சீக்கிரம்-வந்து-கைகளைக்-கழுவு, இரவுணவு-ஆறுகிறது-தேனே,
உன்- அப்பா- வரட்டும்- இரு எனத் தம் அம்மாக்களால் அழைக்கப்பட்ட
அனைத்துத் துடியான குழந்தைகளும் உள்ளே சென்று விட்டிருந்தார்கள்,
வெளியே மெதுவான குழந்தைகள் மட்டும் புல்வெளிகளில் —
மின்மினிப் பூச்சிகளுக்கு ஊடான பாதைகளை அழித்தபடி
தங்கள் வாய்களால் மென்மையான, சிறிய ஒலியுடைய
ஒளிரும், வெளியேறி மிளிரும் ‘ஓ’க்களை உருவாக்கியபடி.
அவர்களின் மெதுவான அம்மாக்கள் — அந்தியில் மங்கலாய் மினுங்கியபடி,
அவர்கள் மென் காற்றில் திரும்புவதைக் கவனித்தபடி,
அவர்கள் தங்கள் கரங்களை விரித்து நீட்டி சுழல்வதைக் கவனித்தபடி,
இவர்கள் என் குழந்தைகள் என நினைத்துக் கொண்டு,
அவர்களின் இரவுணவு எங்கே இருக்கிறது? அவர்களின்
அப்பா எங்கே சென்று விட்டார் என யோசித்துக் கொண்டு…
– சிசிலியா வாலக்
ஆங்கிலத்திலிருந்து தமிழில்: மிருணா.
சிசிலியா வாலக் (Cecilia Woloch): அமெரிக்கக் கவிஞர், ஆறு கவிதை நூல்களும், ஒரு புதினமும், எண்ணற்ற கட்டுரைகளும் எழுதியுள்ளார். மிருணா: எழுத்தில் ஈடுபாடுள்ள இவரது கவிதை, கட்டுரை, மொழியாக்கங்கள் சிறுபத்திரிக்கைகளில் இடம்பெற்றுள்ளன.
(Poem Source: The Writers Almanac )
Very nice. Miruna poem super