20 April 2024

02

குடிப்படை (Militia)  – ஒரு நாட்டின் இராணுவத்திற்குத் தேவையான நேரத்தில் உதவி புரிவதற்காக, முன்னேற்பாடாக அமைக்கப்பட்டிருக்கும் படை. அமைதி நிலவும் காலத்தில் நிலையான பெரும்படையைப் பராமரிப்பது என்பது எந்த நாட்டினாலும் இயலாத ஒன்றாகும். அப்படிச் செய்தால் நாட்டின் பொருளாதார வசதிகளும், செல்வமும் சீர்கெடும். எனவே, போரில் அல்லது அயலவர் படையெடுப்பை முறியடிக்கும் பணியில் இராணுவம் ஈடுபட்டிருக்கும் பொழுது, உள்நாட்டில் அமைதிக் காக்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் குடிப்படை அமைக்கப்படுகிறது. இப்படையினருக்கு எல்லாப்படைப்பயிற்சிகளும் அளித்து, இரண்டாவது வரிசை இராணுவமாக உருவாக்குகின்றனர். இதனால் போர் நடவடிக்கைகளுக்குக் கூடுதலான வீரர்கள் தேவைப்படும் பொழுது, ஏற்கனவே பயிற்சி பெற்று முன்னேற்பாடாக இருக்கும் இப்படையிலிருந்து, இராணுவத்திற்கு வீரர்களை சேர்த்துக் கொள்ளப் படுகின்றனர்

”நான் தான் காவிரி பேசுகிறேன்..!அய்யா…கோரே கட்டத்து கரையில் அமர்ந்து அலையாடுமெனை அகன்ற விழிகளால் ஆச்சர்யத்துடன் நோக்குபவரே…உங்களைத்தான்..

உங்கள் ஆடையும்..அம்சமும்  என் பயணத்தின் பெரும்பகுதியைப் பகிர்ந்துகொள்ளும்  தமிழ்நாட்டை சேர்ந்தவரைப்போல் தெரிகிறது…சரிதனே என் யூகம்…நகைக்கிறீர்கள்..

நதி எங்காவது பேசுமா…?…உங்கள் நகைப்பு எனக்கு புரியாமலில்லை…
அய்யா..உங்கள் ஊர் மகாகவி ஒருவன்  படைப்பில்   தராசு பேசவில்லையா …?

நம் முன்னோர் கதைகளில் ஊர்வன நடப்பன பறப்பன எனப் பேசாதவை யாவும் பேசவில்லையா …?

அது சரி! நாங்கள் பேசிய மொழி எல்லாம் உங்களுக்கு விளங்கி விட்டதா…?ஓடைகளின் “சலசல “வைப் புரிந்து உங்களில் எத்தனைப் பேர் மொழிபெயர்த்தீர்கள்?… எங்கள் கோபம் பொங்கும் வெள்ளமாய் உட்புகுந்து அழித்ததன் பொருளறிந்தீரா…?

என் காதல் கணவன் கடல் என்னும் சமுத்திர மகா மன்னன்  பெரும் ரவுத்திரத்தோடு ஆழிப் பேரலையாய்  பேருரு காட்டியதன்  அர்த்தம்  புரிந்தீரா..இல்லையே…என் மீது மட்டும் ஏன் நகைப்பு!

கிடக்கட்டும்…! இப்பொழுது என் உரையாடலும் விவாதமும் இவைக் குறித்தல்ல…என் மைசூர்ப் புதல்வன் திப்புவைக்குறித்து…கேட்பீரா…? நேரமுண்டா…?

திப்பு என்னும் தீரனின் நாளும் பொழுதும்..வல்லமை மிக்க வாழ்வோடு கலந்த இந்த காவேரி அன்னையின் புலம்பலாகவேனும் புரிந்து கொள்ளுங்கள்.கேளுங்கள் என் குரலை..தயவிட்டு.!

யுத்தம் என்னும் பேரரக்கன் என் ப்ரிய மைந்த திப்புவின் உயிர் குடித்த வலிக்காதையை கேளுங்கள் ”

குடகின் உச்சியில் பாகமண்டலா சதுர குளத்தில் தலைக்காவிரியாய் பிறந்து ,மேலமலை வனங்களில் தவழ்ந்து கானுயிர்களின் தாகம் தீர்த்து, கன்னட மக்களின் தாயாய்…தாதியாய்.. தோழியாய்…கொஞ்சி விளையாடி  குஷால்நகரின் கரையிலே கருஞ்சிலையாய்… இராமநாதபுரத்தில் வழிபடும்  தெய்வமாய்  வாழ்விக்கும் காவிரி மாதா.ஹேமவதி,சொர்ணவல்லி கபினி என த் தோழியருடன்  ஸ்ரீரங்கப்பட்டணத்தில் சமவெளியில் சந்தோஷ சங்கமத்துடன் ஆனந்தமாய்  மகிழ்ந்தோடும் காவிரியின் முகத்தில்  தான் கலக்கம்!

காவிரித்தாயின் கலக்கத்திற்குக் காரணம் இல்லாமலில்லை!

ஸ்ரீரங்கப்பட்டணத்தீவின் இரு கரைகளிலும் செவ்வாடை அணிந்த பரங்கியர் படை.

கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறிக் கொண்டிருந்தது பிரிட்டிஷ் படை. இரு கரை வழியாய் பெருகிவரும் வெள்ளைப்படைக்கு முன் திப்புவின் படைகள் சொற்பம்! ம்…ம்..ஆனாலும் என்ன! கூலிக்கு யுத்தம் செய்பவர் எவரும் வெல்வரோ எம்கொள்கை வீரரை…?ஆனால் நடக்கும் நிகழ்வுகள் காவிரியின் கை மீறி…சிந்தனைத்தாண்டி போய்க் கொண்டிருக்கின்றன!

”என்ன நிகழப்போகிறது….? என்னவெல்லாம் நடக்கப் போகிறது…?
என் புதல்வன் எங்கே…?என்  திப்பு எங்கே…..? என்னவாயிற்று என் மகவுக்கு..?. மகனே! நலம்தானே நீ!”

அறியாள் இவள்!மண்ணின் புதல்வரின் செங்குருதி தம்மோடு விரைவில் கலக்குமென்று அறியாள் காவிரித்தாய்…


அடுத்த பகுதி -03 
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x