மாயா ஏஞ்சலோ- கவிதைகள்
Still i rise இருப்பினும் நான் எழுகிறேன் உங்கள் சரித்திரப் பக்கங்களில் என்னைப் பற்றிய கசப்பான,திரிக்கப்பட்டப் பொய்களை எழுதிவைக்கலாம்.. அழுக்குப் புழுதியில் என்னை அமிழ்த்தி வைக்கலாம். ஆனாலும் ஒரு தூசியைப் போல நான் எழுவேன்...