13 October 2024

அகதா

கவிஞர், தமிழ்ப் பேராசிரியர். கடந்த நான்கு வருடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளை இணையத்தில் எழுதியதோடு அதன் மூலமாக பல்வேறு பரிசுகளையும் விருதுகளையும் வாங்கியுள்ளார். அதில் முக்கியமாக தமிழகக் காவல்துறையும், படைப்புக் குழுமமும் இணைந்து கடந்த ஆண்டு நடத்திய மதுவிலக்கு கவிதைப்போட்டியில் உலகளாவிய அளவில் முதல் பரிசு வாங்கியமை குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பல்வேறு இணைய இதழ்கள், ஆனந்த விகடன் உள்ளிட்ட வார மற்றும் மாத இதழ்களில் தொடர்ந்து இவரது கவிதைகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றது. அசோகவனம் செல்லும் கடைசி ரயில் ,நீ பிடித்த திமிர் என்ற இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். கவிச்சுடர் விருது ,மக்கள் செல்வாக்கு மிக்க படைப்பாளி விருது, கவிஞர் கண்ணதாசன் விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார் . தேசிய மற்றும் பன்னாட்டு கருத்தரங்கங்களில் பங்குகொண்டு, பல்வேறு தலைப்புகளில் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை வழங்கி உள்ளார். மேலும் பெரம்பலூர் மாவட்ட அளவில் இளைஞர்களுக்கு பல்வேறு வகைகளில் புத்தாக்கப்பயிற்சி அளித்து கொண்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது
You cannot copy content of this page