மியாவ்

(1) அவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கிறேன். சமீப நாட்களாக அதிகாலையிலேயே வீட்டிலிருந்து கிளம்பி விடுகிறான். வழமையான நேரத்திற்கு திரும்பி வருவதும் கிடையாது. ஏதோ ஒன்று தவறாகப் படுகிறது. இது பற்றி நேரடியாகக் கேட்டுவிட மனம் துடித்தாலும், அத்தனை சுலபமாக வாயைத் திறக்க முடிவதில்லை. சரியான தருணம் வரும் மட்டும் பொறுத்திருக்கும் படி எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். எங்களைப் போன்று ஆண்களுக்கு பிறழ் […]

Continue Reading

நீண்ட மழைக்காலம்

அங்கையற்கண்ணி வீட்டுக்குப் போவதென்று பால்வண்ணம் முடிவெடுத்தது ஒரு தற்செயல் நிகழ்வுதான். எப்படி அந்த முடிவை எடுத்தோம் என்று அவரே அவரைக் கேட்டுக் கொண்டார். சூழ்நிலை, விதி, வேறு வழியே இல்லை. ஏதாவது செய்தாக வேண்டும் என்றெல்லாம் காரணங்களைக் கற்பித்தாலும் அவர் மனதில் அங்கையற்கண்ணி இருந்தாள் என்பதுதான் உண்மை.. இக்கட்டான சூழலில் தனக்கு யார் உதவக் கூடும் என்று அவர்  யோசித்த போது, நீர் ஊரும் கிணற்றில் மேலே வரும் சருகுகள் […]

Continue Reading

கறுப்பு வெள்ளை

அனீதின் வீட்டைப் பார்க்கும்போது அமீருக்கு வியப்பாக இருந்தது. அவனது கிராமத்தில் இப்படியான வீடுகள் இல்லை. அவ்வளவு பெரிய வீட்டுக்கு அவன் இதற்குமுன் சென்றதுமில்லை. உள்ளே செல்வதற்கு அவன் கால்கள் அவனையும் மீறித் தயங்கி நின்றன. வெட்கம் போன்றதொரு உணர்வு அவன் கால்களை கட்டிப்பிடித்துக் கொண்டதைப் போல் நெளிந்தான். பெரும் பணக்காரர்களுக்கு முன்னால் எப்போதும் அவனுக்குள் ஒருவிதத் தாழ்வுணர்ச்சி உருவாகுவதை இது போன்ற சந்தர்ப்பங்களில்தான் திண்ணமாக உணர்கிறான். இப்படியான பெரிய வீடுகளுக்குள் […]

Continue Reading

பூக்களின் மொழி

“மாயா .. உனக்கு எத்தனை மொழிகள் தெரியும் ?” “மூணு ” “என்னென்ன ?” “தமிழ் ..” “ம்ம் ..” “அப்புறம் பறவைகளின் மொழி .. அதோட பூக்களின் மொழி ” என் அன்பின் வினோத் .. உனக்கு நினைவிருக்கிறதா ? என்னைப் பெண் பார்க்க வந்த அன்று நீ என்னிடம் கேட்ட கேள்வி இது. ‘உனக்கு எத்தனை மொழிகள் தெரியும் . அதற்கான என் பதிலைக் கேட்டு நீண்டதொரு […]

Continue Reading

தசரதம்

“ நம்ம மாஸ்டர் செத்துப் போனது எல்லாம் தெரியும் இல்ல, உங்களுக்கு? “  உண்மையில் பாஸ்கர் இதை எதற்கு கேட்கிறான் என்பதே எனக்குப் புரியவில்லை. அது ஐந்து வருடங்களுக்கு முன்பாகவே நடந்த ஒன்று. அந்த மரணம் அவருடைய இரண்டாவது மரணம் என்று சொல்ல வேண்டும். கனடா உத்தியோகத்தை எல்லாம் ஏறக்கட்டி விட்டு அந்நேரம் நான் ஊரில் தான் இருந்தேன். அது மட்டுமல்ல, இரவில் சாவு பற்றி கேள்விப்பட்டதும், மறுநாள் காலை […]

Continue Reading

நிலாவில் பார்த்தது!

  1 அப்பாவின் நண்பர் மகனுக்கும் நண்பர் ஆக முடியுமா?  எனக்கு அப்படி ஒருவர் ஆனார். அவர்தான் யுவசிற்பி.  பதின் பருவத்தில் எல்லோருக்கும் ஒரு மனிதர் ரோல் மாடலாக இருப்பார்.  அவரை மாதிரி நாமும் ஆக வேண்டும் என்ற பாதிப்பை ஏற்படுத்துவார்.  யுவசிற்பி என் ஆழ்மனதின் நாயக பிம்பம். அவர் உருவத்தை உங்களுக்கு மிக எளிதாக விளக்கி விடலாம். ஓஷோவின் நகலன்.  அதே தாடி. அதே வழுக்கை. அதே ஒளிமயமான […]

Continue Reading

மரம் சொன்னது

     இரத்த சிதறலோடு துண்டிக்கப்பட்ட விரல் ஒன்று என் மீது விழுந்த போது மீண்டுமொருமுறை மோனத்திலிருந்து விழித்தெழுந்தேன். என்னருகில் இருக்கும் மரணமடைந்த மனிதர்களுடன் தான் பேசுவேன். குறிப்பாக அவர்களின் இரத்தத் துளிகளோ சிதைந்த உடல் பாகத்தின் ஏதாவது ஒரு பகுதியோ என் மீது கண்டிப்பாக தெறித்திருக்க வேண்டும்.   வாசம் கூட நற்கடத்தியாக செயல்பட முடியும். ஒருவரின் வாசத்தில் அவரது வாழ்வு முழுவதும் பதியப்பட்டுள்ளது. காற்றில் கலந்துள்ள உயிர்ப்பின் விகாசிப்பை வாசத்தின் மூலம் […]

Continue Reading

ஆத்தா டீ கடை

இது தாங்க நம்ம மஞ்சூர் மலை கிராமம் …இங்கே பூர்வீகமா வாழ்ற மக்கள் மட்டும் தாங்க இருப்பாங்க … இது தவிர, பக்கதுல ஒரு மருந்து கம்பெனி இருக்குங்க , அங்க வாரத்துக்கு ஒரு தடவ கண்டெய்னர்  லாரி வருங்க.  அப்புறம் இங்கே ஒரே டீ கடை, நம்ப ஆத்தா டீ கடை தாங்க. ஆத்தா டீ கடையை பகலில் ஆட்கள் இல்லாமல் பார்க்கவே முடியாது. ஏழு மணிக்கு ஆரம்பிச்சா […]

Continue Reading

நிழல் இல்லா பிம்பங்கள்!

“என்னடே! மாமனார் வூட்டுல பணம் கிடைச்சாப்ல தெரியுது. முகம் எல்லாம் பன்னிர்ப்பூவா மலர்ந்துருக்கு.” என பொட்டிக்கடை முருகேசன் சிநேகமாக சிரித்து கொண்டே முறுக்கு பாக்கெட்டை எடுத்துக் கொடுத்தான். பல்லுக்கு இடையில் பக்குவமாக கடித்துக் கொண்டே,” இருடே! முடி வெட்டிட்டு வந்து மிச்சத்தை சொல்றன்” என்றபடி சலூனுக்குள் நுழைந்தான் செல்வம். தாடியை எடுக்க சொல்லிவிட்டு, தலை சாய்ந்தான். குத்தகை பணத்தை கொடுக்கவே நீட்டி முழக்கிய மாமனாரையும், ஜாடை பேசிய மாமியாரின் வார்த்தைகளும் […]

Continue Reading

நிசியிலெழும் பசி

சுந்தரேசன் பேருந்து நிலையத்தின் கடைக்கோடியிலிருந்த பெட்டிக் கடையில் ஒரு பத்து ரூபாயைக் கொடுத்து கோல்ட் ஃபில்டரை வாங்கி, அருகில் தொங்கிக் கொண்டிருந்த சற்றே தடித்த சணல் கயிற்றின் முனையில் எரிந்து கொண்டிருந்த கங்கில் அதைப் பற்ற வைத்து., ஆழமாக ஒரு இழுப்பு இழுத்தான். சிகரெட்டின் புகையை கால் நிமிடத்திற்கு தனக்குள்ளேயே வைத்திருந்து விட்டு பின் குனிந்தவாறு பாதியை மூக்கின் வழியாக வெளியேற்றி, மீதியை வாய் வழியாக ஊதினான்.  பின் நிமிர்ந்து […]

Continue Reading