மரங்கள் நிறைந்து இருப்பதால் இவ்வூர்க்கு மரவூர் என்ற பெயர் வந்தது. அங்கு உள்ள மரத்தில் பூத்துக்குலுங்கும் பூக்களில் உள்ள தேனை சுவைக்க வண்ணத்துப்பூச்சியும், தேனிகளும் சூழ்ந்துக் கொள்ளும்.
மரவூர் உள்ள ஒரு வீட்டில் இருந்து “அம்மா அம்மா” என்று கூப்பிட்டாள் அபி.
“என்ன” என்று கேட்டார் அம்மா.
“அம்மா, அம்மா ஆதி தம்பி நான் டிவி பார்க்க ரீமோட்டை தரவில்லை.
“அம்மா இல்லை, நான் தந்தேன். அபி அக்கா ஃபோன் தான் வேண்டும் என்று கேட்டாள் என்றான் ஆதி.
“இரண்டு பெரும் டிவி, ஃபோன் பார்க்க வேண்டாம். எப்போதும் டிவி, ஃபோனும் தான்” என்று இருவரையும் திட்டினார் அபியின் அம்மா.
“அபி அக்கா வாருங்கள். நாம் கவினா வீட்டில் சென்று டிவி பார்க்கலாம்” என்று சிரித்துக் கொண்டே ஆதி கூப்பிட்டான்.
அபியும் கோவத்தை மறந்து, “சரி போகலாம்” என்று தன் அம்மாவிடம் நாங்கள் கவினா வீட்டில் சென்று விளையாடுகிறோம் என்று கூறிவிட்டு வெளியே வந்தனர்.
அப்போது போது பறவைகளின் “கீச் கீச் ” சத்தத்தைக் கேட்ட அபி. “அங்கே பார் ஆதி, அந்த மரத்தைச் சுற்றி நிறைய பறவைகள் கீச் கீச் என்று சத்தத்தைக் எழுப்புகிறது. மேலும் அங்கே நிறைய வண்ணத்துப்பூச்சிகளும், பறவைகளும், தேனீக்களுக்கும் சூழ்ந்துள்ளது”என்றாள்.
“ஆமாம், ஏன் இப்படி அனைத்தும் மரத்தை சூழ்ந்துள்ளது? நாம் கவினா, மகிழ், அவந்தியும் அழைத்துச் சென்று பார்க்கலாம்” என்றான் ஆதி.
அபியும், ஆதியும் அவர்களது நண்பர்களை அழைத்துக் கொண்டு மரத்தின் அருகில் சென்றனர். அங்கே பறந்து கொண்டிருந்த ஒரு பறவையிடம், “தேன் சீட்டே, ஏன் இப்படி மரத்தை சுற்றி அனைவரும் கூச்சலிட்டு கொண்டும், வண்ணத்துப்பூச்சிகள், தேனீக்கள் பறந்துக் கொண்டும் உள்ளது” என்று அபி கேட்டாள்.
அதற்கு தேன்சிட்டு “நாங்கள் அனைவரும் இந்த மரத்தில் பூக்கும் பூக்களில் உள்ள தேனைக் குடித்து மகிழ்ச்சியாக இருப்போம். இன்றும் பூவில் உள்ள தேனை குடிக்க வந்தோம் என்றது.
உடனே வண்ணத்துப்பூச்சிகள் நாங்கள் வலது பக்கம் உள்ள மொத்த பூவையும் ருசித்து பார்த்தோம் ஒரு பூவில் கூட சிறு துளி தேன் இல்லை என்றது.
தேனீ கூட்டங்களும் இடது பக்கம் உள்ள மொத்த பூவையும் ருசித்து பார்த்தோம் ஒரு பூவில் கூட சிறு துளி தேன் இல்லை” என்று கூறினார்கள்..
“நாங்கள் ஆச்சரியத்தோடு அப்படியா! ஏன் பூக்களில் தேன் இல்லை என்று கேட்டோம்” என்றது தேன்சிட்டுகள்.
“எங்களுக்கும் தெரியவில்லை” என்றன வண்ணத்துப்பூச்சியும், தேன் பூச்சியும்.
நாங்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பூக்களிடம் “பூக்களே, பூக்களே ஏன் உங்கள் பூவில் தேன் இல்லை. உங்களிடம் உள்ள தேனை வேறு வண்ணத்துப்பூச்சியோ, தேனீயோ, பறவைகளோ, வேறு பூச்சிகளோ சுவைத்துவிட்டதா?” என்று நாங்கள் அனைவரும் பூவிடம் கேட்டோம்.
“இல்லை, இல்லை. என்னிடம் தேன் உருவாகவே இல்லை” என்றது பூ.
“அப்படியா! ஏன் தேன் உருவாகவில்லை” என்று கேட்டோம்.
அதுக்கு பூக்கள் “எங்களுக்கு தெரியவில்லை?” என்று வருத்தமாக கூறின.
இதனைக் கேட்ட அபி எதனால் பூவில் தேன் இல்லை..?
இதற்கான பதில் மரத்திற்கு தான் தெரியும். நாம் மரத்திடம் கேட்கலாம் என்றனர் ஆதி மற்றும் அவர்களின் நண்பர்கள்.
ஆதி, “மரமே! மரமே! ஏன் உனது பூக்களில் தேன் இல்லை என்றான்.
“அதெல்லாம் கூற முடியாது” என்றது மரம்.
“தயவுசெய்து என்னவென்று கூறுங்கள் எங்களால் முடிந்த உதவி செய்கிறோம்” என்று மீண்டும் மீண்டும் சிறுவர்கள் கேட்டனர்.
முடியாது! முடியாது! உங்களால் எனக்கு உதவி செய்யவே முடியாது என்றது மரம்.
கண்டிப்பாக நாங்கள் உங்களுக்கு உதவி செய்வோம். உங்கள் பூக்களில் தேன் இல்லாததால் தேன்சிட்டுகள், பறவைகள் வண்ணத்துப்பூச்சிகள், தேனீக்கள் என்று அனைவரும் கவலையாக உள்ளனர்” என்றான் ஆதி.
“சரி, சரி நான் கூறுகிறேன். நான் கவலையாக இருப்பதால் தான் பூவில் தேன் இல்லை” என்றது மரம்.
“ஓ.. அப்படியா! ஏன் கவலையாக உள்ளீர்கள்?” என்று சிறுவர்கள் கேட்டனர்.
“என் கவலைக்கு காரணம் சிறுவர்களாகிய நீங்கள் தான்” என்றது மரம்.
“நாங்களா!! நாங்கள் எப்படி உங்கள் கவலைக்கு காரணமாணவர்கள்?” என்றான்ஆதி/
“அதற்கு நீங்கள் என் கதையைக் கேட்டக வேண்டும்” என்றது மரம்.
“கதையாக கூறுங்கள், கூறுங்கள். எங்களுக்கு கதைகள் என்றால் மிகவும் பிடிக்கும்” என்றனர் சிறுவர்கள்.
“10 வருடங்கள் முன்பு என்னை இந்த இடத்தில் இரண்டு சிறுவர்கள் ஒன்றாக சேர்ந்து நட்டு வைத்து தண்ணீர் ஊற்றி பராமரித்தார்கள். நான் இந்த மண்ணில் வேர் ஊன்றி என் முதல் தளிரை விட்ட போது, அவர்கள் முகம் மகிழ்ச்சியில் பூரித்தது. சிறுவர்கள் அவர்களின் நண்பர்களிடமும் கூறி மகிழ்ந்தார்கள்.
“தினமும் அவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து என் அருகில் அமர்ந்து அச்சகங்கல், பல்லாங்குழி, கல்லாங்க தோறப்பு குச்சி, உக்கே கூர் இரட்டே கூர், பாண்டியாங்குலி, நொண்டி, சோறு பொங்கி போன்ற பல விளையாட்டுகளை என் அருகில் தான் விளையாடுவார்கள். என்னை சுற்றி எப்போதும் சிறுவர் கூட்டமாக இருப்பார்கள்”.
“சிறுவர்களின் மகிழ்ச்சியை பார்த்து நானும் மகிழ்ச்சியாக நிறைய பூக்களையும் அதில் தேனையும் தந்து கொண்டு இருந்தேன். வருடங்கள் செல்ல செல்ல என்னை சூழ்ந்து கொண்டு விளையாடும் சிறுவர்களின் எண்ணிக்கையும் குறைந்தது, என் பூக்களில் உள்ள தேனின் அளவும் குறைந்தது”.
“ஆனால் இப்போது ஒரு சிறுவன் கூட நண்பர்களுடன் சேர்ந்து என் அருகில் வந்து விளையாட வருவதே இல்லை. எப்போதும் கைப்பேசிலும், தொலைக் காட்சி பெட்டியிலும் அவர்கள் பார்த்தையே பேசுக்கிறார்கள். என்னை சுற்றி இப்போது எந்த சிறுவர்களும் இல்லை. இதனால் தான் இப்போது என் பூவில் தேன் இல்லை” என்று தன் கவலையை கூறியது மரம்.
இதனைக் கேட்ட சிறுவர்கள், வருத்ததுடன் “எங்களால் தான் உங்களுக்கு கவலை. உங்கள் கவலையால் வண்ணத்துப்பூச்சிகள் தேனீக்கள் குருவிகளுக்கும் தேன் கிடைக்காமல் கவலை அடைந்துள்ளனர்.
எங்களை மன்னித்துவிடுங்கள். உங்களுக்கு தண்ணீர் ஊற்றினால் மட்டும் போதும் என்று நினைத்தோம். இப்போது தான் உங்களுக்கு மகிழ்ச்சியும் தேவைப்படும் என்பது புரிந்தது. இனிமேல் நாங்கள் அனைவரும் உங்கள் அருகில் தான் விளையாடுவோம்” என்று மரத்திடம் கூறினர்.
சிறுவர்கள், ஆனால் எங்களுக்கு நீங்கள் கூறிய விளையாட்டுகள் எதுவும் தெரியாது என்று வருத்தத்துடன் கூறினர்.
இதனை பார்த்த கொண்டு இருந்தத சிறுவர்களின் பெற்றோர்கள் சிறு வயதில் தாங்கள் விளையாடிய அச்சகங்கல், பல்லாங்குழி, கல்லாங்க தோறப்பு குச்சி, உக்கே கூர் இரட்டே கூர், பாண்டியாங்குலி, நொண்டி போன்ற விளையாட்டுகளை மகிழ்ச்சியுடன் கற்றுக் கொடுத்தனர்.
அப்போதே மரத்தின் அடியில் அமர்ந்து இட்டிலி சுட்டு விளையாட தொடங்கினர். மரம் மகிழ்ச்சியில் பூரித்தது. வண்ணத்துப்பூச்சி தேனீக்கள், பறவைகளும் மகிழ்ச்சியாக பறந்தன.
எழுதியவர்
Early childhood educator, Worksheet creator - ஆகவும் பணியாற்றும் இவரின் முதல் முதல் சிறார் சிறுகதை நூல் "சிறகடித்து பற” என்பதாகும்.
இதுவரை.