படகில் பொறித்த அடையாளச் சின்னம்

என் வாழ்க்கையில் நான் இங்கும் அங்குமாக பலவிடங்களில் இருந்திருந்தாலும் ஹனாய் நகரத்திற்கு சில முறைதான் போக வாய்த்தது. குழந்தை பிராயத்தில் ஒரு முறையும், போர்க்காலத்தில் ஒரு தடவையும், அதன்பின்னான வருடங்களில் ஓரிருமுறையும்தான் செல்ல அமைந்தது. இதனால்தான் எனக்கு அங்கிருந்த ஆமை ஏரி, மற்றும் நீள பியன் பாலத்தை தவிர்த்து , ஹாங் கோ  ரயிலடியையும் டிராம் வண்டி தடமான தண்டவாளங்கள் பதிந்த தெருக்கள் மட்டுமே நினைவிலிருந்தது. ஆனாலும் கூட நான் […]

Continue Reading

திரௌபதி

1 பெயர்: தோபதி மெஜென், வயது இருபத்தேழு. கணவன் துல்னா மஜீ (இறந்துவிட்டான்), வசிப்பிடம் சேராகான், பங்க்ராஜார், உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்று தகவல் தெரிவித்தாலோ பிடிக்க உதவி செய்தாலோ நூறு ரூபாய் வெகுமதி… பதக்கம்பெற்ற சீருடையணிந்த இருவரிடையே நடக்கும் உரையாடல். முதல் பதக்கம்: என்னது, ஆதிவாசிக்கு தோபதி என்று பெயரா? நான் கொண்டுவந்த பெயர்ப் பட்டியலில் அது இல்லையே! பட்டியலில் இல்லாத பெயரோடு எப்படி ஒருவர் இருக்கமுடியும். இரண்டாம் […]

Continue Reading

தலிபான்களின் அதிகாரத்தில் பெண்களின் நிலை

  உலக வரைபடத்தில் இருந்து  ஒரு தேசம் அம்மக்களின் கண்ணீரில், கிழிந்து நைந்து போன நிலையில் அறியப்பட்டிருக்கிறது. கைவிடப்பட்ட அந்நாட்டு மக்களின் கதறல்கள்  கேட்காத வண்ணம் அனைவரின் காதுகளையும் ஒரு சொல் இறுக மூடி உள்ளது. அந்த சொல் தலிபான். “பெண் அரசியல்வாதிகளுக்கு வாக்களித்து ஆட்சியதிகாரத்துக்கு ஆப்கன் மக்கள் அனுப்புவார்களா?” என்று பெண் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு, தலிபான்கள் சிரிக்கின்ற காணொளி, அவர்கள் எந்த அளவுக்கு பெண்ணையும்,அவள் உரிமைகளையும் […]

Continue Reading

சாவின் தேஜா வூ

1.   இலையுதிர் காலம் முன்பே இந்த இலைகளின் நிழல்கள் சாவின் தேஜா வூ   2.   சாலையின் பள்ளம் மழைக்குப் பின் ஒரு நாய்க்கு பானம் பரிமாறுகிறது   3.   முனகும் காற்று கவனமற்று வீழும் மாமர இலைகள்   4.   தூக்கம் கலைந்த நிசி நெடுந்தூர விடியல் மின்விசிறியின் சப்தம் மட்டும்   5.   யாரும் செல்லாத பாதை இப்போது அதில் […]

Continue Reading

மியாவ்

(1) அவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கிறேன். சமீப நாட்களாக அதிகாலையிலேயே வீட்டிலிருந்து கிளம்பி விடுகிறான். வழமையான நேரத்திற்கு திரும்பி வருவதும் கிடையாது. ஏதோ ஒன்று தவறாகப் படுகிறது. இது பற்றி நேரடியாகக் கேட்டுவிட மனம் துடித்தாலும், அத்தனை சுலபமாக வாயைத் திறக்க முடிவதில்லை. சரியான தருணம் வரும் மட்டும் பொறுத்திருக்கும் படி எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். எங்களைப் போன்று ஆண்களுக்கு பிறழ் […]

Continue Reading

நீண்ட மழைக்காலம்

அங்கையற்கண்ணி வீட்டுக்குப் போவதென்று பால்வண்ணம் முடிவெடுத்தது ஒரு தற்செயல் நிகழ்வுதான். எப்படி அந்த முடிவை எடுத்தோம் என்று அவரே அவரைக் கேட்டுக் கொண்டார். சூழ்நிலை, விதி, வேறு வழியே இல்லை. ஏதாவது செய்தாக வேண்டும் என்றெல்லாம் காரணங்களைக் கற்பித்தாலும் அவர் மனதில் அங்கையற்கண்ணி இருந்தாள் என்பதுதான் உண்மை.. இக்கட்டான சூழலில் தனக்கு யார் உதவக் கூடும் என்று அவர்  யோசித்த போது, நீர் ஊரும் கிணற்றில் மேலே வரும் சருகுகள் […]

Continue Reading

கறுப்பு வெள்ளை

அனீதின் வீட்டைப் பார்க்கும்போது அமீருக்கு வியப்பாக இருந்தது. அவனது கிராமத்தில் இப்படியான வீடுகள் இல்லை. அவ்வளவு பெரிய வீட்டுக்கு அவன் இதற்குமுன் சென்றதுமில்லை. உள்ளே செல்வதற்கு அவன் கால்கள் அவனையும் மீறித் தயங்கி நின்றன. வெட்கம் போன்றதொரு உணர்வு அவன் கால்களை கட்டிப்பிடித்துக் கொண்டதைப் போல் நெளிந்தான். பெரும் பணக்காரர்களுக்கு முன்னால் எப்போதும் அவனுக்குள் ஒருவிதத் தாழ்வுணர்ச்சி உருவாகுவதை இது போன்ற சந்தர்ப்பங்களில்தான் திண்ணமாக உணர்கிறான். இப்படியான பெரிய வீடுகளுக்குள் […]

Continue Reading

பூக்களின் மொழி

“மாயா .. உனக்கு எத்தனை மொழிகள் தெரியும் ?” “மூணு ” “என்னென்ன ?” “தமிழ் ..” “ம்ம் ..” “அப்புறம் பறவைகளின் மொழி .. அதோட பூக்களின் மொழி ” என் அன்பின் வினோத் .. உனக்கு நினைவிருக்கிறதா ? என்னைப் பெண் பார்க்க வந்த அன்று நீ என்னிடம் கேட்ட கேள்வி இது. ‘உனக்கு எத்தனை மொழிகள் தெரியும் . அதற்கான என் பதிலைக் கேட்டு நீண்டதொரு […]

Continue Reading

தசரதம்

“ நம்ம மாஸ்டர் செத்துப் போனது எல்லாம் தெரியும் இல்ல, உங்களுக்கு? “  உண்மையில் பாஸ்கர் இதை எதற்கு கேட்கிறான் என்பதே எனக்குப் புரியவில்லை. அது ஐந்து வருடங்களுக்கு முன்பாகவே நடந்த ஒன்று. அந்த மரணம் அவருடைய இரண்டாவது மரணம் என்று சொல்ல வேண்டும். கனடா உத்தியோகத்தை எல்லாம் ஏறக்கட்டி விட்டு அந்நேரம் நான் ஊரில் தான் இருந்தேன். அது மட்டுமல்ல, இரவில் சாவு பற்றி கேள்விப்பட்டதும், மறுநாள் காலை […]

Continue Reading

நிலாவில் பார்த்தது!

  1 அப்பாவின் நண்பர் மகனுக்கும் நண்பர் ஆக முடியுமா?  எனக்கு அப்படி ஒருவர் ஆனார். அவர்தான் யுவசிற்பி.  பதின் பருவத்தில் எல்லோருக்கும் ஒரு மனிதர் ரோல் மாடலாக இருப்பார்.  அவரை மாதிரி நாமும் ஆக வேண்டும் என்ற பாதிப்பை ஏற்படுத்துவார்.  யுவசிற்பி என் ஆழ்மனதின் நாயக பிம்பம். அவர் உருவத்தை உங்களுக்கு மிக எளிதாக விளக்கி விடலாம். ஓஷோவின் நகலன்.  அதே தாடி. அதே வழுக்கை. அதே ஒளிமயமான […]

Continue Reading