திரௌபதியின் சேலையில் பற்றி எரியும் அரளிப்பூக்கள்

Views: 558 அள்ளிமுடித்திருந்த தலை மயிற்றினை கலைத்துப்போட மனமில்லாமல்தான் மண்டபத்தில் நின்றுகொண்டிருந்தாள் திரௌபதி.  அரளிப்பூக்கள் நான்கு வர்ணங்களில் கொத்துக்கொத்தாய் பூத்திருந்த சேலையினைதான் அன்று உடுத்தியிருந்தாள்.  அஸ்தினாபுரத்தின் கானகம் அனைத்திலும் திரௌபதியின் சேலையில் மண்டிகிடந்த அரளிப்பூக்களின் உதிர்ந்த இதழ்கள் பேரடுக்குகளாக ஒன்றன்மீது ஒன்றாக மண்டிகிடந்தன.  கொய்து வரப்பட்ட சமைந்த பழமாக இருந்த திரௌபதிக்கு கொடும் துயரம்தான்.  “நானும் வருகிறேன்” எல்லோரும் சேர்ந்தே கனியினை சுவைக்கலாம் என்று திரௌபதியினைப் பார்த்து குந்தி சொல்லியிருந்தால், … Continue reading திரௌபதியின் சேலையில் பற்றி எரியும் அரளிப்பூக்கள்