காய்ந்திருக்கும் சோளக்கொல்லையில்
பச்சைப் பட்டங்களாய்
முளைத்துப்
பறக்கின்றன
கிளிகள்.
உணவற்ற நிலத்தின் வறண்ட தன்மையை
தங்கள் அலகுகளால் கொத்தி ஓய்கின்றன
பறவைகள்,
எவரும் நடமாடாத பரப்பின் வெறுமையை
தன் கண்களால் அளக்கிறான் சிறுவன் ஒருவன்.
“கணேஷ் மட்டும் வெளியே போறான்” என்றபடி
கதவைத்தாழிடப் பரபரக்கிறாள்
குட்டி சகோதரி.
புழக்கமில்லாச் சமையலறையில்
வெந்து தணிகிறது பணமில்லாச் சூடு,
வீட்டிற்குள் தன்னைச்சுருக்கி அப்பாவின் முகம் பார்த்தபடி
மௌனமாய் கிடக்கிறான் கணேஷ்.
உணவைக் கனவாகக் கண்டபடி,
கண்களை
மூடித் திறக்கிறான் ஒட்டிய வயிறோடு,
ஏழை வணிகனின் மூலதனத்தை வேரோடு
புதைத்திருக்கிறது தீ நுண்மி.
போதாமையினால் வரையப்பட்ட வசிப்பிடம்
விற்க முடியாத பொம்மைகளால் இறுகிக் கிடக்கிறது.
அ.ரோஸ்லின்
எழுதியவர்
இதுவரை.
- அரசியல்19 October 2021தலிபான்களின் அதிகாரத்தில் பெண்களின் நிலை
- கவிதை18 July 2021சூடு