பணி முடிந்து வீடு திரும்பும்
இந்த இருள் சூழும் மாலைப் பொழுதில்
நான் மலர்களைக் கனவு காண்கிறேன்
அலைபாயும் நதி வெள்ளத்தில்
அமைதியாக இலைகளை மிதக்க விடுபவளாக
இன்று கொஞ்சம் இருக்க விரும்புகிறேன்
தாமரை இலையில் சறுக்காடும்
நிலவு ஒளிரும் நீர்த்துளிகளோடு
இந்த இரவு முழுதும் விளையாடவும்
அடர்ந்த சருகுகளில் புதைந்து நடக்கவும்
வளர்ந்த வாதாம் மர இலைகளின்
மாறும் வண்ண நேர்த்தி குறித்து வியப்புறவும்
ஒரு வித குளிர்கால ஏக்கமுறும் வேளை
மெல்ல மழை பிடிக்கத் துவங்குகிறது
ஒரு மறைவான நிலத்தின்
சிறிய கனவுகள் போல வண்ணக் குடைகள்
சரியும் பாதையில்
மிதந்து செல்ல ஆரம்பிக்கின்றன
மழையின் வலு கூடும் இந்நேரம்
நுண்ணிய விழிகளென விரியும் மழைக் குமிழ்கள்
திரும்பாமல் போவோரை ஆர்ப்பரித்துக் கூப்பிடுகின்றன
வீடு திரும்ப மனமின்றி களைப்புகள் நீரில் கரைந்தோட
குமிழ்களோடு உரையாட ஆரம்பிக்கிறேன்
சிரித்து மகிழும் நுரைக் குமிழ்கள்
இந்நாளைக் கடந்தபடி இருக்கின்றன.
எழுதியவர்
இதுவரை.
- கவிதை18 October 2021கடத்தல்
- கவிதை-மொழிபெயர்ப்பு14 July 2021விளையாடிக் கொண்டிருக்கும் மெதுவான குழந்தைகள்