8 December 2024

முத்து மீனாட்சி

திருப்பூரைச் சார்ந்த  முத்து மீனாட்சி உயிர் வேதியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்று, ஒரு தனியார்ப் பள்ளியில் உயிரியல் ஆசிரியராக பணிபுரிகிறார்.  கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்டவற்றில் பங்கேற்கும் ஆர்வமுடைய  இவரது கவிதைகள்  பல்வேறு இலக்கியச் சிற்றிதழ்களில்  வெளியாகி இருக்கின்றன.   இதுவரை வெளியிட்டுள்ள  கவிதைத் தொகுப்புகள்,  1. மௌனம் ஒரு மொழியானால்,  2. கவி தேடும் விழிகள்.   இலக்கிய அமைப்புகளில் இணைந்து இலக்கியச் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்.  தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் வளரும் படைப்பாளர் விருது,  தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் வழங்கிய இலக்கியப் படைப்பு ஜீவா விருது‌, தமிழ்ப்பட்டறை இலக்கியப் பேரவை வழங்கிய கவிச்சிகரம் விருது, .தளிர் இலக்கிய களம் வழங்கிய கவிச்சுடர் விருது, அக்கினிப் பெண்கள் தமிழ்ச் சங்கம் வழங்கிய பாரதிச் சுடர் விருது உள்ளிட்ட  விருதுகளையும் பெற்றிருக்கிறார். அனைத்துலகப் பொங்குதமிழ் சங்கம் இந்தியா பிரைடு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நடத்திய  ‘200 காப்பிய மாந்தர்கள்’ ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து உலக சாதனை நிகழ்விலும் பங்கேற்றிருக்கிறார்.
You cannot copy content of this page