டாக்டர். அகிலாண்ட பாரதி

நெல்லைச்சீமை தென்காசி அருகே இடைகால் கிராமத்தை சார்ந்தவர். மதுரை மருத்துவக் கல்லூரியில் பொது மருத்துவமும் கண் மருத்துவமும் பயின்றவர். மருத்துவராக தற்போது பணிபுரிகிறார். தீவிர வாசிப்பின் காரணமாக தமிழிலக்கியத்தில் ஆக்கங்கள் பல எழுதி வருகிறார். இதுவரை சுமார் பன்னிரெண்டு நாவல்கள், பதினைந்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். பல போட்டிக்கதைகளில் பரிசுகளும் பெற்றுள்ளார். ’பூஞ்சிட்டு’ என்னும் சிறுவர் கதை இணைய தளத்தின் ஆசிரியர்களுள் ஒருவர். ‘கதை சொல்லு கதை கேளு’ என்னும் வாட்ஸாப் குழுமத்தைத் தொடங்கி சுமார் இரண்டரை வருடங்களாக இந்தத் தலைமுறைக் குழந்தைகளுக்குத் தினமும் தவறாது பழைய புதிய கதைகளைச் சொல்லி, ஆயிரம் கதைகளைத் தாண்டி இருக்கிறது அந்நிகழ்வு. ஆர்வமுடன் அதைக் கேட்கிற பல குழந்தைகள் தங்கள் பள்ளியில் கதை சொல்லும் போட்டியில் கலந்து பரிசுகளை அள்ளுகிறார்கள். டாக்டர் விகடன், குங்குமம் டாக்டர், கண்மணி எனப் பல வார இதழ்களில் தொடர் மருத்துவக் கட்டுரைகள் எழுதி வருகிறார் இந்தக் ’கதைசொல்லி’.
You cannot copy content of this page