மதுரா கவிதைகள்

1.  ப்ரியத்துக்குப் பரிசாக வெறுப்பை யளிக்கிறீர்கள்.. நட்புக்குப் பரிசாகத் துரோகத்தை யளிக்கிறீர்கள் உதவிக்குப் பரிசாக உபத்திரவத்தை யளிக்கிறீர்கள் இனிமைக்குப் பரிசாகக் கசப்பை.. இன்னும்…இன்னும் நல்லவைக்குப் பரிசாக அல்லவைகளை யள்ளித் தருகிறீர்கள். ஏதுமற்று மௌனித்திருந்தாலும் தேன் தடவிய சொற்களோடு தூண்டிலை வீசுகிறீர்கள். இனி நான் செய்ய வேண்டியதெல்லாம் அன்பான மனசை அப்புறப்படுத்துவதின்றி வேறொன்றுமில்லை.. 2. கடைவழிக்கும் வாராத காதறுந்த ஊசியைக் கையளித்த போதும் இதயப் பாத்திரத்தை வெற்றுச் சொற்களால் நிரப்பிய போதும் […]

Continue Reading

இப்படிக்குத் தியாகிகள்

தியாகிகள் விருட்சமாகட்டும், துரோகிகள் விழ்ச்சிக் காணட்டும். இவ்வாக்கியம் ஆகஸ்ட் மாதத்திற்கு மிகவும் பொருந்தும். இம்மாதம் இரு முக்கிய தினங்களை நினைவுகூர்கிறோம். ஒன்று நாட்டின் சுதந்திர தினம். மற்றொன்று, உலக மனிதநேய தினம்(ஆகஸ்ட் – 19). தியாகமே உண்மை விடுதலைக்கான மருந்து. உண்மை விடுதலையே உரிமைகள் காக்கும் மனிதநேயச் சான்று. பாதிரியார் ஸ்டான் போன்று உண்மை விடுதலைக்காய் போராடும் போராளிகள் மனிதநேயமற்ற விதத்தில் படுகொலை செய்யப்படும் பாசிச ஆட்சியின் பிடியில் நமத்துப்போன […]

Continue Reading

மழை தருமோ மேகம்

முருகேசனுக்கு இரண்டு நாட்களாக நெத்திலி கருவாடு மீது ஞாபகமாக இருந்தது. சுடச்சுட சோறும் நெத்திலி கருவாட்டுக் குழம்பும் சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருந்தது. அந்த ஆசை காலையில் அவர் எழுந்ததில் இருந்து ஏக்கமாக மாறியிருந்தது.  அந்த ஏக்கத்தைத் தூண்டும் விதமாக காலையில் இருந்து வானம் மேகமூட்டமாகவே இருந்தது. காலையில் எழுந்தவுடன் வழக்கமாகக் கொடுக்கும் டீயை முதியோர் இல்லத்தில் கொடுத்தார்கள். முருகேசனும் அந்த டீயை எதையோ நினைத்துக்குடித்தார். இரண்டு நாட்களாக […]

Continue Reading

அகதா கவிதைகள்

புதிய சூரியன் எழும்பி இருந்தது பரிசுத்த காற்று நுரையீரல் வழி அடர்ந்த காட்டில் பச்சை இலைகள் புதியகிருமிகள் உருவாகவில்லை நோய்த்தொற்று இல்லை கிருமி நாசினி இல்லை புகைகள் இல்லை புகார்கள் இல்லை தடுப்புகள் இல்லை தடைத்தாண்டவுமில்லை ஆடையின்றிதான் இருந்தோம் சர்ப்பம் தெரிந்தது ஆப்பிளைக் கடிக்காமல் இம்முறை சுதாரித்துக்கொண்டோம் நானும் எனது ஆதாமும் வாழ்வென்னும் ஆற்றில் தத்தளிக்கிறது மன எறும்பு இலை பறித்துப்போட்டு காப்பாற்றத்தான் எந்த புறாவும் இல்லை பெரியசாமி தாத்தாவும் […]

Continue Reading

பிரோஸ்கான் கவிதைகள்

ஏற்கனவே படைக்கப்பட்டவன்   நான் ஒரு கோட்டில் புதைகிறேன் மறு கோட்டில் எழுகிறேன் இடையில் துளையில் நுழைந்து விரல்களின் அசைவில் மீளுகிறேன் நீங்கள் அந்திப்பொழுதில் கூடி மகிழ்கிறீர்கள் கைகளில் உயர்தர பழரசம், நுரைததும்பும் குவளையிலிருந்து வடிந்து நனைக்கிறது ப்ரியங்களை. மெல்ல… மெல்ல விரல்கள் அசைய ஒரு ராட்சச அலைபோல இசை புல்லாங்குழலிலிருந்து வெளியேறுகிறது. நீங்கள் ரசிப்பதில் உயர்வர்க்கம் இரவுகளின் ஒரு பகுதியில் உறங்குவதற்கு பழக்கப்பட்டவர்கள் அந்த இரவு, ஒரு சில […]

Continue Reading

கனவுகளைக் கொன்ற தேசம்

வெயில் பறவைகள் கொத்திப் போன கனவு தானியங்கள் இரவில் மீண்டும் முளைத்து விடுகின்றன இரவு முழுவதும் விழித்தே கிடக்கும் நட்சத்திர பறவைகள் கண்களை காவல் செய்கின்றன மழைக்கு முன் விதைத்த கனவுகள் இப்போது அறுவடைக்குத் தயாராகிவிட்டன ஒரு நீண்ட பயணம் பெயரறியாமல் போன ஒரு கனவை எனக்கு அறிமுகம் செய்கிறது வேர்களை அந்த நிலத்திலேயே விட்டு வந்த கனவுகள் தொட்டிச் செடியில் ஒரே ஒரு பூவினை மலர்த்திவிட்டு காத்திருக்கச் சொல்கிறது […]

Continue Reading

“விமர்சனத்திற்கு நுட்பமான விசயங்களைப் பார்க்க கண் வேண்டும்.” – சரவணன் மாணிக்கவாசகம்

சமூக ஊடகங்களின் மூலமாக இலக்கியம் சார்ந்து தீவிரமாக விமர்சனங்களையும் பகிர்வுகளையும் அளித்து சம கால தமிழ் இலக்கியத்தில் கவனித்தக்க விமர்சகராக கருதப்படுகிறவர் திரு. சரவணன் மாணிக்கவாசகம்.  இவரின் ஃபேஸ்புக் பதிவுகளில் காணப்படும் ஏராளமான தமிழ் , ஆங்கில இலக்கிய நூல்கள் குறித்தான அறிமுகங்களும் விமர்சனங்களும்  பல வாசகர்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கின்றன.  அச்சு மற்றும் இணைய இதழ்களில் வெளியாகும்  படைப்புகளை வெளிப்படையாக விமர்சிக்கும் சரவணன் மாணிக்கவாசகம் மொழிபெயர்ப்புகளிலும் ஈடுபடுகிறார்.   “கலகம்” […]

Continue Reading

நெல்சன் மண்டேலா உடனான நேர்காணல்

ஜூலை 18ம் தேதி நெல்சன் மண்டேலாவின்  பிறந்த தினம். சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது.  இதனையொட்டி கலகம் காலாண்டு இணைய இதழுக்காக கவிஞர் மதுரா மொழிபெயர்த்து அளித்த நேர்காணல் இதோ..! ஏப்ரல் 2001 ஓபரா (oprah) இதழில் வெளியான தென்னாப்பிரிக்காவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் நிறைவெறிக்கெதிரான போராட்ட வீரருமான நெல்சன் மண்டேலாவின் நேர்காணல். ஓபரா :  சென்ற முறை நாம் பேசியபோது “நான் சிறைக்கு சென்றிருக்காவிட்டால் என்னுள் ஏற்பட்டிருக்கும் […]

Continue Reading

பாதைகள்; பயணங்கள்!

‘சைனாவுல புதுசா ஒரு வியாதி பரவுதாம். வவ்வால் கறி சாப்பிட்டவங்க கிட்ட இருந்து தான் முதல்ல வந்துச்சாம்’ என்ற செய்தியைப் பார்த்துவிட்டு யாரோ கூறியபோது, “இந்த சைனாக்காரப் பசங்களுக்கு வேற வேலை இல்லை.. இப்படித் தான் வெந்ததையும் வேகாததையும் சாப்பிட்டு புதுசு புதுசா வியாதியை இழுத்து வைப்பாங்க” என்று உங்களைப் போலவே நானும் நினைத்தேன். லட்சக்கணக்கான மக்கள் இறந்து விட்டனர், பலநாடுகள் சைனாவிலிருந்து வரும் பொருட்களைத் தடை செய்துவிட்டன, சில […]

Continue Reading

சிருங்காரி என்னை நேசித்தாள்

இந்த நோயின் பெயர் டுசன் தசையழிவு என்பதாகும் (Duchenne Muscular Dystrophy) சாதாரணமாக தத்தித்தவழும் குழந்தை பன்னிரண்டு மாதங்களானதும் எழுந்து நடக்கும் பதினெட்டு மாதங்களாகியும் குழந்தை நடக்க முடியாமல் தத்தளிக்குமென்றால் தசையழிவு நோயின் முதலாவது அறிகுறி அதுவாக இருக்கக்கூடும். புத்திசாலியான தாய் நிச்சயம் இதனைக் கண்டுபிடித்து விடுவாள். குழந்தைக்கு நான்கு வயதாகும் போது நோயின் அறிகுறிகள் வெளிப்படையாகப் புலப்படலாம். படிக்கட்டுகளில் ஏறவும் பேரூந்திற்குள் ஏறவும் குழந்தை சிரமப்படும். விளையாட்டுச் செயற்பாடுகளில் […]

Continue Reading