22 September 2023

03

இசைக்கருவிகள் :

தோற்கருவிதுளைக்கருவிநரம்புக்கருவிமிடற்றுகருவிகஞ்சக்கருவி 

”யுத்தம் தொடங்குவதற்கு சில மணித்துளிகளுக்கு முன் நீங்கள் பார்க்கும் சுல்தானின் முகத்தில் பாருங்கள் எவ்வளவு சாந்தம்! எத்தனை அமைதி! வாத்சல்யம் பொங்கும் விழிகளில் துளிர்க்கும் காதலின் சுகந்தம் வீசும் அந்தப்புர சயன அறையில் பேகமும் சுல்தானும் மட்டுமே!நாமங்கு இருப்பது நாகரீகமில்லையன்றோ… வாருங்கள் இருவரும் சந்தோஷிக்கட்டும்.”

-ஏன் அங்கு நிற்கிறாய் சிந்து அருகில் வா… இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நாணத்தில் முகம் சிவந்து ,வெட்கப்பட்டு சந்தோஷ மணித்துளிகளை வீணடிப்பாய் மைசூர் பட்டுத்துகிலே…!

-உங்களுக்கென்ன ’சட் சட்’டென மாறுவீர்கள் சுல்தான்ஜி… எப்போது  என் கணவராக இருக்கிறீர்கள்.. எப்போது நம் குழந்தைகளின் தந்தையாக… எந்த நிமிடத்தில் மைசூரின் மன்னராக…மாறுகிறீர்கள்…? உங்களுக்கு மட்டுமே தெரிந்த ராஜ்ய ரகஸ்யமன்றோ மன்னவரே…

யுத்தக் களத்தின் விடுமுறை எப்போதாவது தான் வாய்க்கிறதென் ராஜாவே…உமக்கு.விடுமுறையில் வரும்போதெல்லாம் கலைத்து போட்டுவிடும்  உங்கள் கலைக்கரங்களை கண்டிப்பதும் ஏலுமோ எனக்கு..

சந்தோஷப் பெருமழையில் மூழ்கடிக்க மூச்சுத்திணறித்தான்  போகிறதே!..ஆனந்தத்தில்..அப்பப்பா… எத்தனை வேகம்.. எத்தனை வேகம்!

அந்தப்புரம் .இந்தப்புரம்..என எந்தப்புரமும் இரைந்துகிடக்கும்  மன்னவன் ஞாபகங்களை எடுக்கவோ கோர்க்கவோ…எது எப்போதென தெரியா ரகஸ்யமே உங்கள் சுவாரஸ்யம்..

துளித்துளியாய் முயற்சித்து மீண்டு வருகையில்..தலைக்காட்டுகிறது அடுத்த விடுமுறை..ஹூம்!

-பட்டத்தரசியின் அனல் பெருமூச்சின் ஆகர்ஷம் தீண்டியதோ அரசனை…!

-சமயங்களில் வேண்டும் வேகமென விண்ணப்பித்து செவியருகில் சிணுங்கியதை மறந்துவிட்டு குற்றப்பத்திரிகை வாசிக்கிறாயே… செல்லச் சிந்து நியாயமா..?

பேகம் என் பிரியமே…! ஆயிரம் ஆயிரம் அர்த்தங்களை மூடித் திறந்து அழைக்கிறதுன் நயனங்கள்… தீண்டலின் சுக ராகத்தில் துளிர்த்து பாய்கிறது என்னுள் பெரும் சக்தி …!

நிலவு குளிர் பொழிய சாமரம் வீசும் இதத்தென்றல்….உனது புன்முறுவல் அழைப்பின்  கண்சிமிட்டலுக்காய்  காத்திருக்கின்றன என் தாபக் கரங்கள்…!

-பரிவு நிறைந்த உம் விரல்களின்  தீண்டலில் மறைகிறது விழிநீர் கோடுகள்.. எல்லை தாண்டிய சுகங்கர வாதத்தை தாளமுடியாமல் சரணடைகிறேன்

ஒவ்வொரு முறையும் படுகளத்தில் என் ஆயுதங்களைக் கைப்பற்றிக்கொண்டால் தோற்பதே இயல்பு.. வெற்றிகளைக் கைக்கொள்ளும் வியூகங்களை எங்கு கற்றீரோ..வீரப்பிரதாப புவனமே…!

-காயம்பட்ட மனசுக்கு மருந்திடுமுன் உரையாடலில் மறக்கிறதே  என் மனவலி ச்ச்ச்செல்லமே…! போரின் ஓசையிலே வாழ்க்கையை கழிக்குமென் பொழுதுகளில் ருசிக்கிறாய் சங்கீதமாய்…!

துயர்க் கவிழ்ந்த  யுத்தத்தின் இருள் சூழ்ந்த என் வானில் ஒளி பொருத்துகிறாய்

நீ இசை!

நீ ஒளி!

நீ. புதிர்..!

நீ புன்னகை..!

நீ மகிழ்வு…!

நீ..நிம்மதி..!-

வாரி வழங்கும் முத்தங்கள்  யாவும் யுத்த முறைகள் தானா..ராஜாவே

சமாதானம் பேச வந்தவள் மீது இப்படியோர்ப் படையெடுப்பு நியாயம் தானா..

 

– காதலிலும் யுத்ததிலும் எதுவும் நியாயமென உலகோர்க் கூறியதை அறிந்திலையோ..கூந்தலின் பூவிதழொன்று என்மேல் ஒட்டிக்கொண்டது, கமழ்ந்ததுன் சுகந்தம் என் மீது.. எரிவதை அணைப்பார்கள்… அணைப்பதால் எரிகிறேன்.அணை…வியர்வை வழியப் பரிமாறிக்கொண்டதில் அந்தப்புரம் எங்கும் காதல் சுகந்தம் உன்னை உரசினேன்; பொன்னின் சுகந்தம் உன்னைக்குழைத்தேன் சந்தன மினுப்பு உன்னைத் தழுவிக் கலந்தேன் என்னைக்கரைத்து அரூபமமானேன்…

உனக்கு நானும் எனக்கு நீயும் ஆக ஊட்டி கொள்வோம் வாழ்வின் இனிய சுவையை…! வா..நெருங்கி வா !

 

கலந்து உருமாறும் மேக நினைவின் காட்சியில் பூர்ணச்சந்திரன்

முத்தப்பூர்ணிமா..சந்திர அனலையும் சூர்யக் குளிர்மையும் தாங்காது வீழுமோர் எரிமீன்.. மயக்கமொரு விழி..மருட்சியொரு விழி..நிலவொளிப்பாலில் தேயுமா வளருமா இவ்விரவுறவு..ராஜ்ஜ்ஜ்ஜா…

 

– காற்று புகா அணைப்போடு துவந்த யுத்தம்…வியர்வை மொட்டுகள் மலர்கின்றன மல்லிகையாய்..மோக ரீங்காரம் இன்னமும் இசைக்கும் செவிகளில் தேனடை…உஷ்ணத்தில் உலர்ந்த ஈரக்கூந்தல் கோதலில் துளிர்க்கும் மோகனக்குமிழ்ச்சிரிப்பு…

சுவாரஸ்யமானதுதான் சுகமானத் தோல்விகளும்.. தொடுத்தாட் கொண்டாளே..!

 

-மெய் ,வாய் , கண் , மூக்கு , செவி என ஐம்பொறிகளிலும் முத்தங்களை விதைக்க பூக்கின்றனப் புஷ்பங்களுன் திரு மேனியில்…அடரிருளாயிருந்த என்னுள் ஒளி மலர்ச்சி..

 

எண்ணிக்கையின் கவலையின்றி நிகழ்கிறது உடலங்களின் இசைக்கச்சேரி

நம்மை நாமே நமக்குப் படையலிடும் நல்விருந்தாய் அமைகிறதிப் போதையூறியப் பொழுது…தத்தளிக்கிறதுடல்..அடர்ந்த காதலின் பாசி நிறைந்த குளத்தில் இறுக்க அழுத்தத்தில் ஒட்டிக்கொண்டோம்.

 

கூதலுக்கு இசைவாயுன் அனல்மூச்சு  தீண்டச் சிலிர்ப்பாய் அணைக்க விலகி ஊசல் மனதைக் கட்டும் மாயக்கயிறெங்கே… மெழுகாயுருகும் காமத்தை அணைக்கும் வியர்வை  உடலங்களின் இசைக்குறிப்புக்கேற்ப  விழிகளின் நடனங்களில் சொக்குமெனை இறுக்கிக் கொல்கிறாய்..ம்ம்ம்ம்.ம்ம்

 

– எச்சிலும் வியர்வயும் கலந்த காமச்சுகந்த கசகசப்பு நீங்கி  நீராடி வருகிறாய்..

வருகிறாய்…. கிறாய்…தழுவக்குழைந்தவளே…!

 

-ச்சீ..ய்ய்…அரசராயிருந்தாலும் ஆண்களுக்கு லஜ்ஜையேயில்லாமல் எப்படித்தான் இப்படி பேச முடிகிறதோ…. சிணுங்கிக்கொண்டே நெருங்கி வந்த சிந்துவை சேர்த்தணைத்த திப்புவிடமிருந்து மோக பெருமூச்சு!
ம்…அப்பப்பா…. அனல் மூச்சில் கரைந்து விடப் போகிறதென் மெழுகுடம்பு…

 

மன்னர் மார்பில் சாய்ந்த பட்டத்தரசியை ஆசையுடன்  ஆக்கிரமிப்பு செய்த அரசனிடம் இணைந்து ஒத்துழைக்க…
காவிரியிலிருந்து வீசிய மெல்லிய குளிர் தென்றல்..இருவரின் வியர்வையைத் துடைத்து சென்று… கடந்தது…

வேறுவழியின்றி பிய்த்துக்கொண்டு பிரிகிறதந்த இணைப்பறவைகள்.

 

”போகலாமா வேந்தே போஜன அறைக்கு… வயிற்றுக்கும் உணவு வேண்டும்தானே!”

”உத்தரவு பெருந்தேவி… இரு கைகளையும் விரித்து தலை குனிந்து சலாமிட்ட சுல்தானின் நெற்றியில் முத்தமிட்ட…. சிந்து ராணியின் செவ்விரல் பிடித்து உணவருந்த கிளம்பிய திப்புவுக்குத் தெரியாது… அடுத்தடுத்து  காத்திருக்கின்றன அதிர்ச்சி தகவல்களென…
மேஜைமேல் விதவிதமாய் உணவுகள்! பழச்சாறு மற்றும் பழத் துண்டுகள்!

 

-எங்கே நமது செல்வங்கள் சிந்து. அவர்களையும் அழை! சேர்ந்துண்போம் இன்று.-வாருங்கள் என் செல்வங்களே முயிசுத்தீன், அப்துல் காலிக்.

இளவரசர் இருவரையும் இழுத்தணைத்து முத்தமீந்தார் தந்தை திப்பு..அதுவே தம் இறுதி முத்தமென அறியாமல்

மச்சமும், மாம்சமுமாய் இருப்பதால் எலும்பு துண்டுகள்…. மிச்சமாகி இருக்கிறது. இதே மரக்கறியாக இருந்தால் ஒரு கறிவேப்பிலை கூடத்தில் இருக்காதே சிந்து மகாராணியின் முகத்தில் பெருமிதம்!
எதை எதை எப்படி வாங்கி திருப்பித் தரவேண்டுமென்பதை மகளிர் அறிவர். சிந்து பேரரசியோ சுல்தானின் சுவையறிந்தவர்.


அடுத்த பகுதி -04 
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x