நன்னெஞ்சே

எதற்கும் இருக்கட்டுமென்று எடுத்து வைத்திருந்த அன்பொன்று இப்போதெல்லாம் அடிக்கடி கண்ணில் படுகிறது. இதுவரையில் அதன் அன்றாடங்களைப் பொருட்படுத்தியதே இல்லை. அதுவோ அளவு மாறாத புன்னகையுடன் வைத்த இடத்தில் வைத்தபடி அப்படியே இருக்கிறது. அவ்வப்போது அதன் இருப்பை உறுதிசெய்துகொள்வதும் எப்படியோ பழகியிருக்கிறது. எப்போதாவது சோர்வில் கனிந்த சொல்லொன்றை அல்லது களைத்த சிரிப்பொன்றை அதற்கு அருளுகிறேன். கனத்த மனத்துடன் சாய்ந்தால் தாங்குமா என்று தெரியவில்லை. பாரந்தாங்கும் பரிசோதனையை அதன் மீது ஏவிப் பார்க்கவும் […]

Continue Reading

மதுசூதன் கவிதைகள்

அசைதலறியா கல்யானைகள் 1) அந்த தொன்மக் கோயிலின் முன் மண்டபத்தில் வழக்கமாய் கண்ணில் படும் கல்யானை இன்றைக்கென்னவோ பிளிறியது மண்ணிறைத்தது, மூங்கில் முறித்தது அதிர அதிர ஓடித் திரும்பியது சோழனை ஏற்றிக் கொண்டது நான் எப்போதும் போல இதற்கும் பார்வையாளனாக இருக்கிறேன். 2) ஒரு தொடர்மழையில் கற்றளியின் திருச்சுற்றின் போது வட மூலை கல்யானையை வியந்தவனுக்கு அன்றைக்கு அத்தனை பெரிதாய்ப்படவில்லை திரிலோக சுந்தரி. 3) கொட்டாரத்தில் அசைந்த யானையை கண்ணகலாமல் […]

Continue Reading

அதகளத்தி

1 உபரிகளைத் தந்துக்கொண்டேயிருக்கும் வளமான நிலம் அது அங்கு அவர்கள் நின்றுக்கொண்டிருந்தார்கள் பன்னாட்களுக்கு முன்னேயே தம் முன்னோர்கள் விளைச்சலுக்காக முன்கூட்டியே மெய் நிகர் பணத்தை பரிவர்த்தனையாகப் பெற்றதை அறியாமல் அந்நியக்குரலோடு வேர்ப்பிடித்திருந்தார்கள் அந்நியக்குரல் நட்பழைப்பு விடுத்தது அதனின் நட்பழைப்பில் அவர்களுக்கு உவப்பில்லை அந்த அழைப்பின் ஒலி பெரும் விலங்கின் ஒலி ஒத்தது அவர்களோ தலைவனோடு கை கோர்த்த தன் மகளின் அடிச்சுவட்டைத் தேடிய செவிலியின் குரல் இளைப்பு போலிருந்தார்கள் ஆனாலும் […]

Continue Reading

அபாயத்தின் குரல்

நேற்றிரவு நீருக்கடியில் விழுந்திருக்கும் அந்த சிவப்புநிற ஒளியை நான் பார்த்திருக்கத் தேவையில்லை. சிவப்புநிறம் அபாயத்தை உணர்த்துகிறது அபாயத்தின் குரல் அதனிடமிருந்து கேட்கிறது . நீர்க்கரையிலிருந்து காய்ந்த கருவேலமுட்களின் கிளைகளை இழுத்துப்போகிறாள் தூய்மைப்படுத்துபவள். இன்று நுங்குகள் வாங்கப் புறப்பட வேண்டும். கரையோரம் நிற்கிற பனைமரத்தில் நுங்குகள் காய்த்திருக்கின்றன மரநிழல் நீரில் கலங்கல் பாரித்திருக்கிறது நுங்குகள் வாங்கப் புறப்பட வேண்டும். இப்போது இந்தப் பனைமரத்திலிருந்து யார் எனக்கு நுங்குகள் பறித்துத் தரப்போகிறார்கள் நீலச் […]

Continue Reading

ராகினி முருகேசன் கவிதைகள்

இருகோடமைந்த நிலை யாதொன்றையும் அந்த மென்னிறகின் தொடுதலுணர்வாய் தனக்கெனவே இருத்திக்கொள்ள துஞ்சிய சுமையெனவே என்னிருப்பின் ஏகாந்தம் உரைக்கையில் உள்ளது பின்னுற வைக்கும் என்னில் எவ்வித துலவியமும் சமன்செய்யாத இருகோடமைந்த நிலை! பூவுடனான புணர்தலில் பூச்சியின் உயிர் பிறிதல் போல என்னுணர்வின் மடிந்த சில ஊசி மிடறேனும் – எனக்கென பிரத்தியேகப்படாத குவலையில் மாற்றம் செய்வேன் அன்று அந்த மென்னிறகாய் இருகோடமைந்த நிலையில்! ஏதுப்போலி! புரிதலின் புணர்வில்தான் புளங்காகிதங்கள் புலம்பெயர்ந்து அர்த்தமற்றுப்போகிறது […]

Continue Reading

கயூரி புவிராசா கவிதைகள்

1 உருகிக்கொண்டிருக்கும் என்பு மஜ்ஜைகளில் ஒரு பெருவனத்தின் ரகசியங்கள் பூத்து வெடிப்பதுபோல யுக யுகங்கள் தோறும் சூரியன் எரிக்க காத்திருக்கும் பனித்துளி வானிடை தவறி வீழும் எரிநட்சத்திரம் எந்த நேரமும் அலையை வாரியபடி இருக்கும் கடல். நிரப்ப நிரப்ப அன்பின் கனங்கள் நிரவுவதில்லை என்ன. சரளைக்கற்கள் உருண்டு ஒரு இருள் நதியாகும் அபூர்வம் உன்னால் உணரமுடியாதது தேவா! 2 மூடிக்கிடக்கும்கால ரகசியங்களை மொத்தமாக உள்ளீர்த்துக்கொண்டதாக ஒரு கடலின் தோற்றம். உதிரும் […]

Continue Reading

கடத்தல்

பணி முடிந்து வீடு திரும்பும் இந்த இருள் சூழும் மாலைப் பொழுதில் நான் மலர்களைக் கனவு காண்கிறேன் அலைபாயும் நதி வெள்ளத்தில் அமைதியாக இலைகளை மிதக்க விடுபவளாக இன்று கொஞ்சம் இருக்க விரும்புகிறேன் தாமரை இலையில்  சறுக்காடும் நிலவு ஒளிரும் நீர்த்துளிகளோடு இந்த இரவு முழுதும் விளையாடவும் அடர்ந்த சருகுகளில்  புதைந்து  நடக்கவும் வளர்ந்த வாதாம் மர  இலைகளின் மாறும் வண்ண நேர்த்தி குறித்து வியப்புறவும் ஒரு வித குளிர்கால […]

Continue Reading

சாய் வைஷ்ணவி கவிதைகள்

தொட்டுக்கொள்ளாத தூரத்தில் மாடம் வைத்த முற்றத்தில் அகலுறங்கி கிடக்கும் கருங்காக்கையும் பசுங்கிளிகளுமுண்டு மீந்த எச்சப்பழங்களை ஈக்கள் மொய்த்தொழுகும் அரிசிமாக் கோலத்தின் சந்தியூடு நடுவே பூசணிப்பூத் தரித்த சாணம் மணம் வீசாது காய்ந்த சாமந்தியின் இதழ் வற்றிக் குருதி மணத்தில் பசி மறந்து கிடக்கும் திரை மறைத்த பூஜையறை அக்கா வீட்டுக்கு தூரமாயிருப்பதாய் கொல்லைபுறத்துக் கிணற்றடி குறிசொல்லும். எனக்குத் தெரியும் தூரமென்பது, ஊறுகாய்க்கும் உலக்கைக்குமான சிவந்த எல்லையே ஆதலால் அறிவீர் என் […]

Continue Reading

மதுரா கவிதைகள்

1.  ப்ரியத்துக்குப் பரிசாக வெறுப்பை யளிக்கிறீர்கள்.. நட்புக்குப் பரிசாகத் துரோகத்தை யளிக்கிறீர்கள் உதவிக்குப் பரிசாக உபத்திரவத்தை யளிக்கிறீர்கள் இனிமைக்குப் பரிசாகக் கசப்பை.. இன்னும்…இன்னும் நல்லவைக்குப் பரிசாக அல்லவைகளை யள்ளித் தருகிறீர்கள். ஏதுமற்று மௌனித்திருந்தாலும் தேன் தடவிய சொற்களோடு தூண்டிலை வீசுகிறீர்கள். இனி நான் செய்ய வேண்டியதெல்லாம் அன்பான மனசை அப்புறப்படுத்துவதின்றி வேறொன்றுமில்லை.. 2. கடைவழிக்கும் வாராத காதறுந்த ஊசியைக் கையளித்த போதும் இதயப் பாத்திரத்தை வெற்றுச் சொற்களால் நிரப்பிய போதும் […]

Continue Reading

அகதா கவிதைகள்

புதிய சூரியன் எழும்பி இருந்தது பரிசுத்த காற்று நுரையீரல் வழி அடர்ந்த காட்டில் பச்சை இலைகள் புதியகிருமிகள் உருவாகவில்லை நோய்த்தொற்று இல்லை கிருமி நாசினி இல்லை புகைகள் இல்லை புகார்கள் இல்லை தடுப்புகள் இல்லை தடைத்தாண்டவுமில்லை ஆடையின்றிதான் இருந்தோம் சர்ப்பம் தெரிந்தது ஆப்பிளைக் கடிக்காமல் இம்முறை சுதாரித்துக்கொண்டோம் நானும் எனது ஆதாமும் வாழ்வென்னும் ஆற்றில் தத்தளிக்கிறது மன எறும்பு இலை பறித்துப்போட்டு காப்பாற்றத்தான் எந்த புறாவும் இல்லை பெரியசாமி தாத்தாவும் […]

Continue Reading