ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் – புதினம் ஒரு பார்வை

காதல் – அதற்கு நவீன காலங்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளக்கங்களை தந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு ஜே.கே கொடுக்கும் நுண்மையான இலக்கணம் தான் “ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்” என்கிற புதினம். இந்த பெயரிலே ஓர் ஆன்மீக பெருவெளி பொதிந்திருக்கிறது. ரமணரின் “who am I?” வாசித்திருக்கிறீர்களா? நான் யார்? என்கிற அந்த தேடலில் ஒரு படிநிலையில் இந்த “நான்” பற்றி ஒரு தெளிவு பிறந்தால் சூழ்நிலைகளால், லோகாயத நாடகங்களால் பாதிக்கப்படாத […]

Continue Reading

மாயங்களைப் புனைபவன்

ச.துரையின் “மத்தி” கவிதைத் தொகுப்பு குறித்து.. ஆழ்மனத் தூண்டல்களோடு இசைந்துபோகும் அகத்தின் சொற்கள் கவிதைகளாகின்றன.  பிரத்யேக மொழியைக் கண்டடையும் கவிஞனால் புனையப்படும் கவிமொழியானது புறத்தோடு ஒருங்கிணைந்து செயலாற்றும் அகத்தின் நீட்சியெனப் படர்கிறது. கவிஞன் கண்டவற்றின், உணர்ந்தவற்றின், அனுபவித்தவற்றின் ஆழ்மனத்தில் சேமித்து வைத்திருப்பவைகளின் தாக்கங்களோடு, தான் காணும், உணரும், அனுபவிக்கும் நிதர்சனங்களை ஒப்புமைப்படுத்தி தனதேயான பிரத்யேகப் பார்வையில் தரும் கவிதைகள் அதன் வாசகனின் அனுபவங்களோடும், அறிதல்களோடும் ஊடாடிப் புதிய பரிமாணம் கொள்கிறது. […]

Continue Reading

அ.கரீமின் ‘அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி’

பாசிசம், மனிதம், அன்பு எனும் முப்பரிமாண கதையாடலை முன்வைக்கும் ‘அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி’   பாசிசம் அதிகாரத்தின் அங்கமாகப் பரிணமித்துள்ள இன்றைய பின்காலனியச் சூழலில் அரசதிகாரத்தின் அதிகார மேலாண்மையை அடையாளப்படுத்தும் சிறுகதைகளைத் தாங்கிய தொகுப்பாக வெளிவந்துள்ளது அ. கரீமின் ‘அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி’. அன்பே எனத் தொடங்கி அன்பின் அழகியலில் முடிகிறது இத்தொகுப்பு. மனிதம் சுரண்டலுக்குள்ளாக்கப்படும் தேசத்தில் அதன் மீதான மிச்ச சொச்ச நம்பிக்கையை இக்கதைகளின் நெடுகிலும் காணமுடிகிறது. அரசு […]

Continue Reading

கார்த்திக் தம்பையாவின் “Mr. Raavanan: had a love story”

இலங்கையின் கொழும்பு வீதிகளில் தொடங்கும் கதை, இலண்டன் விமான நிலையத்தில் முடிகிறது. அது முடிவானு கேட்டா? இல்லைனு தான் சொல்லனும்… ஏன்னா முடிவிலும் ஒன்று தொடரலாம். காதலுக்கு பொதுவாகச் சாதி, மதம், சமூகம், பெற்றோர், காதலர்களுக்குள் புரிதல் இல்லாமை ஆகிய இந்த காரணங்களால் தான் பிரச்சினை வரும். ஆனால் இது எதுவுமில்லாமல் ஒரு நிலத்தில் பிறந்த ஒரே குற்றத்திற்காகச் சிதைக்கப்பட்ட காதல் கதை இது. இராவணன், நளாயினி இலங்கையின் கொழும்பில் […]

Continue Reading

பாலோ கொய்லோவின் “ரசவாதி “

வாழ்க்கை ஒருவனுக்கு ஒன்றை இந்த உலகத்தில் நிர்ணயித்து இருக்கையில் , அந்த நிர்ணயித்த ஒன்றில் இருந்து மாற்றுப்பாதையை நோக்கி பயணிக்க வைக்கிற சக்தி இங்கு எவருக்கும் இல்லை. சிலவற்றுக்காக நாம் இங்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம் என்பது மட்டுமே சரியாக இருக்கும். தனது வாழ்வு தனக்கு விடுக்கின்ற புதிர்களை விடுவிக்க அறியாதவன் வாழ்வை இழந்தவன் ஆகிறான்.  புதிர்களை அவிழுங்கள். பிரபஞ்சத்தின் மொழியை கவனமாக செவிமடுங்கள். உள்ளுணர்வு காட்டுகிற பாதையை இறுக்கமாக பிடித்துக்கொள்ளுங்கள். மனதார […]

Continue Reading