விருட்சங்களின் ஆதிவேர்
செல்லா பாட்டிக்கு பேயோட்டுவதென எல்லோருமாக சேர்ந்து முடிவெடுத்ததை வசந்தி துளியும் எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியோடும் கோபத்தோடும் சித்தப்பாக்களிடம் சண்டையிட்டவளை அம்மா சமாதானம் செய்து அழைத்துப் போனாள். வெறுப்போடு கொல்லைபுறத்தில் போய் உட்கார்ந்து கொண்டு மாட்டுக்கொட்டகையில் இருந்த...