படகில் பொறித்த அடையாளச் சின்னம்

என் வாழ்க்கையில் நான் இங்கும் அங்குமாக பலவிடங்களில் இருந்திருந்தாலும் ஹனாய் நகரத்திற்கு சில முறைதான் போக வாய்த்தது. குழந்தை பிராயத்தில் ஒரு முறையும், போர்க்காலத்தில் ஒரு தடவையும், அதன்பின்னான வருடங்களில் ஓரிருமுறையும்தான் செல்ல அமைந்தது. இதனால்தான் எனக்கு அங்கிருந்த ஆமை ஏரி, மற்றும் நீள பியன் பாலத்தை தவிர்த்து , ஹாங் கோ  ரயிலடியையும் டிராம் வண்டி தடமான தண்டவாளங்கள் பதிந்த தெருக்கள் மட்டுமே நினைவிலிருந்தது. ஆனாலும் கூட நான் […]

Continue Reading

திரௌபதி

1 பெயர்: தோபதி மெஜென், வயது இருபத்தேழு. கணவன் துல்னா மஜீ (இறந்துவிட்டான்), வசிப்பிடம் சேராகான், பங்க்ராஜார், உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்று தகவல் தெரிவித்தாலோ பிடிக்க உதவி செய்தாலோ நூறு ரூபாய் வெகுமதி… பதக்கம்பெற்ற சீருடையணிந்த இருவரிடையே நடக்கும் உரையாடல். முதல் பதக்கம்: என்னது, ஆதிவாசிக்கு தோபதி என்று பெயரா? நான் கொண்டுவந்த பெயர்ப் பட்டியலில் அது இல்லையே! பட்டியலில் இல்லாத பெயரோடு எப்படி ஒருவர் இருக்கமுடியும். இரண்டாம் […]

Continue Reading

விடுதி

ஆல்ப்ஸ் மலைத்தொடரின் நெடிதுயர்ந்த சிகரங்கள் ஒன்றையொன்று ஊடறுத்துச் செல்லும் பள்ளத்தாக்கில் ஓடும் பனியாற்றின் அடிவாரத்தில் இருக்கும் மரத்தாலான மற்ற விடுதிகளைப்போலவே இருந்த ஷ்வாரென்பாக் விடுதி ஜெம்மி கணவாயைக் கடக்கும் பயணிகளுக்கு இளைப்பாறுதலுக்கான இடமாக இருந்தது. வருடத்தின் ஆறு மாதங்கள் மட்டுமே விடுதி இயங்கும். அந்தச் சமயத்தில் ஜான் ஹவுஸரின் குடும்பம் அங்கே தங்கியிருக்கும். பனிவிழத் தொடங்கி லோச்சுக்குச் செல்லும் பாதை மூடத் தொடங்கியதும் தந்தையும் அவரின் மூன்று மகன்களும் அங்கே […]

Continue Reading

விளையாடிக் கொண்டிருக்கும் மெதுவான குழந்தைகள்

சீக்கிரம்-வந்து-கைகளைக்-கழுவு, இரவுணவு-ஆறுகிறது-தேனே, உன்- அப்பா- வரட்டும்- இரு எனத் தம் அம்மாக்களால் அழைக்கப்பட்ட அனைத்துத் துடியான குழந்தைகளும் உள்ளே சென்று விட்டிருந்தார்கள், வெளியே மெதுவான குழந்தைகள் மட்டும் புல்வெளிகளில் — மின்மினிப் பூச்சிகளுக்கு ஊடான  பாதைகளை அழித்தபடி தங்கள் வாய்களால் மென்மையான, சிறிய ஒலியுடைய ஒளிரும், வெளியேறி மிளிரும் ‘ஓ’க்களை உருவாக்கியபடி. அவர்களின் மெதுவான அம்மாக்கள் — அந்தியில் மங்கலாய் மினுங்கியபடி, அவர்கள் மென் காற்றில் திரும்புவதைக் கவனித்தபடி, அவர்கள் […]

Continue Reading

ஆத்மாவைப் பற்றிச் சில வார்த்தைகள்

சில நேரங்களில் நம்மிடம் ஓர் ஆத்மா இருக்கிறது. நிரந்தரமாக ஒருவரிடமும் அது இருப்பதில்லை..   ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வருடமும் அது இல்லாமலே கடந்து போகலாம்.   சில நேரங்களில் குழந்தைப் பருவ பயம் மற்றும் பேரானந்தத்தில் மட்டும் அது சில காலம் தங்கலாம். சில சமயங்களில் முதுமையின் மலைப்பிலும்.   சாமானை நகர்த்துவது போல அல்லது சுமையைத் தூக்குவது போல அல்லது செருப்புக் கடியுடன் பல மைல் போவது […]

Continue Reading