ஞாயிற்றுக் கிழமை மதியம் சாப்பிட்ட கறிக்குழம்பு வாசம் வீட்டைச் சுற்றிக் கொண்டிருந்தது. சமைத்த பாத்திரங்களும் எச்சில் தட்டுகளும் சமையலறையில்...
மனுஷி
தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரைச் சார்ந்த மனுஷி-யின் இயற்பெயர் ஜெயபாரதி. தற்போது இவர் புதுச்சேரி பல்கலைகழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்துகொண்டிருக்கிறார். யுவ புரஸ்கார் (இளம் சாகித்ய அகாடமி) என்னும் தேசிய அளவிலான விருதினை 2017-ஆம் ஆண்டில் பெற்றவர். இவரது படைப்பான ஆதிக் காதலின் நினைவுக்குறிப்புகள் என்னும் நூலே இவருக்கு இந்த விருதினைப் பெற்றுக் கொடுத்தது. முத்தங்களின் கடவுள் நூலுக்காக சென்னை இலக்கியக் கழகத்தின் இளம் படைப்பாளி விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.
இதுவரை எழுதியுள்ள நூல்கள்:
குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள்-மித்ரா பதிப்பகம் (2013),
முத்தங்களின் கடவுள்-உயிர்மை பதிப்பகம் (2014),
ஆதிக் காதலின் நினைவுக்குறிப்புகள்-உயிர்மை பதிப்பகம், (2015),
பின்பற்றவிரும்பும் கவிஞர்---கவிஞர் இளம்பிறை,
கருநீல முக்காடிட்ட புகைப்படம் - வாசகசாலை பதிப்பகம் (2019),
யட்சியின் வனப்பாடல்கள் - வாசகசாலை பதிப்பகம் (2019)