என்னைப் பார்த்தவுடனே கௌசல்யா அதிர்ச்சியடைந்தவளாக நின்றுவிட்டாள். “சார்… நீங்களா… எப்படி எங்கள் வீட்டைக் கண்டுபிடித்தீர்கள்? நகரத்திலிருந்து எந்த வழியில்...
சமயவேல்
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகிலுள்ள வெம்பூர் கிராமத்தில் பிறந்த சமயவேல் இந்திய ஒன்றிய அரசின் தபால் மற்றும் தொலைத் தொடர்பு துறையில் பொறியாளராக பணிபுரிந்து ஒய்வுப் பெற்றவர்.
தமிழிலக்கியத்தில் இதுவரை
காற்றின் பாடல் (1987),
அகாலம் (1994),
தெற்கிலிருந்து சில கவிதைகள் (தொகை நூல்),
அரைக்கணத்தின் புத்தகம் (2007),
மின்னிப் புற்களும் மிதுக்கம் பழங்களும் (2010),
பறவைகள் நிரம்பிய முன்னிரவு (2014),
இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? (2019),
சமகாலம் என்னும் நஞ்சு (2021) ,
ஆகிய கவிதைத் தொகுப்புகள் ;
இனி நான் டைகர் இல்லை (2011) சிறுகதைத் தொகுப்பு;
ஆண்பிரதியும் பெண்பிரதியும் (2017),
புனைவும் நினைவும்: வெட்ட வெளியில் ஒரு கரிசல் கிராமம் (2018), ஆகிய கட்டுரைத் தொகுப்புகள் மற்றும்
அன்னா ஸ்விர் கவிதைகள் (2018),
குளோரியா ஃப்யூர்டஸ் கவிதைகள் (2019),
மரக்கறி (The Vegetarian), கொரிய நாவல்,
இலையுதிர்கால மலர் வாடுவதும் இல்லை வீழ்வதும் இல்லை (நவசீனக் கவிதைகள்) 2021, ஆகிய மொழிபெயர்ப்பு நூல்களை எழுதி உள்ளார்.
2021- ஆம் ஆண்டு முதல் 'தமிழ்வெளி' எனும் காலாண்டு இலக்கியச் சிற்றிதழின் ஆசிரியராகவும் உள்ளார்.