அவிழும் அன்றாடப் பொழுதின்
ஆரம்பத்திலேயே
ஆதூரத்துடன்
பட்டியலிடுகிறது மனப்பறவை
தயாரிக்கப் பட வேண்டிய
அந்நாளின் பச்சயங்களை!!!
சொற்களின் மென் நரம்புகள்
மீட்டும் அன்பின் பொழுதும்..
மூடிய கதவு திறப்பின்
பிரிய கோப்பையில்
மிதக்கும் விருந்தும்..
நுரைத்துப் பொங்கும்
ஒப்பீடற்ற நட்பின் இள வாசனையும்..
நங்கூரம் கட்டி நிற்க
காலடியில் குழியென
நழுவும் கணங்கள்…….
வேட்டையாடிய நிலப் பரப்பில்
ஆயாசத்தை குடித்துக் கொண்டே
வெப்ப மொழிக் காரணங்களின்
மகரந்தங்களை நுகர்ந்து
புரண்டு படுக்கும் இரவு….
நம்பிக்கையின் சிறகடிப்பில்
ஆயத்தப் படுத்திக் கொள்கிறது
மனப்பறவை……
நிச்சலமான நிலப் பரப்பில்
அடுத்த நாளின் பறத்தலுக்கு…..
வழமையோடு…..
மலர்மகள்
எழுதியவர்
இதுவரை.
- கவிதை20 July 2021காலக் கடத்தி