20 January 2025

நான்சி கோமகன்

கதை சொல்லி, சிறார் எழுத்தாளர், கவிஞர் என இயங்குவதோடு சிறார் செயற்பாட்டாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளராகவும் உள்ளார். பாசமலர் மாத இதழின் ஆசிரியர், பன்முக மேடை இதழின் ஆசிரியர் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் கோவை மாவட்ட துணைச் செயலாளர்/ மாநிலக் குழு உறுப்பினர் என பல பொறுப்புகளில் உள்ளார். ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசி, வளையாபதி செய்யுள்களை , கதை வடிவில் சிறார் படிக்கும் வண்ணம் எளிய தமிழில் சிறுகதை எழுதி உள்ள நான்சி மோகன் சிறார்களின் சிறுகதைகளை கொண்ட ”பூக்களின் புதுமொழி” எனும் சிறுகதைத் தொகுப்பின் தொகுப்பாசிரியர் ஆவார். மேலும் “காட்சிப் பிழை எனும்” சிறுகதைத் தொகுப்பு நூலும் வெளியிட்டிருக்கிறார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், மதுரை சாக்யா அறக்கட்டளை, தளிர் இலக்கிய களம், தென்னிந்திய பத்திரிக்கையாளர் சங்கம், திருப்பூர் முத்தமிழ் சங்கம் மற்றும் கனவு அமைப்பு உள்ளிட்டவைகளிலிருந்து பல விருதுகள் பெற்றிருக்கிறார். சர்வதேச தமிழ் பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார்.
எங்கு பார்த்தாலும் வண்ண வண்ண பூக்கள் நிறைந்து பார்க்கவே அழகாக இருந்தது அந்தத் தோட்டம். அந்தத் தோட்டத்தில் பல...
You cannot copy content of this page