விளையாடிக் கொண்டிருக்கும் மெதுவான குழந்தைகள்

சீக்கிரம்-வந்து-கைகளைக்-கழுவு, இரவுணவு-ஆறுகிறது-தேனே, உன்- அப்பா- வரட்டும்- இரு எனத் தம் அம்மாக்களால் அழைக்கப்பட்ட அனைத்துத் துடியான குழந்தைகளும் உள்ளே சென்று விட்டிருந்தார்கள், வெளியே மெதுவான குழந்தைகள் மட்டும் புல்வெளிகளில் — மின்மினிப் பூச்சிகளுக்கு ஊடான  பாதைகளை அழித்தபடி தங்கள் வாய்களால் மென்மையான, சிறிய ஒலியுடைய ஒளிரும், வெளியேறி மிளிரும் ‘ஓ’க்களை உருவாக்கியபடி. அவர்களின் மெதுவான அம்மாக்கள் — அந்தியில் மங்கலாய் மினுங்கியபடி, அவர்கள் மென் காற்றில் திரும்புவதைக் கவனித்தபடி, அவர்கள் […]

Continue Reading

ஆத்மாவைப் பற்றிச் சில வார்த்தைகள்

சில நேரங்களில் நம்மிடம் ஓர் ஆத்மா இருக்கிறது. நிரந்தரமாக ஒருவரிடமும் அது இருப்பதில்லை..   ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வருடமும் அது இல்லாமலே கடந்து போகலாம்.   சில நேரங்களில் குழந்தைப் பருவ பயம் மற்றும் பேரானந்தத்தில் மட்டும் அது சில காலம் தங்கலாம். சில சமயங்களில் முதுமையின் மலைப்பிலும்.   சாமானை நகர்த்துவது போல அல்லது சுமையைத் தூக்குவது போல அல்லது செருப்புக் கடியுடன் பல மைல் போவது […]

Continue Reading