20 January 2025

இராஜலட்சுமி

சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரில் பிறந்தவர். பெற்றோர் இராம கிருஷ்ணன் - பத்மாவதி. சென்னை கிறித்துவ கல்லூரியில் பொருளாதார பட்டம் பெற்றவர். நாவலாசிரியர், எழுத்தாளர், கவிஞர், நாடக ஆசிரியர், மொழி பெயர்ப்பாளர். இவ்வாண்டு (2024) சிறந்த இலக்கியப் பணிக்கான திருப்பூர் சக்தி விருது, மலர்வனம் மின்னிதழ் சிறந்த எழுத்தாளர் விருது, ‘ஃபெம்ஹானர்’ (FEM HONOUR) பெண்கள் பத்திரிக்கையின் சிறந்த சாதனையாளர் விருது, வானதி பதிப்பகத்தின் வரலாற்று நாவலாசிரியை நினைவுப் பரிசு ஆகியவை வழங்கப் பட்டுள்ளன. குவிகம் குறுநாவல் போட்டி 2024-ல் இவரது குறுநாவல் “பூமரப்பாவை” மற்றும் உதிரிகள் இலக்கிய இதழ் நடத்திய உலகளாவிய சிறுகதைப் போட்டி 2023-ல் இவரது "பேய்க்கொம்பன்" சிறுகதை ஆகியவை பரிசு வென்றுள்ளன. பிரித்தனிலிருந்து வெளியாகும் இந்தியத் தமிழ் வானொலி வழங்கும் தமிழிதழ் (சித்திரை & தீபாவளி சிறப்பிதழ்கள் 2024) மற்றும் வடஅமெரிக்கத் தமிழ் மாத இதழான ‘தென்றல்’ (ஜூன் 2024) ஆகியவற்றில் இவரது படைப்பு மற்றும் நேர்க்காணல் இடம் பெற்றுள்ளன. எழுத்தத் தொடங்கிய முதலாண்டிலேயே, பதினொறு சிறுகதைகள், ஏழு குறுநாவல்கள், நான்கு முழுநீள நாவல்கள் மற்றும் ஒரு மேடை நாடகத்தையும் எழுதியுள்ளார். தற்போது, 'நடுகல்' இலக்கிய இதழில் சிறார் தொடர்கதை எழுதி வருகிறார்.
You cannot copy content of this page