13 October 2024

அண்டனூர் சுரா .

அண்டனூர் சுரா, (பிறப்பு 1983) என அழைக்கப்படும் சு.இராஜமாணிக்கம் தமிழ் நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் ஆவார். வெளியிட்ட நூல்கள் - சிறுகதைத் தொகுப்புகள் : மழைக்குப் பிறகான பொழுது (2014),திற (2015), ஒரு நாடோடிக்கலைஞன் மீதான விசாரணை (2016), பிராணநிறக் கனவு (2018), எண்வலிச்சாலை (2020), எத்திசைச் செலினும் (2020), தடுக்கை (2021), குரலி (2024) கட்டுரைத் தொகுப்புகள்: முட்டாள்களின் கீழ் உலகம் (2015),அழிபசி தீர்த்தல் (2019), சொல்லேர் (2021) புதினங்கள் : முத்தன்பள்ளம் (2017), கொங்கை (2018), அப்பல்லோ (2019), தீவாந்தரம் (2022), அன்னமழகி (2022). விருதுகள் தமிழக அரசின் விருது (திற சிறுகதைத் தொகுப்பு), என்சிபிஎச் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் விருது, இலங்கை உதயணன் விருது உள்ளிட்ட ஐந்து விருதுகள் (முத்தன்பள்ளம்), இலண்டனிலிருந்து வெளிவரும் புதினம் இதழ் வழங்கிய பரிசு, கவிதை உறவு விருது, படைப்பு விருது, தமிழக அரசின் விருது (பிராண நிறக்கதவு, சிறந்த நூல்), எழுத்து தமிழிலக்கிய அமைப்பு விருது (அன்னமழகி) உள்ளிட்ட விருதுகளை பெற்றிருக்கிறார்.
You cannot copy content of this page