மரம் சொன்னது

577      இரத்த சிதறலோடு துண்டிக்கப்பட்ட விரல் ஒன்று என் மீது விழுந்த போது மீண்டுமொருமுறை மோனத்திலிருந்து விழித்தெழுந்தேன். என்னருகில் இருக்கும் மரணமடைந்த மனிதர்களுடன் தான் பேசுவேன். குறிப்பாக அவர்களின் இரத்தத் துளிகளோ சிதைந்த உடல் பாகத்தின் ஏதாவது ஒரு பகுதியோ என் மீது கண்டிப்பாக தெறித்திருக்க வேண்டும்.   வாசம் கூட நற்கடத்தியாக செயல்பட முடியும். ஒருவரின் வாசத்தில் அவரது வாழ்வு முழுவதும் பதியப்பட்டுள்ளது. காற்றில் கலந்துள்ள உயிர்ப்பின் விகாசிப்பை வாசத்தின் மூலம் அறிந்துகொள்வது ஒரு வழிமுறை. மூச்சை … Continue reading மரம் சொன்னது