20 April 2024

சமுக சிந்தனையாளர் அருட்தந்தை. முனைவர். B.ஜான் சுரேஷ் அவர்களைப் பற்றி நான்‌‌ அறிந்த சிலதுளிகள் :

கல்வி ஆசானாய், சமூக களப் போராளியாய் , சமூக ஆர்வலராய், தமிழ் ஆடற்கலையின் பயிற்சியாளராய், சிறந்த எழுத்தாளராய், பேச்சாளராய், தெரு நாடக கலைஞராய், நாட்டு மருத்துவராய் ,ஆன்மீக தந்தையாய் , கிராமிய பாடகராய், அடவு கலைக் குழுவின் நிறுவனராய், Eat The Word  நற்செய்தி பறை சாற்றும் YouTube Channel ஒருங்கிணைப்பாளராய் இப்படி பல துறைகளில் சிறந்து விளங்கிய அருட்தந்தை முனைவர் B. ஜான் சுரேஷ் அவர்கள் 27.10.1970 அன்று பிறந்து , 20.04.2001 குருவாய் திருநிலைப்படுத்தப்பட்டார்.  50‌ ஆண்டுகாலம் மாமனிதராய்‌ வாழ்ந்து 12.05.2021 அன்று நம்மை விட்டு பிரிந்தார்.

சமூதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் ஏழை எளியவர்களின் கல்விக்காகவும் பலரின் வாழ்வில் ஒளி தீபமேற்ற  தன் வாழ்வை அர்பணித்து சமுக தொண்டாற்றிய ஒரு மாமனிதரை  இன்னமும் நம்மில் பலர் அறியாமல் இருக்கிறோம். நாம் அனைவரும்‌ நிச்சயமாக அறிந்துக்கொள்ள வேண்டிய அவர் அருட்தந்தை முனைவர்.B. ஜான் சுரேஷ் அவர்கள். அவருடைய அர்பணிப்பில் நான்‌‌ அறிந்த சில துளிகளை‌ உங்களுடன்‌ பகிர்ந்துக்கொள்ள கிடைத்த இந்த அறிய வாய்பினை நான்‌ அருட்தந்தைக்கும் அவருடைய தியாகத்திற்கும் செலுத்தும் ஒரு நன்றிகடனாய் எண்ணுகிறேன்.

பாபாசாகிப் அம்பேத்கர் அவர்களின் கொள்கைகளை ஏற்று அவர்வழியில் சமூகப் பணியாற்றிவரும் எனக்கு உறுதுணையாகவும், எது சரி எது தவறென்று எனக்கு அறிவுரைக்கூறி  நான் அடியெடுத்து  வைக்கும் ஒவ்வொரு செயலிலும் எனக்கு பக்கபலமாகவும் என்னைப்போன்ற எத்தனையோ ஆயிரம் இளம் சமூதாயத்திற்கு துணையாக  இருக்கும் என் அன்பு  அண்ணன் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் K . ஆம்ஸ்ட்ராங் BA.BL. அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்‌ அவருடைய உடன் பிறவா சகோதரர் அருட்தந்தை. முனைவர். B. ஜான் சுரேஷ் அவர்களின்‌ இறப்பு எங்கள் அனைவருக்கும் பேரிழப்பு.

பல நாட்களாக அருட்தந்தையை சந்திக்க  ஆர்வமுடன் காத்துக்கொண்டிருந்தேன். அதற்கு ஏற்ற நேரம் கிடைத்தபோது ஒரு அதிர்ச்சி செய்தி கிடைத்தது‌ அருட்தந்தை அவர்கள் பெருந்தொற்றான கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றுவருகிறார் என்று.

நான்‌ வசிக்கும் இடத்திற்கு மிக அருகாமையில் இருக்கும் புனித கடற்கரை அந்தோணியார் தேவாலயத்திற்கு நான்‌ திருப்பலிக்கு செல்லும்போது  பாபாசாகிப் அம்பேத்கர் அவர்களின் இலட்சிய சமூகமான சுதந்திரம் , சமத்துவம், சகோதரத்துவத்தை அருட்தந்தையுடைய இறைவார்தைகளில் கேட்டுணர்ந்து  மெய்சிலிர்த்து போன நாட்கள் ஏராளம் .

மக்கள் பணியில் இரவுப் பகலாய் தன்னை அர்பணித்துக்கொண்டாலும் பரிசுத்தமான ஆன்மீகம், தன்னொழுக்கம், பயபக்தியுடனான திருப்பலி, மறையுரைகளை தற்கால சமூகத்துடன் ஒப்பிட்டுரைப்பதில் இவரைப்போல கைத்தேர்ந்தவர் எவருமில்லை எனலாம்.

பாபாசாகிப் டாக்டர். அம்பேத்கர் அவர்களின் கோட்பாடுகளான கற்பி, கிளர்ச்சிசெய், ஒன்றுசேர் என்பதை தன் வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு “ஜெய்பீம்” என்ற வீரமுழக்கத்தை  எல்லோரிடத்திலும்‌ கொண்டுசேர்த்தவர். இவரது சமூகப் பணியை பாராட்டி குருக்குல் இறையியல் ஆய்வுமையம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.

கிராமத்து இளைஞர்களின் திறமையை வெளிநாடுகள் அறிய செய்தவர்: 

கிராமத்தில் வசிக்கும் இளைஞர்களை அவரவர் திறமைக்கேற்றவாறு சிறக்கச்செய்து கலைகளின் மூலம் அவர்களை ஆற்றல் படுத்தி அவர்களை ஒரு குழுவாக ஐரோப்பிய நாடுகளுக்கு அழைத்துச்சென்று நமது மண்ணின் கலைகளை , மக்களிசையை பரப்பியதன் விளைவாக இன்று கனடா, பெல்ஜியம் , மலேசியா, சிங்கப்பூர் , பர்மா , இலங்கை போன்ற நாடுகளில் Street Theater Workshop முன்நின்று நடத்தியிருக்கிறார்.

ஏழை , எளியவர்கள் கல்விக்கு உதவிய அருட்தந்தை : 

ஒவ்வொரு ஏழை எளிய மாணவரும் கல்விக்கற்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டுமென்பதே அருட்தந்தையின்‌ கனவு.

ஜெர்மனி, ஆஸ்திரியா போன்ற நாடுகளின் மாணவர்களின் துணைக்கொண்டு  பட்டியலினத்தவர்கள், ஏழை , எளிய மாணவர்களின் கல்விக்கு உதவுவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு உணவு ,  உடை, இருப்பிட வசதிகளை எற்படுத்தி தந்து மாணவர்களின் கல்வி வாழ்க்கைக்கு வித்திட்டவர்‌.

அருட்தந்தையின் கல்வி உதவியினால் ஆளுமைகளான மாணவர்கள்: 

இவர் உருவாக்கிய மாணவர்களில் பலர் அரசு உயர் அதிகாரிகளாக, மாவட்ட ஆட்சியாளர்களாக, பேராசிரியர்களாக, எழுத்தாளர்களாக கவிஞர்களாக, இசையமைப்பாளர்களாக, கலை பயிற்சியாளர்களாக ,படைப்பாளர்களாக ,காவல்துறை அதிகாரிகளாக, மருத்துவர்களாக ,ஓவியர்களாக, வழக்கறிஞர்களாக, செவிலியர்களாக ,ஆசிரியர்களாக ,ஊடகத் துறை வல்லுனர்களாக, அரசியல் ஆளுமைகளாக சமூக செயற்பாட்டாளர்களாக, மனித உரிமைப் போராளிகளாக, நீதிக்கான களப்பணியாளர்களாக, பொறியியல் வல்லுனர்களாக ,அறிவியல் ஆராய்ச்சியாளராக, IT துறை ஊழியர்களாக இப்படிப் பேர் ஆளுமைகளை உருவாக்கிய பெரிய ஆளுமை அருட்தந்தை முனைவர் B. ஜான் சுரேஷ் அவர்கள்.

அருட்தந்தையின் முயற்சியினால் உருவான கல்வி மற்றும் ஆன்மீக கட்டிடங்கள்:

  •  வெறும் அடித்தளமே போடப்பட்டிருந்த கட்டிடத்தை 36 வகுப்பறைகளை கொண்ட இரண்டடுக்கு கட்டிடமாக கட்டி முடித்தார். ஆர். அருளப்பர் மேல்நிலைப்பள்ளி இவருடைய இரத்தம் சிந்தி கட்டப்பட்ட கட்டிடமாகும்.
  • பெண்கள் மற்றும் ஆண்களுக்கான விடுதிகள் கட்டினார்.
  •  Jeevan Jyothi Institute Of Administrative Studies செங்கல்பட்டு மறைமாவட்டத்தின் IAS,IPS தமிழகத்தின் வழியாக தனது வாழ்நாள் கனவான அதிகாரம் மறுக்கப்பட்டவர்கள் இருக்கு அதிகாரத்தை ஏற்படுத்தும் பணி அளப்பறியது‌.
  • புனித ஜெயக் காரணி அன்னை  தேவாலயம் இவரது ஆன்மீகத்தின் அடையாளம்.

பறையிசை பிரியர்:

பறை இசையை திருப்பலியில் கூட இசைக்கச்செய்தவர். ” நேத்து இருந்தா இன்னைக்கு செத்தான், நேத்து இருந்தா இன்னைக்கு செத்தான், என்னைக்கு செத்தான், இன்னைக்கு செத்தான், நேத்து நேத்து நேத்து நேத்து , இன்னைக்கு இன்னைக்கு இன்னைக்கு இன்னைக்கு, நேத்து இருந்தா இன்னைக்கு செத்தான், நேத்து இருந்தா இன்னைக்கு  செத்தான் ” என்று தன்னுடைய அளப்பறிய ஞானத்தினால் பறையிசையின் ரிதத்தை விளக்கிய பெருமை இவரையே சாரும். மாணவர்களுக்கு பறை இசை பயிற்சி வகுப்புகள் மூலம் அவர்களை பல இடங்களில் பறை இசைகள் மூலம் திறமைகளை வெளிக்கொணர செய்தவர்.

பௌத்தம் மற்றும் தம்மத்தை பரப்ப அருட் தந்தையாற்றிய  பங்கு: 

பௌத்தத்தை ஏற்று தன்னுடைய ஆன்மீக இறை பணிகளின் வழியாக திருப்பலியிலும் கூட  மக்களிடத்தில் பௌத்தத்தையும் தம்மத்தையும் எடுத்துரைத்தவர்.

சிறந்த எழுத்தாளர் அருட்தந்தை :

அருட்தந்தை எழுதிய கவிதைகள், கதைகள் ஏராளம். மண்ணுக்கு திரும்புவோம் கவிதை நூல் மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றது.

கொரோனா காலத்தில் அருட்தந்தையின் மக்கள் சேவை:

கொரோனா காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான  ஏழை எளிய மக்களுக்கு உணவு மற்றும் மளிகை பொருட்களை வழங்கி அவர்களின் பசியை ஆற்றியவர்.

கொரோனா காலகட்டத்தில் மட்டுமன்றி ஒவ்வொரு ஏழை குடும்பத்திற்கும் மாதமாதம் உணவுக்கு வழிவகை செய்தவர். பல ஏழைகழுக்கு வீடு மற்றும் வீட்டு வாடகைகள் கட்டவும் உதவியவர். இல்லை என்று சொல்லாமல் ஒரு கை செய்வது மற்றொரு கைக்கு தெரியாமல் ஆற்றிய உதவிகள் எண்ணிலடங்காதவை.

 அருட்தந்தையின் கலையார்வம் பொழுதுபோக்குக்காக இல்லை சமூகத்தின் விடுதலைக்காக விடியலுக்காக.

எதையும் மாற்றி யோசிப்பதில் வள்ளவரான அருட்தந்தை முனைவர் B.ஜான் சுரேஷ் அவர்கள் ஆற்றிய மக்கள் சேவை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக ஆற்றிய பணிகள் இப்புவியில் வாழும் அனைவரும் அறிந்திட செய்வோம்… அவரைப்போல் நாமும் பாபாசாகிப் அம்பேத்கர் வழிநின்று சாதி , மத , இன பேதமின்றி சுதந்திரமான, சமத்துவமான , சகோதரத்துவமான சமூதாயம் உருவாகிட  அயராது உழைப்போம். கல்வி கற்க வழியின்றி தவிக்கும் ஒரு ஏழை மாணவ, மாணவிக்கு கல்விக்கு உதவி அவரை ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற செய்வதிலும் அல்லது பல துறைகளில் சாதிக்க செய்வதும்தான்‌ நாம் அருட்தந்தைக்கு செலுத்துகின்ற அஞ்சலி.

ஜெய்பீம் !  ஜெய் பாரத் !


இவள்,

ஸ்மைலி தபு.அ

எழுதியவர்

ஸ்மைலி தபு.அ
அ.ஸ்மைலி தபு (வயது 28) . MA ஆங்கில பயின்றவர். ஒரு சமூக ஆர்வலர். “சிறகுகளை தருகிறோம் பறந்து செல்லுங்கள்” தொண்டு நிறுவனத்தின் நிறுவனத்தலைவி. சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலிருக்கும் ஏழை எளியவர்களுடைய கல்வி வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக‌ பணிசெய்துக்கொண்டிருக்கிறார் . மகிழ்வன் பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்தில் பொதுச்செயலாளராக LGBTQIA+ மக்களின் கல்வி ,வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதார உயர்வுக்காக பணியாற்றி வருகிறார்.
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x