ஒரு களியாட்ட விடுதிக்குள்
கறுப்பு நடுநிசி பரபரப்பாக
இருக்கிறது
ஆணும் பெண்ணும்
களைப்பை மறந்து
ஆடுகிறார்கள்
தழுவுகிறார்கள்
பின் மயங்குகிறார்கள்
மின் விளக்குகளோ கருங்காலிகளைப்போல்
மூச்சையும் கண்ணையும்
இறுக்குகின்றது.
நிக்கோட்டின் புகையில் மூச்சுக்குழாய்
திணறும் சத்தம்
யாருக்கு கேட்கவில்லை.
தமிழ் சிங்கள வேகமான ஆங்கில பாடல்களையும் மாறி மாறி மாற்றுகிறான்
நடனத்துக்கேற்ப
கபரோவின் இசைஞன்.
மதுவுக்கும் பஞ்சமில்லை
வஞ்சமுமில்லை.
மதுவைக் கையிலேந்திய வீரர்கள்
அமெரிக்காவின் சுதந்திர தேவியின் தீபமென
Cheers பாடுகிறார்கள்
பிரியமான பெண்ணுக்கு பருகி விடுகிறார்கள்.
போதையின் கசப்பை விழுங்கி கண்களை இறுக்குகிறாள்.
நூலிடை பெண்ணொருத்தி
இடையை ஆட்டுகிறாள்
இடை கவனம் பெண்ணே மெதுவாக ஆட்டு
இதோ ஓய்வை கொண்டாடுபவர்களோடு நானும்
நுழைகிறேன் ஓய்வற்ற நான்.
மாயையின் நிறத்தை உடல் உறிஞ்சிக்கொண்டது
மழையை விழுங்கும் நிலமென.
உன் முகத்தையொத்த தாடிவைத்தை இளைஞனைப் பார்த்து
முறுவலித்தேன்
முகமெல்லாம் பல்லாகினான்.
எதில் எதில் இன்பம்
ஒரு ஆடையைப்போல அணிய வேண்டும்.
எதில் எதில் துன்பம்
ஒரு ஆடையைப் களைந்திடல் வேண்டும்.
கபரோவின்அறைக்குள் உன் பிரிவை
கொண்டாடுகிறேன்
சொற்ப நேரம்
துயரறிந்து கோப்பை மதுவில் கசிகிறது கசப்பு
நிறைந்து வழிகிறாய்
உடலெங்கும்
மேலும் கீழும்.
மதுவை வார்க்கிறேன்
நுரைத்து வழிகிறாய்
உன்னை அருந்திட வேண்டும்
அல்லது கோப்பை வெறுமையாக
வேண்டும்
கபரோவின் இரவு
அணையும் முன்.
எழுதியவர்
இதுவரை.
- சமூகம்26 November 2022இலங்கையின் தற்போதைய பொருளாதார பேரிடரில் மலையகப் பெண்களின் நிலை.
- கவிதை16 July 2021கறுப்பு நடுநிசி