாதவிடாய் நாட்களிலும் பெரும்பாலான பெண்கள் துணித்துண்டங்களை பயன்படுத்துவதனால் அது நீண்டநேரம் இரத்தம் கசிந்து அவர்களின் தொடை சதைப்பகுதிகளில் புண்களாக்கி விடுகிறது.இதன் கடும் வலியும் வேதனையும் அனுபவித்துக்கொண்டு கடும் மழை நாட்களிலும் குளிரிலும் பெரிதும் துயரப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

பெண்களின் போசாக்கான உணவு மலையகத்தில் இன்றும் இல்லை என்பேன். அவர்களுடைய விருப்பமான உணவு கோதுமை மாவில் செய்யப்படும் ரொட்டியும் தேங்காய் சம்பலுமாகும்.மலையகத்தின் பிரசித்தமானதும் மக்களின் உணவும் ரொட்டிதான்.கடினமான வேலை செய்வதால் அவர்களுக்கு கார்போஹைதரைட் ரொட்டியில் அதிகமாக கிடைப்பதுடன் நீண்டநேரம் வேலைசெய்யும்போது பசியும் எடுப்பதில்லை.என்னுடைய வீட்டில் வாரத்தில் ஒரு தடவைதான் என்னுடைய அம்மாயி சோறு சமைப்பார்.சோறு சமைப்பது குளிர்காலத்தில் கடினம் என்பதனாலும் அவர்கள் அதிகமாக சோற்றைத் தவிர்த்து மாப்பொருளான கோதுமையை அதிகமாக எடுத்துக் கொள்கின்றார்கள் மீண்டும் மீண்டும் ரொட்டியிடமே சரணடைகிறார்கள்.

மலையகப் பொருளாதாரத்தில் மதுப்பாவனை (?) :

இலங்கையில் ஏனைய பிரதேசங்களைவிட மலையகத்தில் அதிகமான மதுபானக் கடையில் உள்ளன. என்னுடைய ஊருக்கு அட்டனிலிருந்து என்னுடைய தோட்டத்துக்கு பஸ் எடுக்கும்போது அட்டன் நகரில் 5 கடைகள் உள்ளன.அப்படி டிக்கோயாவில் 2 கடைகள் உள்ளன.அதைக் கடந்து புளியாவத்தைக்கு ஒரு மதுபானக்கடையும் புளியாவத்தைக்கும் விலாங்கிப்பனை எனும் இடத்தில் கிட்டத்தட்ட இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இன்னுமொரு மதுபானக்கடையும் உள்ளது. அதிலும் தேயிலைத்தோட்டத்தின் மத்தியில் உள்ளது.

அவ்மதுபானக் கடைகளைச் சுற்றியுள்ள தோட்டத்து மக்கள் மது அருந்த வருகிறார்கள்.முன்னர் சாஞ்சிமலையிலிருந்து 200/- கொடுத்து முச்சக்கரவண்டியில் சென்று குடித்தவர்கள் தற்போது எரிபொருள் தட்டுப்பாட்டால் எமது ஊரிலிருந்து கிட்டத்தட்ட 5கிலோமீற்றர் தொலைவு நடந்தே சென்று குடித்துவிட்டு நடந்தே வீடு திரும்புகிறார்கள்.கடும் மழை குளிர் கடுமையான வேலைப்பளு வேலைச்சூழலினால் குடும்பச்சுமை உட்பட்ட பல உளைச்சலினாலும் அத்துயரங்களை மறப்பதற்குக் குடிப்பதாக கூறுகிறார்கள்.

மிகவும் கஷ்டப்பட்டு கடின உழைப்பில் உழைக்கும் பணம் பெரும்பாலும் மதுபானக்கடைகளே உறிஞ்சுகின்றன. சில மதுபானக்கடைகள் தோட்டத் தொழிலாளர்களுக்குப் புத்தகம் போட்டு கடனுக்குக் குடிப்பதாகவும் சம்பளம் போட்டதும் ஆண்கள் அப்படியே மதுபானக்கடைக்கும் போய் அங்கே அவ் உண்டியலில் போட்டுவிட்டு வருகிறார்கள்.மதுபானக் கடையில் கடனைஅடைத்துவிட்டு மேலும் குடித்துவிட்டு வருகிறார்கள். ஏற்கனவே பெண்களின் மிகக்குறைந்த கூலியில் வறுமையில் தள்ளப்பட்டுள்ள குடும்பங்கள் இச்செயற்பாடுகளால் மேலும் துன்பத்தில் தள்ளப்படுவதுடன் தொடர் கடனாலும் உணவுப் பற்றாக்குறையினாலும் மன அழுத்தங்களினாலும் குழந்தை உணவு பிள்ளைகளின் கல்வி, உடல் நிலை போசாக்கின்மை அவ் பெண்களால் பேண முடியாமலும் அவல நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

ஆண்கள் மதுபானத்துக்கு அடிமைப்படும்போது பெண்களே குடும்பத்தின் சுமையைச் சுமக்கும் தொடர் நிலையும் துயர நிலையும் ஏற்படுகிறது. இதனால் குடும்பச் சண்டை வன்முறை ஏற்பட்டுப் பெண்ள் இரவெல்லாம் குடித்து விட்டு வரும் ஆண்களோடு சண்டையிடுவதும் குடும்ப வன்முறையும் இதனால் குழந்தைகள் மனநிலையில் துயரம் வளர்வதாகவும் உள்ளது. இதனால் மீண்டும் பிள்ளைகளின் பசிபோக்க கூடையைச் சுமந்து மீண்டும் அந்த மோசமான பாதையூடாகத் தேயிலைத் தோட்டத்துக்கும் இரப்பர் தோட்டங்களுக்கும் நடக்கிறார்கள்.

தொடர்ச்சியான வறுமையினால் வீட்டிலுள்ள பிள்ளைகளும் தம்முடைய கல்வியைத் தொடர விருப்பம் அற்று குடும்பப் பிரச்சினைக்குப் பணம்தானே தேவையென இளைஞர்களும் யுவதிகளும் கொழும்பு மற்றும் பிற வளர்ச்சியடைந்த நகரங்களைத் தேடிச் செல்கிறார்கள்.

கடந்த வருடம் இவ்வாறு குடும்ப வறுமை கடன் நிமித்தம் மலையக சிறுமியொருத்தி கொழும்பிலுள்ள அரசியல்வாதியொரு வரின் வீட்டில் வேலைக்குச் சென்ற நிலையில் தீவைத்து இறந்தமை முக்கிய விடமாகும்.இவ்வாறு பல சிறுமிகள் கொழும்பு பங்களாவில் வறுமை நிமித்தம் வேலைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்முறையும் அடிவாங்கியும் கடினமான வேலைகளைச் செய்வதையும் காணமுடிகிறது.நான் கொழும்பு வெள்ளவத்தை தெஹிவளை பம்பலபிட்டி பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில் சாப்பிடப்போகும் சந்தர்ப்பத்தில் அவ் உணவகங்களில் உணவு பரிமாறவும் எச்சிப்பாத்திரங்களை எடுக்கவும் தேநீர் தயாரிக்கவும் கொத்து ரொட்டி போடவும் தொழிலாளர்களைக் குறைந்த கூலியில் மலையகத்தில் இருந்தே செல்கின்றார்கள்.

அவர்களைக் கண்டதும் நீங்கள் எந்த இடம் எனக் கேட்கும்போது நிச்சயம் அவர்கள் மலையகத்தில் ஓர் இடத்தைக் கூறுவதைக் கேட்க முடியும்.

200 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் பெருந்தோட்டத்துறை தொழில் முயற்சிக்காக அழைத்து வரப்பட்ட பெண் தொழிலாளர்கள் கடந்த பல தசாப்தங்களாக இலங்கையில் அரசியல் சமூக பொருளாதார மட்டத்தில் மிகவும் பின்தள்ளப்பட்டு நிலைப்பாட்டிலே உள்ளனர். அண்மைக் காலமாக அபிவிருத்தி அடைவுகளிலிருந்து எல்லைப்படுத்தப்பட்டுள்ளார்கள். 21ம் நூற்றாண்டில் பெண்ணுரிமை தொடர்பாக பெரும்பாலும் நியதிகளில் இருந்து மலையகப் பெண்கள் புறந்தள்ளப்பட்டும் காணப்படுகின்றனர். இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு என வர்ணிக்கப்படும் பெருந்தோட்ட.துறை உற்பத்தியில் தேயிலையினை பெற்றுத்தரும் தொழிலாளர்களின் 65% மலையகப் பெண்கள் ஏனைய சமூக பெண்களின் அடிப்படை வேகத்துடன் ஒப்பிடும்போது இவர்களது இவ் முன்னேற்றமானது திருப்திகரமானதாக இல்லை. வளர்ந்து வரும் நாடுகளில் ஆண்களை விட ஏறத்தாழ இரு மடங்கு அதிகமாக பெண்கள் குறைந்த வேதனத்தைப் பெறுகின்ற தொழில்களிலே ஈடுபடுகின்றனர் நலிந்தும் உரிமையற்றும் வாழ்கின்ற மலையகத் தமிழ்ப் பெண்களைப் பொறுத்தவரையில் உலகமயமாக்குதலின் பாதிப்பில் உருவாகியுள்ள சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

ஆணாதிக்கக் கருத்தியலின் கங்காணி துரைமார் கணக்குப்பிள்ளை சூழலிலே வளர்க்கப்பட்டுள்ள பெருந்தோட்டத்துறை சமூகம் பெண்கள் தொழில் செய்யும் ஓர் இயந்திரப் பொருளாகியுள்ளனரே தவிர வேறில்லை.

அத்துடன் இவ் இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடியில் இன்னும் இன்னும் இன்னலுக்குள் ஆட்படும் பெண்கள் மலைநாட்டுப்பெண்களே. அதிகமான குடிபோதை அடிமையான ஆண்களினை கொண்ட குடும்பங்களில் குடும்ப வன்முறை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மலையப் பெண்கள் எப்போதும் ஓயாது ஒழியாது வேலைச்சுமை அதிகம் கொண்டவர்கள். இங்கே வருமானம் திரட்டும் உழைப்பாளிகளும் தனிப்பட்ட நிலையில் குடும்ப சுமை சுமக்கும் சுமைதாங்கிகளை நாளாந்தக் கடினமான வேலையை அதிகாலை முதல் பத்துக்கும் எட்டுக்கும் உள்ள காம்பிராவில் சுருண்டு படுக்கும் இரவு வரைக்கும் அவர்களின் சுமையும் வேலையும் நாம் பட்டியலிட முடியும்.

அதிகாலை 5 மணிக்கு எழுந்து பின்னர் உணவுத் தயாரித்து 6.30 மணிக்குப் பிள்ளைகளை ஆயத்தப்படுத்தி 7 மணிக்குப் பிள்ளை மடுவத்தில் பிள்ளையைக் கையளித்துவிட்டு 7.30 மணிக்குத் தேயிலை மலைக்கு ஏறி தேயிலையை 11 மணிவரை பறித்து அதன் பின்னர் சிறுதேநீர் இடைவேளை பெற்று மதியம் வீடுதிரும்பி பிள்ளைமடுவத்தில் பிள்ளையை எடுத்து அக்குழந்தையைப் பராமரித்து உணவு ஊட்டி வீட்டாருக்கும் உணவு தந்து மீண்டும் அவ்தொழிலாளிகள் உண்ணும் உண்ணாமலும் கழுவியும் கழுவாமலும் பிள்ளைமடுவத்தில் மீண்டும் குழந்தையைக் கையளித்து விட்டு 2 மணி முதல் 5 மணிவரை தேயிலை மலையில் வேலை செய்கிறார்கள். வேலைக்குப் பின்னால் ஓய்வு, கொண்டாட்டம், பொழுதுபோக்கு,எதுவுமேயில்லை. அதை அவர்கள் உணர்வதும் இல்லை.

24.822மில்லியன் ரூபாய் வருமானம் பெறும் இலங்கை தேயிலைச் சபையின் தலைவர் ஜெய முல்லி சொய்சா தெரிவித்தார். குறுகிய காலத்தில் 2020 இல் 867.70 ரூபாய் கொண்ட ஒரு கிலோ கிராம் தேயிலை விலை 2021 ம் ஆண்டு இறுதியில் 926.76 ரூபாயாக அதிகரித்தது.ஆனால் மலையக மக்கள் 1000 என்ற ஒருநாட்கூலி என்பது மிகவும் எட்டமுடியாத உயரத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றது. 24.822 மில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டித்தரும் மலையக மக்களுடைய வாழ்க்கைத்தரம் 1% ஆலும் தகுதி அடையவில்லை.

ஆங்கிலேயர் காலத்தில் காம்பிராவில் லயம் வாழ்க்கை முறையும் தோட்டுப்புறங்களால் பெரும் போராட்டமாக உள்ளது.மலசல கூடங்கள் சுத்தமான பாதுகாப்பான நீர் வசதியுமின்றி தோட்டத்து மக்கள் காடுகளுக்கும் நீர் நிலைகளாலும் மலம் கழிக்கச் செல்லவேண்டியுள்ளது.மலையக மக்களின் உழைப்பை மட்டுமே எடுத்துக்கொண்டு இவ்வளவு காலம் இலங்கை அரசும் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக அரசியல் கட்சிகளும் இன்று வரை அவர்களின் வாக்கு வங்கிகளுக்கென பங்காளியாகவுமே வைத்திருக்கிறார்கள். அல்லாது தரமான வாழ்க்கை நீடித்த பொருளாதார கட்டமைப்பை இன்றுவரை அவர்களுக்குத் தரவில்லை என்பது உலகம் அறிந்த பேருண்மை

கடந்த ஆனி மாதத்திலிருந்து தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் சம்பளம் பெறும் விகிதம் மாறியிருக்கின்றது.தேயிலைத் தோட்டங்களால் சிதைந்து வரும் நிலையில் சம்பளமென்பது மாறி தற்போது பறிக்கும் தேயிலையின் அளவுக்கேற்ப கூலி வழங்கப்படுகின்றது. போதிய உரமின்மை பராமரிப்பின்மை ஆகிய பிரச்சினைகளால் தேயிலை கொழுந்து போதியளவு கிலோவுக்கு எடுக்க முடியவில்லை. இந்நிலையில் இத்தொழிலாளர்கள் பறிக்கும் தேயிலை அளவும் கிடைக்கும் கூலியும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த நிலையில் இலங்கை பொருளாதார நிலை அம்மக்களைக் கடுமையாகத் தாக்குகின்றது. அதிலும் மலையக பெண்களின் நிலை மிகவும் மோசமான பேரிடரை அவர்களிடம் விழுந்திருக்கின்றது.

ஒரு நாளைக்குப் பெண்கள் 20-கிலோ கிராம் தேயிலை பறிக்க வேண்டும். ஒரு கிலோ 45 /- ரூபாய்களாகும்.பல சமயத்தில் 500-600ரூபாய்தான் சம்பளமாகக் கிடைக்கும்.இச்சம்பளத்தை இவ் மலையக மக்கள் இலங்கையின் இக்கட்டான பொருளாதார நிலையில் ஒரு வேளை உணவைக் கொள்ளுமளவு செய்ய இயலாத நிலைக்குள் மீள முடியாதவாறு தள்ளப்பட்டுள்ளனர். பாண் இறாத்தல் ஒன்று 290/- ரூபாய்களாகும் கோதுமை கிலோ 400/- இதனால் சில அங்கத்தவர்கள் கொண்ட குடும்பத்திலோ அல்லது பல அங்கத்தவர்கள் கொண்ட குடும்பத்திலும் முழுமையான பசியினை போக்க இயலாத நிலையே உள்ளது.

மலையகப்பெண்கள் தொழில் தேடி வெளியேறுதல்:

இவ் பொருளாதார நெருக்கடி நிலையில் பெருந்தோட்டப் பெண்கள் தொழில் தேடித் தொலைவிலுள்ள நகரங்களுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் வெளியேற ஆரம்பித்துள்ளனர்.இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தொழில் சங்கங்கள் கம்பனிகளள் இடையில் கூட்டு ஒப்பந்தம் செய்யப்படும் இவ் ஒப்பந்தயத்தில் எத்தனை நாள் வேலை எப்படி சம்பளம் எத்தனை நாள் விடுமுறை புதிதாக தேயிலை பறிக்க ஆட்களை எவ்வாறு சேர்ப்பது சம்பள படிகள் இணைப்பது என 21 அம்சங்கள் முடிவு செய்யப்படும்.ஆனால் இம்முறை கூட்டு ஒப்பந்தத்தில் நடக்கவில்லை இதனால் மலையகக் கட்சிகளும் தோட்டத் தொழிலாளர்களின் தினக்கூலி 100/- என்ற வாசகமே வாக்குச் சேகரிப்பு காலத்தில் தாரகமந்திரமாக வைத்து அரசியல் செய்கிறார்கள்.அரசாங்கத்தின் தினக்கூலியாக 1000/- உயர்த்தவும் அரசு ஆணை (Gazzatte) வெளியிட்டாலும் தோட்டக்கம்பனிகள் இவ் உத்தரவுக்குச் செவி சாய்ப்பதாக இல்லை. அத்தோடு அரசினுடைய ஒப்பந்தத்துக்கு இணங்கி வராததால் அவ் அரசின் ஒப்பந்தம் எதனையும் நடைமுறைப்படுத்த இயலவில்லை. இது மேலும் தோட்டத் தொழிலாளர்களின் நாட்கூலியை மேலும் மோசமாக்கிக் கொண்டு செல்கிறது.

இவ் இலங்கையின் பெரும் பொருளாதார பேரிடரை மலையகம் இப்போது கணிசமான பெண்களின் மத்திய கிழக்குநாடுகளுக்கு பயணிக்கிறார்கள்.ஆரம்பத்தில் தேயிலைத்தோட்ட. வேலையை விடுத்து ஆடைத்தொழில் சாலைகளில் ஈடுபட்டுள்ளன இப்போது ஆடைத்தொழிற்சாலையின் வருமானம் போதாதக் காரணத்தினால் மலையக யுவதிகளும் பெண்களும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வெளியேறுகின்றனர்.குழந்தைகள் கணவர் பெற்றோர் உற்றாரை விட்டு வறுமையின் கைவிலங்கை உடைக்கும் நோக்கில் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணிக்கிறார்கள்.அங்கே செல்லும் பெண்கள் எல்லோரும் நல்ல எஜமானர்களுடன் நல்ல் பணக்காரர்களின் வீட்டில் வேலை செய்து உடனே இவர்கள் பணக்காரர் ஆவதில்லை.அங்கேயும் அவர்கள் மிகவும் துன்ப நிலையில் அகப்படுகிறார்கள் சிலபெண்கள் உயிரை. துச்சமென நினைத்து வீட்டை விட்டு தன் சொந்த நாட்டுக்கு பிணப்பெட்டியில் வருகிறார்கள்.பொருளாதார நிலையை மாற்றத்தான் புறப்படும் இவர்கள் திரும்பி பிணப்பெட்டிகளால் திரும்பி வருகிறார்கள்.

இவ்விடத்தில் ஒரு விடயத்தை முன்வைக்க விரும்புகிறேன்.மிகவும் மலினத்தனமான வேலையைத்தான் இலங்கை அரசாங்கமும் செல்கிறது.வறுமை வறுமை என்ற ஒரே ஒரு காரணத்தினால் மாத்திரமே மலையகப்பெண்கள் மட்டுமல்ல இலங்கையில் வாழும் அனைத்து ஆண்களும் பெண்களும் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்கிறார்கள். ஒப்பீட்டளவில் தமிழ் நாட்டிலிருந்து பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வருவது குறைவு .ஆண்கள் வருகிறார்கள் காரணம் தமிழ்நாட்டில் உணவினைப் பெற்றுக் கொள்ளும் உன்னத நிலை அங்குண்டூ தமிழ்நாட்டில் தவிர ஏனைய மாநிலம் கேரளப் பெண்கள் அதிகமாக மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றுகிறார்கள். விடுதிகளிலும் ஹோட்டல்களிலும் அரபிக்காரருடைய வீடுகளிலும் கடைத் தெருக்களிலும் கேரளப்பெண்கள் வட மாநிலப் பெண்கள் வேலை செய்வதை நானறிவேன். ஆயினும் தமிழ் நாட்டுப் பெண்கள் ஒப்பீட்டளவில் குறைவு.

இலங்கையில் சுதந்திரம் பெற்றதிலிருந்து 40 வருடங்களாக மலையகப் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணம் செய்துகொண்டிருக்கிறார்கள். இதனால் வெளிநாட்டு வருவாயில் லாபமடைவது அரசியல்வாதியும் இதனை அண்டிப் பிழைப்பவர்களுமே மத்தியக்கிழக்கு தேடிப்பயணிக்கும் அவர்களைத் தடுத்து உள்ளூரிலே தன்னிறைவு பெறும் எந்தவாத பூரண பொருளாதார நடப்புத் திட்டங்கள் பெண்கள் மத்தியில் அவர்களால் செய்யமுடியவில்லை. மத்திய கிழக்கில் எம் பெண்களை அடிமைகளாக அரேபியர்களின் வீடுகளில் ஒட்டகம் வளர்க்கும் பெண்களாக இவர்களை அனுப்புகின்றார்கள்.காரணம் வெளிநாட்டுப்பணம் உள்நாட்டுக்கு வரவேண்டும் அதில் தங்கள் வசதியாய் வாழுவதேயாகும். கிட்டத்தட்ட இலங்கை அரசாங்கம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இவ் இலங்கை மக்களைக் மறைமுகமாகக் கூட்டிக் கொடுத்தே உழைக்கிறார்கள்.

இப்போதும் என்ன சொல்கிறார்கள் எமக்கு அந்திய செலாவணி தேவை ஆகவே வெளிநாட்டுக்கு போய் உழைத்து வாருங்கள் எனப் பகிரங்கமாக அழைப்பும் வேண்டுகோளும் விடுகிறார்கள் அங்கே இடம்பெறும் சட்டக்கொலைகள் (சவூதி அரேபியாவின் தலை வெட்டுதல் கைகால் துண்டித்தல்) வன்முறைகள் பாலியல் கொடுமைகள் முதலான அத்தனை துன்பத்தினையும் கண்டும் காணாது இலங்கை இருக்கின்றது.பாதிக்கப்பட்டவரின் பக்கம் ஒருபோதும் முழுதாக இலங்கை அரசு நின்ற வரலாறு இல்லை.ஆகவே இவ் துன்பகரமான நிலையில் அகப்பட்ட பெண்கள், உழைக்கும் மலையகப் பெண்கள் மத்திய கிழக்குக்கு நாடுகளுக்குச் செல்கிறார்கள்.அவர்கள் வேலைக்குச் சென்று இங்கே வாழும் அவளின் பிள்ளை பாடசாலைக் கல்வியை இடையில் கைவிடுகிறார்கள்.கணவன் அவர்கள் அனுப்பும் பணத்தை ஊதாரியாக செலவழித்துவிட்டு கடைசியில் இவ்வளவு காலமாக உழைத்தப் பெண்கள் நாடு திரும்பும் போது மீண்டும் வறுமை நிலைக்கு ஆளாகிறார்கள்.

தேயிலை, றப்பர் என்பவற்றின் உற்பத்தி, ஏற்றுமதி என்பவற்றிற்கூடாகத் தோட்டத்தொழிலாளர் இந்நாட்டின் செல்வவளத்திற்கு கணிசமாக பங்களித்து வருகின்றனர். கடந்த காலங்களில் அவர்களது கடும்உழைப்பே நாட்டின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கும் இந்நாட்டில் வாழும் ஏனைய சமூகத்தினர் அடைந்துள்ள பௌதீக வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்கும் ஆதாரமாகவிருந்தது. இன்றுங்கூட, அவர்களது கடுமையான உழைப்பே நாட்டுமக்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பண்டங்களை இறக்குமதி செய்வதற்கான வெளிநாட்டு செலாவணியில் கணிசமான பகுதியை ஈட்டிக்கொடுக்கின்றது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும், அண்மைக்காலம்வரை அரசாங்க வரிவருமானத்திற்குங்கூட அவர்களது உழைப்பு பெரும் பங்களித்து வந்தது. ஆனால் இதற்கு மாறாக, பொருளாதார அடிப்படையிலும், கல்வி, சுகாதாரம், சமூகஏற்புடமை, சமூக-கலாசார வளர்ச்சிக்கான வாய்ப்புக்கள் என்பவற்றிலும் அவர்களது நிலை துரதிர்ஷ்டவசமான ஒன்றாகவே இருந்து வருகின்றது. சுகாதார – இருப்பிடவசதிகள், கல்வி, சிசு மரணவிகிதம், போஷாக்கு போன்ற பல்வேறு சமூகஅபிவிருத்திக் குறிகாட்டிகளினடிப்படையில் தோட்டத்தொழிலாளர் இன்றும் மோசமான நிலையிலேயே உள்ளனர்.

இத்தகைய துன்பகரமான நாட்டின்நிலைமையில் மக்களின் மனங்கள் மிக துயரத்தோட இருக்கிறது.மலையக மக்கள் இந்த நிலையை கடந்து வர நீண்டநாட்களாகும் என்கிறது ஆய்வுகள் மலையக மக்களின் இந்த பொருளாதாரச் சூழலில் மலையப்பெண்கள் இன்னும் என்ன செய்வது என விழிபிதுங்கி நிற்கிறார்கள் தங்களால் தம் பிள்ளைகளுக்கு மூன்று வேளை முழுமையான உணவை தந்துவிட முடியாத அவலநிலை அவர்தம் சூழலில் உள்ளது அரசாங்கத்திடம் கோதுமை மாவுக்கும் இன்னும் பிறதேவைக்கு அவர்கள் மானியங்களை கோரிக்கையாக வைத்துள்ளார்கள்.அரசுமே இம்முறை அவ் மக்களின் வாழ்வியலில் கவனம் செலுத்துவதாக சொல்லியுள்ளது பொறுத்திருந்து பார்ப்போம் காலம் மலையக மக்களுக்கு கை கொடுக்குமா இல்லை கை விடுமா என்று.


உசாத்துணை :

1. எழுநா – இணைய சஞ்சிகை
2. பால்நிலை சமத்துவம் -கமலினி வெளியீடு பெண்கள் சமூக ஆய்வு நிலையம் கொழும்பு
3. The fall& Rise of Tamil nation page -130
4. https://www matram.org
5. nimirvu.org
6. vararamanjary.lk
7. Central bank of Sri Lanka http://www.cbsl.gov.lk
8.archive.valaiththalam.lk

எழுதியவர்

எஸ்தர்
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x