இசையின் பயன்


னதை வசப்படுத்த வல்லது இசை எனில் மிகையில்லை நிகரில்லா இசை மனிதனை மனிதனோடு இசைவிக்கிறது . அஃதே இறைவனோடும் இசைவிக்கிறது . இசையை உணர்ந்தவன் படைப்பின் தத்துவத்தை அல்லது பிறப்பின் ரகசியத்தை உணர்பவன் ஆகிறான். முரண்படுகின்ற மன உணர்வுகளை சீர் செய்யவல்ல கருவி இசை. ஆன்மாவை இசைப் அதனால் தான் இசை என்ற பெயர் பெற்று இருக்குமோ என எண்ணத் தோன்றுகின்றது . இசை ஸ்வரங்களுக்குள் இடையே மட்டுமல்ல முரன்பட்ட அனைத்திற்கும் இடையே இது இசைவை ஏற்படுத்துகிறது. மொழி ஒரு பெறுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே இசை எழுந்துவிட்டது என்று மொழி நூற் புலவர் ஆட்டோ எபர்சன் கூறியுள்ளார்.

இசை இனியது. தமிழிசை அதனிலும் இனியது . ஆற்றல் அளவிடற்கரிய தமிழிசையை பல்லாயிரம் ஆண்டுகளாக பேணி வளர்த்து வருபவர்கள் தமிழர்கள். இசையின் மெய்விளக்கியலை நுணுகி ஆய்ந்த நுண்மான் நுழை புலம் வாழ்ந்த பேரறிஞர்கள் இசையில் மேன்மைப் ஒரு தெய்வீகத்தன்மை உண்டென்றும் புலன் உணர்வுக்கு கேட்காத பண்பை ஆழ்மன சக்தி தேர்ச்சி பெற்றோரால் உணர முடியும் என்றும் நிரூபணம் செய்துள்ளார்கள். நம் ஆன்மாவை தாலாட்டும் , மலர்த்தும், புத்துணர்வாக்கும் சக்தி இசைக்கு உண்டு. அதை மருத்துவ ரீதியாகவும் உண்மை என்று தெரிவிக்கின்றன ஆய்வுகள். அறிஞர் காண்ட் என்பவர் ” இசையானது இன்பக் கலைகளின் மூடி ” எனக் கூறுகிறார் . டி .எம். பின்னி ஐரோப்பிய இசை வல்லுநர் ” இசையானது வரலாற்றின் பலமான ஊழியில் துளிர்த்த ஒரு சமுதாய கலையாக இருக்கிறது சமுதாயம் உரிமை பெற்ற ஒரு பகுதியாகவே இசை அமைப்பு உள்ளது ” என்கிறார்
நீட்சே என்பவர் ” இசை இல்லாத வாழ்க்கை சுவைக்காது ” என்கிறார் கன்பூஷியஸ் ” இசை உண்டாகும் இன்பம் இல்லாது மனிதன் வாழ முடியாது ” என்கிறார்.

மொஹஞ்சதாரோ பண்பாட்டை கட்டி வளர்த்த திராவிடப் பெருங்குடி மக்களின் முன்னோர்களான நாகரிக மக்கள் இசையோடு சேர்ந்து இன்புற்று வாழ்ந்து வந்துள்ளனர் . இவ்விசை சிந்துவெளி முதல் அசாம் எல்லை வரை முகிழ்திருப்பினும் இமயம் தொட்டுக் குமரி வரை நின்று நிலவி இந்த இனத்தவர்கள் இடமும் காண முடியாத அளவில் இசைத்தமிழ் சீரும் சிறப்பும் பெற்று தழைத்தோங்கியமையே வரலாறு……….! தமிழன் இசையோடு தான் பிறந்தான். இசை பெற வாழ்ந்தான் . இசையுடனே இறக்கின்றான். அவன் உடலோடும் உயிரோடும் ஒன்றிய இசை அவன் உயிர்துறந்த பின்னரும் ஆன்மாவோடு பொருந்தி நிற்கும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

இசையை இறைவனின் வடிவமாக கண்டவன் தமிழன். ” பிரந்த பாரிடம் ஊரிடைப்பலி பற்றிப்பார்த்துணுஞ் சுற்றமாயினீர் தெரிந்த நான் மறையோர்க்கிடம் ஆகிய திருமிழலை இருந்து நீர் தமிழோடிசை கேட்குமிச்சையாற் எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடுகிறார்.

சிவபெருமான் எங்கும் நிறைந்தவன். எந்நாட்டவர்க்கும் இறைவன் தான். ஆனாலும் அவன் தென்னாட்டிற்கு வந்து காட்சியளித்து தமிழிசை கேட்டு மகிழ்வதற்கு என்றே தேவாரத் திருமுறைகள் கூறி நிற்கின்றன.

“திங்களோடும்
மண்ணோடும்
மங்குல்”

தமிழன் தான் தன் மொழியை முத்தமிழ் ஆக கண்டவன் உலகில் ஒருவரும் தம் மொழியை இயல் இசை நாடகம் என மூன்றாக வகுத்த காணவில்லை.

“பாலும்
நான்கும்
கோலஞ்செய்
தூமணியே ”

என இறைஞ்சியவர் எங்கள் தமிழ் பாட்டி ஔவை. மூங்கிலில் வண்டுகள் துளையிட்டு அதன் வழியாக காற்று எழுப்பப்படும் ஒலிகள் அறிவு மலையிலிருந்து விழும் போது பாறைகளில் மோதி ஒலிகள் மலைச்சாரலில் ஒன்று கூட்டும் ஒலிகள் என ஒலிகளை கண்டே இசை முடிந்தவன் தமிழன் ஆதியில் தமிழர்கள் வாழ்ந்த நிலம் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை எனப்பட்டது இந்நிலங்களில் வாழ்ந்தவர்கள் முறையே குறவர் ஆயர் பரவர் மறவர் எனப்பட்டார்கள் இவர்களது இசை முறைமையில் முறையே குறிஞ்சி முல்லை மருதம் செவ்வழிப்பண் என இருந்துள்ளது.

வில்லில் நாண் ஏற்றி அம்பை உங்கள் அதில் எழும் ஓசையை கண்டு வில்லை முதன்முதலில் உருவாக்கினர் வில்யாழ் குறிஞ்சி நில மக்கள் இதை முதலில் காணப் பெற்றதால் இது குறித்து முதல் முதலாக மலர்ந்தது இந்த வாத்தியத்தின் என்றும் இன்னொரு விலங்குகளையும் பறவைகளையும் ஊர்வனவற்றின் ஏனைய உயிரினங்களையும் பறவைகளையும் பரவலாயிற்று கோபத்தை தணித்துக் கொள்ள இன்னிசை அமையப் பெற்ற ராவணன் தன் யாழை மீட்டி இறைவனின் கோபத்தைப் அணிவித்து அவர் அருளை அடைந்து வேண்டிய வரங்களைப் பெற்று உள்ளான் என்பது நமது பழங்கதை. புகழ் மிக வாய்ந்த பிற்கால புலவர் புகழேந்தியும்

“நெற்றித்தனிக்கண்
கொற்றத்தனியாழ் ”

என நளவெண்பாவில் சிறப்பிக்கிறார்.

பழம்பெரும் நூலாகிய தொல்காப்பியத்தில் பறையும் யாரும் வாழ்வின் கருப்பொருள் இசையாய் கொள்ளப்பட்டன.

தெய்வம் உணவே மாமரம் புள் பறை செய்தி யாழின் பகுதியோடு அவ்வகை பிறவும் கருவென மொழிப எனச் சான்று பகர்கின்றது.

நன்றி


கலைஞானச்சுடர், ஸ்ரீமதி, சுபாஷினி
ஆசிரியை, 
இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி,
பம்பலப்பிட்டி. இலங்கை .
இயக்குநர்  – தேஜஸ்வராலயா கலைக்கூடம்.

ஆசிரியர்

சுபாஷினி

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page