கத்தரி ஊசிநூலுடன் ஒருவனிடம்
நவீன இலக்கிய தையற்கூடத்தில் ப்ரியம் ததும்பும் கெட்டவார்த்தைகளுடன் கொட்டிக்கிடக்கின்றன் துண்டுத்துணிகளாய்.
அது சரி
நல்ல வார்த்தைகளை எங்கு தேடுவது?
மாநகர் என்பது இசங்களால் இன்னதென
இனம்பிரிக்கமுடியாத மகா ஓவியமென்கிறான் விமர்சகன்.
நெல்மரங்களைப் பற்றி எழுதும் கவிஞர்களால் நிறைந்தது இம்மாநகர்
அமாவாசைக்கு மேல்மலையனூர்
பவுர்ணமிக்கு திருவண்ணாமலை
சிறப்புப் பேருந்துக் கூட்டம் பார்த்து எள்ளிச் சிரிக்கும் மூன்றாம் பிறை.
ஊனு கழிச்சோ ?
ஊட்டாயிட்டா ?
போன் சேஸ்தாவா?
க்கானா க்காலியா?
சாப்பிட்டீங்களா?
ஹேட் யுவர் மீல் ? (had ur meal)
துமாசே ஜேவானா க்காலி?
வாஞ்சை பூத்த வார்த்தைகளுள்
மொழிப் பேதமறியா
நாடோடிக்கடவுளுக்கில்லை எல்லை.
எழுதியவர்
இதுவரை.
- நூல் விமர்சனம்29 July 2024பிரசாந்த்.வே எழுதிய “ஆனைமலை” நாவல் – ஓர் அறிமுகம்.
- சமூகம்1 December 2023சாதியத்திற்கு எதிரான சுயமரியாதை போராட்டம் !
- சிறார் பாடல்கள்8 June 2023பட்டம்
- சிறார் கதைகள்8 June 2023மாய வால் குரங்கு