ஒல்டு கட்டிடத்தின் கோர்ட் ஹவுஸ் சாலையில் உள்ள அடுக்கு மாடிக் கட்டிடத்தின் ஒன்பதாவது மாடியில் உள்ள துளசிபாபுவின் மேசைக்கு...
எஸ். அற்புதராஜ்
தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி ஊரைச் சார்ந்தவர். திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் படித்து, அதே பள்ளியில் ஆசிரியராகவும் முப்பத்து மூன்று பணிசெய்து ஓய்வு பெற்றவர். திருச்சி வாசகர் அரங்கில் தீவிரமாக இயங்கியவர். திருச்சி வாசகர் அரங்கு வெளியிட்ட 'இன்று' பத்திரிகையில் ஆசிரியர் குழுவில் முக்கிய பங்கு வகித்தவர்.
பின்னர் திரு விஜயகுமார் நடத்திய 'மானுடம் பூத்தது'இதழில் சிறு கதைகள் எழுதியிருக்கிறார். ' தி இல்லஸ்ட்ரேடட் வீக்லி'பத்திரிகையில் சத்யஜித் ரே கதைகள் வெளிவந்த காலத்தில் அந்தக் கதைகளை தமிழாக்கி மாணவர்களுக்கு படித்துக் காட்டியிருக்கிறார் .பின்னர் சத்யஜித் ரே தொகுப்பு வெளிவந்தபின் அவற்றை முழுவதுமாக தமிழாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார். இதைத் தவிரவும், இருபது கதைகளும் ஒரு சில கவிதைகளும் எழுதி வெளிவந்துள்ளன.