ததக்கா.. பித்தக்கா நடையோடு, சல்… சல் ஒலி எழும்ப ” தாத்தா……….தாத்தா…..” என்றழைத்த படி நடந்து வந்த குழந்தை அம்மா மலரின் தலையைக் கைகளால் கோதியது.
குவா…குவா…குவா…
“பாரு அதிசயத்த! இவளோ நேரம் அழுகாத குழந்தை உங்களைப் பார்த்ததும் எப்படி அழுகுது பாருங்க முத்துசாமி” என்று அதிசதித்தார் டாக்டர்.
தலையில் அப்பவே குடுமி போடலாம் போல கொள்ளை முடியோடு இருக்கும் தன் மகளைக் கைகளில் ஏந்தி “எனக்கு மகாலட்சுமி பொறந்து இருக்கா” என்று பெருமிதத்தோடு தலையைக் கோதும் கைகள்.
” அப்பா…இன்னைக்கு நடந்த பேச்சுப் போட்டியில் நான்தான் முதல் பரிசு” என்ற மகளின் தலையை அன்போடு கோதும் கைகள்.
” அப்பா… கல்லூரியில் முதல் மதிப்பெண். எனக்கு தங்கப் பதக்கம் கிடைக்கப் போகுது” என்றவள் தலையை ஆனந்தக்கண்ணீரோடு கோதும் கைகள்.
மாலையும் கழுத்துமாய் கணவனோடு ஆசிர்வாதம் வாங்கும் மகளின் தலையைக் கண்மறைக்கும் கண்ணீரோடு கோதும் கைகள்.
பேரனைக் கையில் ஏந்தி, “தங்கமே, என் பேரன் முன்னாடி தரம் இழந்து போயிரும் அத்தனை அழகு “ என்றபடியே மகளின் தலை கோதிய கைகள்.
கண்ணெதிரே காட்சிகள் மாறி மாறி ஓடிக் கொண்டிருந்தன.
ஊதுவத்தி புகை வீடு எங்கும் நிரம்பி இருக்க, மாலை அணிவிக்கபட்ட புகைப்படச் சட்டத்துக்குள்ளிருந்து நீண்ட முத்துச்சாமியின் கைகள் தலையைக் கோதிய உணர்வு.
“அப்………..பா………” என்ற கதறிய மலரின் தலையைக் கோதியபடி அணைத்துக்கொண்டது குழந்தை.
எழுதியவர்
-
BE, MBA பட்டப்படிப்புகளை பயின்ற பூங்கொடி கல்லூரி விரிவுரையாளராக பணியாற்றியவர். தற்போது கட்டுமானத்துறை வேலையில் அவரின் கணவருக்கு உதவியாக பணிபுரிகிறார்.
குழந்தைகளுக்கான கதை சொல்லியாகவும் திகழ்கிறார் . ‘பூங்கொடி கதைசொல்லி’ என்ற Youtube வாயிலாகவும் , அரசாங்க மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சென்றும், இணைய வழி நிகழ்வுகள் வாயிலாகவும் கதைகள் சொல்லி வருகிறார்.. கதைகள் வாயிலாக நற்பண்புகள் வளர்த்தல் பயிற்சியில் தமிழ் பாடம் கதைகள் மூலம் கற்பிப்பது எப்படி என்பதை அரசாங்க பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார் சுவடு இதழில் மார்பகப் புற்றுநோய் குறித்தான விழிப்புணர்வு கட்டுரைகள் எழுதியுள்ளேன். இவற்றோடு கல்லூரி மாணவர்களிடம் தன்னம்பிக்கை உரைகள், ஆளுமை பயிற்சிகள் அளித்தவராகவும் திகழ்கிறார். புத்தகங்கள் குறித்தான விமர்சனங்களை தொடர்ச்சியாக சமூக ஊடகங்கள் உள்ளிட்டவைகளில் முன்வைக்கும் பூங்கொடி முற்போக்கு கலை இலக்கிய மேடை அமைப்பின் தஞ்சை பிரகாஷ் நினைவு விருது, உலகத் தமிழ் பேரியக்கம் வழங்கிய தங்க மங்கை விருது, முற்போக்கு கலை இலக்கிய மேடையின் கதைசொல்லி விருது போன்ற விருதுகள் பெற்றவர்.
கண்மணிகளின் கலாட்டாக்கள், மந்திரக் கோட் ஆகிய சிறார் இலக்கிய நூல்கள் இவரின் எழுத்தில் வெளியாகி இருக்கின்றன.
இதுவரை.
- சிறார் இலக்கியம்9 June 2023நீயும் நானும் ஒன்னுதா
- குறுங்கதை18 October 2021தகப்பன்சாமி
கோதும் கைகள்… நெகிழ்ச்சி.அருமை பூங்கொடி 💐💐💜💙
அருமை.. வாழ்த்துக்கள்.. அப்பாவின் ஞாபகம் வந்தது.. நன்றிகள்